TA/Prabhupada 0801 - தொழில்நுட்பமானது பிராம்மனர், க்ஷத்திரியர் அல்லது வைசியரின் பணியல்ல



Lecture on SB 1.7.16 -- Vrndavana, September 14, 1976

இங்கு ஒரு பிரம்ம பந்து .... அஸ்வத்தாமன் ஒரு பிராமணராகிய துரோணாச்சாரியருக்குக்கு பிறந்தான். ஆனால், அவன் திரௌபதியின் தூங்கிக்கொண்டிருந்த ஐந்து மகன்களை கொன்ற மிகக் கொடிய செயலை செய்தான். பிராமணரை பற்றி பேச என்ன இருக்கிறது, அவன் க்ஷத்ரியனை விட மோசமான செயலை செய்தான். காரணம் ஒரு க்ஷத்ரியன் கூட, யாரையும் தூங்கும்போது கொல்லமாட்டான் ஒரு க்ஷத்ரியன் சவால் விட்டு, அவனுக்கு ஆயுதங்களை அளித்து போர் செய்வான். பிறகு இருவரில் ஒருவர் கொல்லப்படுவார். இதுதான்.... எனவே இங்கு.து. ப்3ரஹ்ம-ப3ந்தோ:4 ஆததாயின (SB 1.7.16):. ஆததாயின: எவன் ஒருவன், மாற்றான் மனைவியை கடத்துகிறானோ அவன் கொடும் பாவி என்று அழைக்கப்படுகிறான். உங்கள் வீட்டிற்கு நெருப்பு வைப்பவன், அவனும் பாவி தான். ஆயுதங்களை வைத்து உங்களை கொல்ல வருபவன், பாவி. இவ்வகையில் பாவிகளின் ஒரு பட்டியல் இருக்கிறது. இத்தகையவன் உடனடியாக கொல்லப்படலாம். யாராவது இப்படிப்பட்ட பாவியாக இருந்தால், அவனை கொல்வதில் எந்தப் பாவமும் இல்லை. யார் ஒருவன், தன் எதிரியின் வீட்டிற்கு நெருப்பு வைக்கிறானோ, விஷம் கொடுக்கிறானோ, கொடும் ஆயுதங்களால் திடீரென்று தாக்குகிறானோ, செல்வத்தைக் கொள்ளை அடிக்கிறானோ, விவசாய நிலத்தை ஆக்கிரமிக்கிறானோ, அல்லது மாற்றான் மனைவியை கடத்துகிறானோ அவன் கொடும் பாவி என்று அழைக்கப்படுகிறான். இவை அனைத்தும்....... இது வேத ஞானம். எல்லாவற்றிற்கும் விளக்கம் உண்டு.

எனவே அஸ்வத்தாமன் ஒரு கொடும்பாவி. எனவேதான் அர்ஜுனன் அவனை கொல்ல முடிவு செய்தான். அவன் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்திருந்தாலும்...... ஒரு பிராமண குடும்பத்தில் பிறப்பவன் இயல்பாகவே ஒரு பிராமணனுக்குரிய தகுதியுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவான். இதுதான் பயிற்சி. பிரம்மச்சாரி...... பொதுவாக பிராமணனின் புதல்வர்கள் மற்றும் க்ஷத்ரியர்கள், குறிப்பாக இந்த இரு சமூகத்தவர்களும் வைசியர்கள் வரையிலும், அவர்கள் பிரம்மச்சாரிகளாக பயிற்சி அளிக்கப்படுவார்கள். மேலும் சூத்திரர்கள் இதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். எல்லோருக்குமே வாய்ப்பு திறந்திருக்கிறது, ஆயினும் தாழ்ந்த குலத்தவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள்., பிராமணர்களும் சத்திரியர்களும் தவிர ..... மற்றவர்களுக்கு பிரம்மச்சாரிகளாக இருப்பதில் ஆர்வம் இருக்காது அல்லது அவர்களது பெற்றோர்களுக்கு ஆர்வம் இருக்காது. நாம் இந்த பிரம்மச்சாரி பள்ளியை அல்லது ஆசிரமத்தை திறக்க இருப்பதைப் போல ஆனால் நிறைய குழந்தைகள் சேர்வார்களா என்பது குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது. காரணம் இந்த யுகத்தில் மக்கள் சூத்திரர் ஆவதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். யாரும் பிராமணன் ஆவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. தொழில்நுட்பம். தொழில்நுட்பம் என்றால் சூத்திரன் தொழில்நுட்பம், பிராமணருக்கோ, க்ஷத்ரியருக்கோ அல்லது வைசியருக்கோ உரிய வேலை அல்ல. இல்லை. மரத்தச்சன், பொற்கொல்லன், கருமான், மற்றும் தொழிலாளி. இவையெல்லாம் தொழில்நுட்பங்கள். இவையெல்லாம் சூத்திரர்களுக்கானது. பிராமணர்கள், எப்படி உண்மையை கடைபிடிப்பது, எப்படி புலன்களை கட்டுப்படுத்துவது, எப்படி எளிமையாக வாழ்வது, எப்படி பொறுத்துக் கொள்வது - இந்த வகையில் பயிற்றுவிக்கப் படுவார்கள். க்ஷத்ரியனுக்கு எப்படி வலிமையாக, வீரமாக, இருப்பது என்பதும் ஒரு போட்டி என்று வரும்போது ஒதுங்கி விடாமல், போரிடுவதில் இருந்து ஒதுங்காமல் ராஜ்யத்தை அடைவது, ஆட்சி புரிவது, மற்றும் தானம். இவை எல்லாம் க்ஷத்ரியன் உடைய தகுதிகள். தானம் க்ஷத்ரியரால் வழங்கப்பட்டது இந்த நாட்டில் ஆட்சி செய்த முகமதியர்கள் கூட, விருந்தாவனத்தில் நிலங்களையும் கோயில்களையும் தானம் அளித்த உதாரணங்கள் உண்டு . இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அவுரங்கசீப் சில நிலத்தை அளித்தான், ஜஹாங்கீர் சில நிலங்களை அளித்தான். ஜஹாங்கீரால் கட்டப்பட்ட ஒரு கோயில் இன்னும் இருக்கிறது, யமுனையின் மறுபக்கத்தில், ஜஹாங்கீர் புரா என்னும் கிராமம் இருக்கிறது. இந்த கிராமம் கோயிலை நிர்வகிப்பதற்காக பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டது. எனவே தானம் அளிப்பது என்பது க்ஷத்ரியனுடைய வேலை, மேலும் யாகங்கள் செய்வது, தானம் அளிப்பது, ஆட்சி செய்வது, சவாலுக்கு பயந்து ஓடாமல் போரிடுவது, மிக வலிமையாக, வீரனாக இருப்பது- இவையெல்லாம் க்ஷத்ரியனுடைய தகுதிகள். மேலும் வைசியர் உடைய தகுதிகள்- விவசாயம்.க்ரு'ஷி. க்ரு'ஷி-கோ3ரக்ஷ்ய, பசுக்களைப் பாதுகாப்பது.க்ரு'ஷி-கோ3ரக்ஷ்ய-வாணிஜ்யம். மேலும், அதிகப்படியாக இருந்தால், பிறகு வாணிஜ்யம். வியாபாரம். இல்லை என்றால் வியாபாரம் என்ற கேள்விக்கே இடமில்லை. மேலும் வைசியர்கள்....... மேலும் சூத்திரர்கள் - பரிசர்யாத்மகம் (ப.கீ18.44) ஊதியத்திற்காக வேலை செய்வது. அதுதான் கருமான், பொற்கொல்லன், நெசவாளி. நீங்கள் அவர்களிடம் இருந்து சில வேலைகளை பெற்று, அவர்களின் பராமரிப்பிற்காக சில ஊதியத்தை அளிக்க வேண்டும். அதுதான் சூத்திரன். எனவே சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது, கலௌ ஷூ2த்3ர-ஸம்ப4வ:. கலியுகத்தில் கிட்டத்தட்ட அனைவருமே சூத்திரர்கள் தான். அவர்கள் ஏதாவது ஒரு சேவையை ஏற்றுக் கொள்வதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பதை நீங்கள் காணலாம். ஒருவன் பிராமண குடும்பத்தில் பிறந்திருந்தால் கூட, அவன் ஏதாவது ஒரு நல்ல வேலையை தேடிக் கொண்டிருக்கிறான். இது சூத்திரனுடைய புத்தி. இது பிராமணனின் வேலை இல்ல. பிராமணன் யாருக்கும் சேவகம் செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டான். ஷத்ரியர்களும் வைசியர்களும் கூட. சூத்திரர்கள் மட்டும்தான்.