TA/Prabhupada 0826 - நமது இயக்கம் கடின உழைப்பை கிருஷ்ணருக்கான பணியாக மாற்றுகிறது
The Nectar of Devotion -- Vrndavana, November 4, 1972
ஸாஸ்திரங்கள் கூறுகிறது, "பொதுவாக, பௌதிக உலகில் மக்கள், ரஜோ குணத்தில் உள்ளனர். அதனால் அதிக உழைப்புடன் கூடிய செயல்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். துறவியான ஒருவர் வேலை செய்யவில்லை என்றால் அவர் ஆன்மீகத் தொண்டில் அல்லது தியானம் அல்லது ஜெபத்தில் ஈடுபட்டு இருப்பார். சில சமயம் இதுபோன்ற மக்கள் வாழ்க்கையில் இருந்து தப்பிக்கின்றனர் என்று தவறாக எண்ணப்படுகின்றனர். ஏனென்றால் அவர்கள் அதிகமாக கடின உழைப்பு உழைப்பதை நல்லதாக கருதுகின்றனர். கடினமாக உழைக்காவிட்டால் வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதற்கான வழி அது என்று நினைக்கின்றனர். "சமூக கடமைகள் மற்றும் இதர கடமைகளில் இருந்து அவர்கள் தப்பிக்கின்றனர் துறவு வாழ்க்கையை மேற்கொள்வதன் மூலமும் மற்றவர்களின் தயவில் வாழ்வதாலும்." பல விஷயங்கள் இருக்கின்றன. கடினமாக உழைப்பது அவர்களுக்கு பிடிக்கும்.
ஆனால் நமது கிருஷ்ண பக்தி இயக்கத்தில் அந்த கடின உழைப்பினை கிருஷ்ணருக்கு செய்யும் கடமையாக மாற்றுகின்றனர். கடினமாக உழைக்க என்னும் அந்த மனப்பான்மையை பயன்படுத்துகின்றனர். காமம் கோபம் இரண்டையும் நமது எதிரிகளாக மாயாவாத தத்துவவாதிகள் சொல்வதைப்போல, காம-குரோத-லோப-மோக-மாத்சரிய இவையே நான்கு எதிரிகள். ஆனால் நரோத்தம தாசர் சொல்கிறார், காமத்தைக் கூட கிருஷ்ணரது சேவையில் பயன்படுத்தலாம் என்று. காமம் கிருஷ்ணா காமார்ப்பனே. கிருஷ்ணருக்கு செய்யும் சேவையில் ஒருவர் ஈடுபாட்டுடன் இருப்பார் ஆனால், புலன் இன்பத்திற்காக கடுமையாக உழைக்கும் கர்மிகளின் தன்மையை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுபோலவே க்ரோத' பக்த-த்வேஷி ஜனே. க்ரோத, கோபம், நல்லதல்ல, ஆனால் கோபத்தையும் கிருஷ்ணரின் சேவைக்காக பயன்படுத்தலாம். பகவான் ராமச்சந்திரனுக்காக ஹனுமான் ராவணன் மேல் எப்படி கோபப்பட்டான் அதுபோல, கோபப்பட்டு பொன் நகரமான இலங்கைக்கே தீ வைத்தான். அங்கு அவனது கோபம் பகவான் ராமரின் சேவையில் பயன்பட்டது. தன்னுடைய சொந்த புலன் இன்பத்திற்காக அவன் தனது கோபத்தை பயன்படுத்தவில்லை. இங்கனம் அனைத்தையும் பகவானது சேவையில் பயன்படுத்தலாம், இதைத்தான் மற்றொரு இடத்தில் விளக்கினேன், ஆறு விஷயங்கள் உள்ளன, பக்தி தொண்டு, தூய பக்தி தொண்டு மட்டுமே பகவான் கிருஷ்ணரை ஈர்க்கும் ஒரே வழி. கிருஷ்ணரை ஈர்ப்பதற்கு கர்ம, ஞான யோக முறைகள் பயன்படப் போவதில்லை. கிருஷ்ணரை ஆன்மீக தோன்றினால் மட்டுமே ஈர்க்க முடியும். பக்த்யா மாம் அபிஜாநாதி (ப.கீ. 18.55). கிருஷ்ணர் தெளிவாகச் சொல்கிறார், "பக்தி தோண்டினால் மட்டுமே ஒருவர் என்னை புரிந்து கொள்ளலாம்" பக்த்யா மாம் அபிஜாநாதி. எனவே கருமிகளின் செயல்கள் கிருஷ்ண சேவையில் செலுத்தப்படும் பொழுது, கடமையாக உழைக்கும் நமது இயல்பு...
உண்மையில் பக்தி தொண்டு முக்கியமான சில கொள்கைகளை சார்ந்துள்ளது, ஷ்ரவணம் கீர்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத-ஸேவனம், அர்சனம் வந்தனம் தாஸ்யம் (ஸ்ரீ.பா. 7.5.23). ஆனால் தாஸ்யத்தில்... அனுமனைப் போல, அனுமான் தாஸ்யம் என்ற தளத்திலேயே ஈடுபட்டிருந்தார். அர்ஜுனன் சக்கியம் என்னும் தளத்தில் ஈடுபட்டிருந்தார். எனவே அவர்கள் கடுமையாக உழைத்தனர். குருக்ஷேத்திரப் போர்க்களம் உட்கார்ந்து ஆற அமர பேசிக்கொண்டு இருக்கும் இடம் அல்ல. சண்டையிடும் பொழுது, அவன் ஒரு போர் வீரனைப் போலவே சண்டையிடுகிறான். ஒரு போர் வீரனின் அனைத்து கடமைகளையும் செய்கிறான். ஆனால் அவன் சண்டையிட்டது கிருஷ்ணனுக்காக. அதுவே ஈர்ப்பு. அதுவே தூய பக்தி தொண்டு. கிருஷ்ணர் அவனுக்கு சான்றிதழும் கொடுத்தார். பக்தோ 'ஸி ப்ரியோ 'ஸி (ப.கீ. 4.3). "எனது அன்பு அர்ஜுனா நீ எனக்கு பிரிய நண்பன் மற்றும் பக்தன்." எந்த செயலாக இருந்தாலும் அது கிருஷ்ணரின் திருப்திக்காக செய்யப்படுமானால், அதுவே பக்தி தொண்டு, அதன் மூலம் கிருஷ்ணரை ஈர்க்க முடியும். கிருஷ்ணரின் கவனத்தை தூய பக்தித் தொண்டின் மூலமே ஈர்க்க முடியும், சுய நலத்தால் அல்ல. அது இருந்தாலும், அந்தக் கொள்கை அந்த ஆணை ஆன்மீக குருவின் மூலமாக ஆச்சாரிய பரம்பரையில் கிருஷ்ணர் எப்படி திருப்தி அடைவார், அப்படியே பெறப்படுகிறது.