TA/Prabhupada 0802 - கிருஷ்ண உணர்வு இயக்கம் மிகவும் சிறப்பானது, அதீரர்கள் இங்கே தீரர்களாகிறார்கள்
Lecture on SB 1.7.18 -- Vrndavana, September 15, 1976
எனவே நாம் தீரா ஆகவேண்டும். பிறகு நாம் மரணத்தை கண்டு அஞ்ச மாட்டோம். நாம் தீராஆகாதவரை ... இரண்டு வகையான மனிதர்கள் உள்ளனர் : தீரா மற்றும் அதீரா. தீரா என்றால், இடையூறுகள் ஏற்படுவதற்கான காரணம் இருந்தாலும் சஞ்சலம் அடையாமல் இருப்பது. ஒருவன் இடையூறுகளுக்கு எந்த காரணமும் இல்லாத வரைக்கும் கலங்காதவனாக இருப்பான். இப்போது, நாம் இந்த நொடியில் மரணத்தைப் பற்றி அஞ்சவில்லை. இதுபோலத் தான் ஆனால் ஏதாவது ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டால், உடனடியாக நாம் இந்தக் கட்டடத்தில் இருந்து விழுந்து விடுவோமோ என்று அஞ்சுவோம், இடையூறுக்கான காரணம் இருந்தால், நான் மிகவும் கலக்கம் அடைவோம் - சில சமயம் கூக்குரலிடுவோம் எனவே ஒருவன் இடையூறுகளுக்கான காரணம் இருக்கும் போது கூட கலங்காமல் இருந்தால் அவன் தீரா என்று அழைக்கப்படுகிறான். தீ4ரஸ் தத்ர ந முஹ்யதி. (BG 2.13) இது தான் பகவத் கீதையின் கூற்று. நாம் அதீராவிலிருந்து தீரா ஆக வேண்டும் ஆனால் இந்த கிருஷ்ண உணர்வு, அதீரரையும் கூட தீரன் ஆகும் அளவிற்கு மிகவும் அருமையானது. இதுதான் இந்த இயக்கத்தின் நன்மை. க்ரு'ஷ்ணோத்கீர்தன-கா3ன-நர்தன-பரௌ ப்ரேமாம்ரு'தாம்போ4-நிதீ4 தீ4ராதீ4ர. க்ரு'ஷ்ணோத்கீர்தன-கா3ன-நர்தன-பரௌ ப்ரேமாம்ரு'தாம்போ4-நிதீ4 தீ4ராதீ4ர-ஜன-ப்ரியௌ. இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், இருவகையான மனிதர்களான தீரர்களுக்கும் அதீரர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது. இது மிகவும் அருமையானது. தீ4ராதீ4ர-ஜன-ப்ரியௌ ப்ரிய-கரௌ நிர்மத்ஸரௌ பூஜிதௌ. இது சைதன்ய மஹாபிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆறு கோஸ்வாமி களால் வழி நடத்தப்பட்டுள்ளது. வந்தே3 ரூப-ஸநாதனௌ ரகு4-யுகௌ3 ஸ்ரீ-ஜீவ-கோ3பாலகௌ.
எனவே இந்த இயக்கம் எப்படி அதீரரும் தீரர் ஆவது என்பதைப் பற்றியது. எல்லோருமே அதீரர்கள் தான். யார்..... யார் தான் இறப்பை கண்டு அஞ்சாமல் இருக்கிறார்கள்? யார் பயப்படாமல் இருக்கிறார்கள்...? அதைப்பற்றி மறக்கும் அளவிற்கு அவர்கள் பந்தயங்களில் ஆழ்ந்து இருக்கிறார்கள் ஆனால் துன்பங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஒருவர் மரணத்தின் போது எப்படி துன்பப்படுகிறான் என்பதை நாம் பார்க்கலாம். சில மனிதர்கள் இருக்கிறார்கள்...... இப்போது இது மிகவும் சாதாரணமான விஷயமாகி விட்டது.... கோமா. ஒருவர் வாரக்கணக்கில் அழுதுகொண்டே படுக்கையில் படுத்த படுக்கையாக இருக்கிறார். மிக, மிகப் பாவிகளான அவர்களுக்கு, உயிர் பிரியாமல் இருக்கிறது. ஆக, மரணத்தின்போது மிக அதிகமான வலி இருக்கும். பிறப்பின் போதும் மிக அதிகமான வலி இருக்கும். மேலும் நீங்கள் நோய்வாய்ப்படும் போதும் வலி இருக்கிறது. மேலும் நீங்கள் முதுமையடையும் போதும் பல்வேறு வலிகள் இருக்கிறது. உடல் வலிமையாக இல்லை. பலவகைகளிலும் நாம் துன்பப்படுகிறோம், குறிப்பாக மூட்டுவலி மற்றும் அஜீரணம். மேலும் இரத்தக் கொதிப்பு, தலைவலி இப்படி பல விஷயங்கள். எனவே ஒருவர் எப்படி தீரர் ஆக வேண்டும் என்பது குறித்து பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விஷயங்கள், இடையூறுகள் நம்மை அதீர ஆக்கும் .ஆனால் நாம் தீரர் ஆக பழகிக் கொள்ள வேண்டும். இதுதான் ஆன்மீகக் கல்வி. ஒருவர் இதனை அறிந்து கொள்ள வேண்டும், மாத்ரா-ஸ்பர்ஷா2ஸ் து கௌந்தேய ஷீ2தோஷ்ண-ஸுக2-து:3க2-தா3: (ப.கீ 2.14). இந்தத் துன்பங்கள், மாத்ரா-ஸ்பர்ஷா:2, தன்-மாத்ர. புலன்களின் காரணத்தால், புலன் உணர்வால் நாம் துன்பப்படுகிறோம். மேலும் புலன்கள், பௌதிக இயற்கையினால் செய்யப்பட்டிருக்கிறது. எனவே ஒருவர் பௌதிக இயற்கைக்கு மேம்பட்டவராக ஆகினால், பிறகு அவர் தீரர் ஆகலாம். இல்லையென்றால் ஒருவன் அதீராவாக இருக்க வேண்டியதுதான். தீ4ராதீ4ர-ஜன-ப்ரியௌ ப்ரிய-கரௌ.