TA/Prabhupada 0813 - இந்த பௌதிக சட்டங்களின் பிடியிலிருந்து வெளியேறுவதே உண்மையான விடுதலை



751011 - Lecture BG 18.45 - Durban

இது பிரகலாத மகாராஜாவின் விளக்கம். அவர் தனது பள்ளி நண்பர்களுக்குக் கிருஷ்ண உணர்வைப் போதிக்கிறார். ஏனென்றால் அவர் ஒரு அரக்கனின் தந்தையின் குடும்பத்தில் பிறந்தவர், ஹிரண்யகஷிபு, கிருஷ்ணா என்று சொல்லக்கூட அவர் தடுக்கப்பட்டார். அவருக்கு அரண்மனையில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே அவர் பள்ளிக்கு வந்து உணவு இடைவேளையில் அவர் தன் சிறு நண்பர்களை வைத்துக் கொண்டு, ஐந்து வயது நிரம்பியவர், இந்தப் பாகவத தர்மத்தைப் உபதேசிப்பார். அந்த நண்பர்கள் கூறுவார்கள், "ஹேய் பிரகலாத், நாங்கள் இப்போது சிறுவர்கள். எங்களுக்குப் பாகவத தர்மத்தால் என்ன பயன்? வா விளையாடலாம்", "இல்லை," அவர் கூறுவார், "இல்லை." கௌமார ஆசரேத் ப்ராஜ்ஞோ தர்மான் பாகவதான் இஹ, துர்லபம் மானுஷம் ஜன்ம (ஸ்ரீமத் பாகவதம் 7.6.1). "எனதன்பு நண்பர்களே, வயதான பின்பு கிருஷ்ண உணர்வை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணி தள்ளிப் போடாதீர்கள். இல்லை, இல்லை," துர்லபம். "நாம் எப்போது இறப்போம் என்று நமக்கே தெரியாது. அடுத்த இறப்பு நமக்கு ஏற்படும் முன்னர் இந்தக் கிருஷ்ண உணர்வுபற்றிய கல்வியை நாம் பயில வேண்டும்." அதுவே மனித வாழ்க்கையின் குறிக்கோள். இல்லையேல் நாம் அந்த வாய்ப்பை இழந்து விடுவோம்.

நாம் அனைவரும் நித்தியமாக வாழ விரும்புகிறோம். ஆனால் இயற்கை அதனை அனுமதிக்காது. அதுவே உண்மை. நாம் சுதந்திரமானவர்கள் என்று எண்ணுகிறோம். ஆனால் நாம் சுதந்திரமானவர்கள் அல்ல. நாம் இயற்கையின் கடுமையான விதிகளுக்கு உட்பட்டுத்தான் இருக்கிறோம். ஒரு இளைஞன் "நான் வயோதிகன் ஆக மாட்டேன்" என்று சொல்ல முடியாது. அவன் வயோதிகனாக ஆகத்தான் வேண்டும். அதுவே இயற்கையின் நியதி. "நான் இறக்க மாட்டேன்" என்று நீங்கள் சொன்னால், இல்லை, நீங்கள் இறந்தாக வேண்டும். எனவே இது இயற்கையின் விதி. எனவே நாம் முட்டாள்கள். நமக்கு நடைமுறையில் இயற்கையின் நியதி என்ன என்பதே தெரிவதில்லை.

ப்ரக்ருதே: க்ரியமாணானி
குணை: கர்மாணி ஸர்வஷ:
அஹங்கார-விமூடாத்மா
கர்தாஹம் இதி மன்யதே
(பகவத் கீதை 3.27).

பௌதீக இயற்க்கையின் விதிக்கு அனைத்தும் கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். இருந்தும் நாம் முட்டாள்களாகவும் அயோக்கியர்களாகவும் இருப்பதனால் நாம் சுதந்திரமானவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இது நம்முடைய தவறு. நம்முடைய தவறு வாழ்க்கையின் குறிக்கோள் என்னவென்றே நமக்குத் தெரிவதில்லை. எப்படி ப்ரக்ருதி, இயற்கை, நம்மை இட்டுச்செல்கிறது, வாழ்க்கையின் துயரங்களிலிருந்து எப்படி நம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்பது நமக்குத் தெரியவில்லை. தற்காலிக பிரச்சனைகளைச் சரி செய்வதிலேயே நாம் மும்மரமாக இருக்கின்றோம். சுதந்திரம் அல்லது அடிமைத்தனம் போல. இவ்விரண்டுமே தற்காலிக பிரச்சனைகள். உண்மையில் நாம் சுதந்திரமானவர்கள் அல்ல. இயற்கையின் நியதிக்கு அடிமைகள்தான். நாம் சுதந்திரமானவர்கள் ஆகி விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்தப் பெயரளவிலான சுதந்திரம் சில நாட்கள் மட்டுமே. அது உண்மையான சுதந்திரம் அல்ல. உண்மையான சுதந்திரம் என்பது இயற்கையின் நியதி என்னும் கட்டுக்குள் இருந்து விடுபடுவது தான்.

எனவே கிருஷ்ணர் உங்கள் முன் பிரச்சனைகளை வைக்கிறார். நம் முன் பல பிரச்சனைகள் இருக்கின்றன அவை எல்லாம் தற்காலிகமானவை. உண்மையான பிரச்சனை, கிருஷ்ணர் சொல்கிறார், ஜன்ம ம்ருத்யு வியாதி து:க-தோஷாநுதர்ஷனம் (பகவத் கீதை 13.9). உண்மையான அறிவாளி உண்மையான பிரச்சனையைத் தான் முன் வைக்க வேண்டும். அது என்ன? பிறப்பு, இறப்பு, வயோதிகம், வியாதி. இதுவே உண்மையான பிரச்சனை. மனித வாழ்க்கை பிறப்பு இறப்பு வயோதிகம் மற்றும் வியாதி என்னும் இந்த நான்கு பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காகக் தான். அது கிருஷ்ண உணர்வினால் சாத்தியம். அதனால்தான் அனைத்து பிரச்சனைகளுக்குமான இறுதி தீர்வாக இந்தக் கிருஷ்ண பக்தி இயக்கத்தினை நாம் பரிந்துரை செய்கிறோம். ஆகவே எங்களது வேண்டுகோள் என்னவென்றால், இந்தக் கிருஷ்ண பக்தி இயக்கத்தை அக்கறையுடன் எடுத்துக் கொள்ளுங்கள் என்பதுதான். எடுத்துக்கொண்டு வாழ்க்கையின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதுதான். வாழ்க்கையின் பிரச்சனைகள் கிருஷ்ணரை முழுவதுமாகப் புரிந்து கொள்வதன் மூலம் தீர்த்து வைக்கப்படும். கிருஷ்ணரை புரிந்துகொள்வது.

ஜன்ம கர்ம ச திவ்யம்
மே யோ ஜாநாதி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம
நைதி மாம் ஏதி கௌந்தேய
(பகவத் கீதை 4.9)

அதுவே இதன் தீர்வு.