TA/Prabhupada 0819 - ஆஸ்ரம என்றால் ஆன்மிக அறுவடைக்கான சூழ்நிலை என்று பொருள்



Lecture on SB 2.1.2-5 -- Montreal, October 23, 1968

பிரபுபாதர்:

ஷ்ரோதவ்யாதீனி ராஜேந்த்ர
ந்ருணாம் ஸந்தி ஸஹஸ்ரஷ:
அபஷ்யதாம் ஆத்ம-தத்த்வம்
க்ருஹேஷு க்ருஹ-மேதினாம்
(SB 2.1.2)

அதே கருத்துதான், யார் ஒருவர் குடும்ப விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு கொள்கிறாரோ, க்ருஹேஷு க்ருஹ-மேதினாம். க்ருஹமேதீ என்றால் யார் தனது செயல்களின் இருப்பிடமாக வீட்டை அமைத்துக் கொண்டுள்ளாரோ. அவருக்குப் பெயர்தான் க்ருஹமேதீ. இரண்டு சொற்கள் உள்ளன. ஒன்று க்ருஹஸ்த மற்றொன்று க்ருஹமேதீ. இந்த இரண்டு சொற்களில் முக்கியத்துவம் என்ன? க்ருஹஸ்த என்றாள்... கிரகஸ்தன் மட்டுமல்ல. அதற்குப் பெயர் கிரகஸ்த ஆசிரமம். ஆசிரமம் என்று சொன்னாலே, அதில் ஆன்மீக தொடர்பு உள்ளது. இந்த நான்கு சமூக பிரிவுகளும் - பிரம்மச்சரிய ஆசிரமம், கிரகஸ்த ஆசிரமம், வானப்பிரஸ்த ஆசிரமம், சந்நியாச ஆசிரமம். ஆஸ்ரமம். ஆசிரமம் என்றால்... ஆசிரமம் என்றாலே உங்கள் ஊரில் கூட இது பிரபலமாகி வருகிறது. ஆன்மீக சிந்தனையை வளர்ப்பதற்கான இடமே ஆசிரமம். பொதுவாக அதனையே அது குறிக்கும். எங்கு கூட, பல யோகா ஆசிரமங்கள் இருக்கின்றன. நியூயார்க்கில் கூட நான் பல ஆசிரமங்களை பார்த்திருக்கிறேன். "நியூயார்க் யோகா ஆசிரமம்" "யோக சங்கம்," அதுபோல. ஆசிரமம் என்றாலே அது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட து. மனிதன் எப்படி வாழ்கிறான் என்பது முக்கியமில்லை.... கிரகஸ்த என்றால் குடும்பம் மனைவி குழந்தைகளுடன் வாழ்வது.

குடும்பம் மனைவியுடன் வாழ்வது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தகுதி குறைவினை ஏற்படுத்தாது. இது தகுதி குறைவாகாது ஏனெனில் ஒருவர் தாய் தந்தையர் மூலமாகத்தான் பிறப்பெடுக்க முடியும். பெரும் ஆச்சாரியர்களும் ஆன்மீக குருமார்கள் தாய் தந்தையரால் பிறந்தவர்கள்தான். எனவே தாய் தந்தை என்ற கூட்டு இல்லை என்றால் ஒரு ஆன்மா உயிர் பெறுவதற்கு வாய்ப்பில்லை. சங்கராச்சாரியார், இயேசு கிறிஸ்து, ராமானுஜாசாரியார் என்று மாபெரும் ஆன்மாக்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவர்களுக்கும் பரம்பரையாக பெரும் பெயர் இருந்துவிடவில்லை, இருப்பினும் அவர்கள் ஒரு கிரகஸ்த தாய் தந்தையரிடமிருந்தே பிறந்தனர். எனவே கிரகஸ்தன் அல்லது குடும்பஸ்தர் என்பது தகுதிக் குறைவு இல்லை. பிரம்மச்சாரிகளும் சந்நியாசிகளும் மட்டுமே ஆன்மீகத் தளத்திற்கு உயர முடியும் என்றும் மனைவி குழந்தைகளுடன் வாழ்பவர்கள் முன்னேற முடியாது என்று நினைக்க வேண்டியதில்லை. சைதன்ய மகாபிரபு தனது சாதனை சரித்திரத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்

கிபா விப்ர, கிபா ந்யாஸீ, ஷூத்ர கேனே நய
யேஇ க்ருஷ்ண-தத்த்வ-வேத்தா ஸேஇ 'குரு' ஹய
(CC Madhya 8.128)

சைதன்ய மஹாபிரபு கூறியதாவது, "ஒருவர் கிரகஸ்த சந்நியாச பிராமண, பிராமணர் அல்லாத யாராக இருந்தாலும், அதனால் எந்த வேறுபாடும் இல்லை. ஒருவர் கிருஷ்ண உணர்வுடன், கிருஷ்ண உணர்வில் உயர்ந்து இருந்தாலே போதுமானது, அவருக்கு ஆன்மீகக் குருவாகும் தகுதி வந்து விடுகிறது" யேஇ க்ருஷ்ண-தத்த்வ-வேத்தா ஸேஇ குரு ஹய (CC Madhya 8.128). தத்த்வ-வேத்தா என்றால் கிருஷ்ணரின் விஞ்ஞானத்தை உணர்ந்தவர் என்று பொருள். அப்படி என்றால் முழுமையாக கிருஷ்ண உணர்வுடன் இருத்தல். ஸேஇ குரு ஹய. செய் என்றால் அவர். குரு என்றால் "ஆன்மீகத் தலைவர்". ஒருவர் சன்னியாசியாக பிரம்மச்சாரியாகவே ஆக வேண்டும் அப்போதுதான்... என்று அவர் கூறவில்லை. எனவே இங்கு கிரகமேதி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிரகஸ்த அல்ல. கிரகஸ்த அழிக்கப்படவில்லை. ஒழுங்குமுறை கொள்கைகளின்படி மனைவி குழந்தைகளுடன் ஒருவன் வாழ்வான் ஆனால் அது தகுதி குறைபாடு இல்லை. ஆனால் கிரகமேதீ, கிரகமேதீ என்றால் உயர்ந்த கருத்துக்களோ ஆன்மீக வாழ்க்கையை பற்றிய உயரிய புரிதலோ இல்லாதது என்று பொருள். பூனைகளையும் நாய்களையும் போல தன் மனைவி மக்களுடன் வெறுமனே வாழ்பவனுக்கு கிரகமேதீ என்று பெயர். கிரகமேதீ, கிரகஸ்த என்ற இரு வார்த்தைகளுக்கும் இதுவே வேறுபாடு.