TA/Prabhupada 0814 - கடவுளுக்கு கடமைகள் இல்லை - அவர் சுய திருப்தி கொண்டவர் - அவருக்கு எந்தவித அபிலாஷைகளும் இ



741012 - Lecture SB 01.08.32 - Mayapur

நிதாய்: "பிறப்பற்றவர், புண்ணியர்களான அரசர்களை மேன்மைபடுத்துவதற்காகப் பிறக்கிறார் என்று கூறுகின்றனர். மற்றும் சிலர் உங்களுடைய பிரியமான பக்தர்களில் பிரியமான யது மகாராஜனை சந்தோஷப்படுத்துவதற்காக அவர் பிறக்கிறார் என்று கூறுகின்றனர். மலய மலைகளில் சந்தனம் தோன்றுவதைப் போலவே, அவரது குடும்பத்தில் நீங்கள் தோன்றுகிறீர்கள்."

பிரபுபாதர்:

கேசித் ஆஹுர் அஜம் ஜாதம்
புண்ய-ஷ்லோகஸ்ய கீர்தயே
யதோ: ப்ரியஸ்யான்வவாயே
மலயஸ்யேவ சந்தனம்
(ஸ்ரீமத் பாகவதம் 1.8.32).

எனவே கிருஷ்ணர் செய்வதற்கென்று ஒன்றுமில்லை. அவரே முழுமுதற் கடவுள். அவர் ஏன் எதையாவது செய்ய வேண்டும்? ந தஸ்ய கார்யம் கரணம். இதுவே வேதத்தில் சொல்லப்படும் விளக்கம்: "கடவுள் செய்வதற்கென்று ஒன்றுமில்லை. அவர் தன்னில் பூரணமானவர். அவருக்கு எந்த நோக்கமும் இல்லை." நாம் இந்த நிலத்தை, அந்த நிலத்தை வாங்க நினைப்பது போல். கிருஷ்ணர் ஏன் அப்படி நினைக்கப் போகிறார்? ஏனென்றால் ஒவ்வொரு நிலமும் அவருக்குச் சொந்தமானது. அவர் வாங்குவதற்கு எதுவுமில்லை. எல்லாம் அவரிடம் இருக்கிறது. பின்பு அவர் ஏன் வருகிறார்? அது கிருஷ்ணர் தனிப்பட்ட முறையில் கூறியது போல்தான். அவர் வருவது பரித்ராணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம் (பகவத் கீதை 4.8). பக்தர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காகவும், பக்தர்களின் புகழ் பாடவும் வருகிறார். இதுவே அவரது வேலை. அதைத்தவிர வேறு வேலை அவருக்கு இல்லை. அவர் செய்வதற்கென்று ஒன்றுமில்லை. எப்படியொரு பக்தனுக்கு கிருஷ்ண சேவையைத் தவிர வேறு வேலை இல்லையோ, கிருஷ்ணரை திருப்தி படுத்துவதை தவிர, அதுபோலத் தான் பக்தர்களின் புகழ்பாடுவது தவிர கிருஷ்ணருக்கும் வேறு ஒன்றும் இல்லை. இதுவே அன்பு பரிமாற்றம். யே யதா மாம் ப்ரபத்யந்தே ([[Vanisource:BG 4.11 (1972)|பகவத் கீதை 4.11). உங்கள் வாழ்க்கையை பகவானை போற்றுவதற்காக அர்ப்பணிக்கிறீர்கள் என்றால், பகவானும் தயாராக இருக்கிறார். அவருடைய வேலை உங்களைப் போற்றுவது. அதைத் தவிர வேறு வேலை இல்லை.

அதனால்தான் இங்கே சொல்லப்படுகிறது ப்ரியஸ்ய, யதோ: ப்ரியஸ்ய. யது மன்னர் சேவையை வழங்குவதன் மூலம் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானார். ப்ரியஸ்ய. கிருஷ்ணர் பக்தர்களுக்குப் பிரியமானவர். அதுபோலப் பக்தர்களும் கிருஷ்ணருக்கு பிரியமானவர்கள். இன்னொரு ஸ்லோகம் இருக்கிறது, ஸ்வ-பாத-மூலம் பஜத: ப்ரியஸ்ய (SB 11.5.42). ஸ்வ-பாத-மூலம் பஜத: ப்ரியஸ்ய. "ஒருவர் கிருஷ்ணரது தாமரைத் திருவடிகளில் தொண்டு செய்து கொண்டிருந்தால், பகவானுக்கு மிகவும் பிரியமானவர் ஆகிறார்." ஸ்வ-பாத-மூலம் பஜத: ப்ரியஸ்ய. பஜத, கிருஷ்ணரது தாமரைத் திருவடிகளுக்கு சேவை செய்வதில் ஈடுபட்டுள்ள ஒருவர்- அவருக்கு வேற எந்த வேலையும் இல்லை- அவர் பிரியமானவர் ஆகிறார். நீங்கள் கிருஷ்ணருக்கு பிரியமானவுடன், அன்புக்குரியவரானவுடன், உங்களது அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடுகின்றன. எப்படி பெரிய செல்வந்தனுக்கு மகனாகப் பிறந்து விட்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காதோ அதுபோல. அவன் தானாகவே பாதுகாக்கப்பட்டு விடுவான். பெரும் செல்வந்தனுக்கு மகனாகி விட்டபடியால் அவனுக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்? எந்தப் பிரச்சினையும் இல்லை. அதுபோல்தான், நாம் கிருஷ்ணருக்கு அன்புக்குரியவராக ஆக வேண்டும். அப்போது நம் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.

இந்த அயோக்கியர்களுக்கு, கர்மிகளுக்கு, இது தெரிவதில்லை. தன் முயற்சியால் அவர்கள் சந்தோஷமாக இருக்க முயற்சிக்கின்றனர். அதுவே கர்மி. அவர்கள் பெரும் பாடுபடுகிறார்கள், சந்தோஷமாக இருப்பதற்காக. ஒரு பக்தனும் சந்தோஷமாக இருப்பதற்காக முயற்சிக்கிறான். அனைவரும் முயற்சிக்கின்றனர். ஸுகம் ஆத்யந்திகம் யத் தத் அதீந்த்ரிய-க்ராஹ்யம் (பகவத் கீதை 6.21). அனைவரும் சந்தோஷமாக இருக்க முயற்சிக்கின்றனர், ஏனெனில் மகிழ்ச்சியாக இருப்பதே நமகு இயல்பான நிலை. ஆனந்தமயோ 'ப்யாஸாத் (வேதாந்த-ஸூத்ர 1.1.12). அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் கர்மிகளும், ஞானிகளும், யோகிகளும், எப்படி சந்தோஷமாக இருப்பது என்று அறிவதில்லை. அவர்கள் தங்கள் முயற்சியைச் செய்து கொண்டே இருக்கின்றனர். கர்மிகள் கடுமையாக உழைக்கின்றனர், அல்லும் பகலும் உழைத்துப் பணம் சம்பாதிக்கின்றனர். "எப்படியாவது, கருப்பு பணம் வெள்ளைப் பணம் என்பதில் கவலை இல்லை. பணம் வந்தால் சரி. எனக்கு நல்ல கார் வேண்டும், வீடு வேண்டும், வங்கி கணக்கு வேண்டும்." இது கர்மி. ஞானி தன் வேலையில் களைப்புற்று, அவர் இதைப் புரிந்து கொள்ளும்போது, "இந்தக் கடின உழைப்பும் வங்கிக் கணக்கும் நம்மைச் சந்தோஷமாக வைக்காது, இதெல்லாம் பொய், இந்தச். செயல்கள் எல்லாம், நான் யார்..." ப்ரஹ்ம ஸத்யம் ஜகன் மித்யா. அவர்கள் வெறுப்புற்று பிரம்மத்தை நாடுகின்றனர். பிரம்ம சத்தியம்.