TA/Prabhupada 0847 - ஸ்ரீமத் பாகவதத்தில் கலியுகத்தின் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது



731224 - Lecture SB 01.15.46 - Los Angeles

நேற்று கலியுகத்தைப் பற்றி கலந்தரையாடிக் கொண்டிருந்தோம். மிகவும் வீழ்ந்து போன யுகம். மக்கள் மிகவும் கீழ்த்தரமானவர்கள். எனவே, கணிப்பின்படி, எழுபத்தைந்து சதவீதம் அதர்மமே உள்ளது. மற்ற யுகங்களுடன் ஒப்பிடும்போது இருபத்தைந்து சதவீதம் சமயத்துடன் இருக்கிறார்கள். ஆனால் இந்த இருபத்தைந்து சதவீத சமய வாழ்க்கையும் குறையும். இந்த பதத்தை விளக்கும் முன், இந்த யுகத்தின் சில அறிகுறிகளை நான் உங்களுக்கு சொல்கிறேன். இது ஸ்ரீமத்-பாகவதம், பன்னிரண்டாவது காண்டம், மூன்றாம் அத்தியாயத்திலும் விளக்கப்பட்டுள்ளது. (பக்கத்தில்:) அது எங்கே? அந்த புத்தகத்தை என்னிடம் கொடுங்கள். நாங்கள் இன்னும் பதிப்பிக்கவில்லை, எனவே நான் மேற்கோளை படிக்கிறேன். அன்யோன்யதோ ராஜபிஷ் ச க்ஷயம் யாஸ்யந்தி பீடிதா: (SB 12.1.41) இரண்டாவது அத்தியாயம், பன்னிரண்டாவது காண்டம், ஸ்ரீமத்-பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது,

ததஷ் சானு-தினம் தர்ம:
ஸத்யம் ஷௌசம் க்ஷமா தயா
காலேன பலினா ராஜன்
நங்க்ஷ்யத்யாயுர் பலம் ஸ்ம்ருதி:
(SB 12.2.1)

கலியுகத்தின் இந்த விளக்கம் ஸ்ரீமத்-பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே சாஸ்திரம் எனப்படும். இந்த ஸ்ரீமத்-பாகவதம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கலியுகம் தொடங்கவிருந்தபோது எழுதப்பட்டது. ​​எதிர்காலத்தில் என்ன நடக்கும், எல்லாம் அங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சாஸ்திரம் என்றால் அதுவே, நாம் சாஸ்திரத்தை ஏற்றுக்கொள்கிறோம். த்ரி-கால-ஜ்ஞ. சாஸ்திரகார, அல்லது சாஸ்திரத்தின் தொகுப்பாளர், முக்தி பெற்ற நபராக இருக்க வேண்டும், ஆகவேஅவர் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தை விவரிக்க முடியும். ஸ்ரீமத்-பாகவதத்தில் பல விஷயங்களைக் காண்பீர்கள் எதிர்காலத்தில் நடக்கும் என்று கூறப்பட்டவை. ஸ்ரீமத்-பாகவதத்தில் புத்தரின் தோற்றத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது போல. கல்கி பகவானின் தோற்றத்தைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும், பகவான் சைதன்யரின் அவதாரத்தை பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. த்ரி-கால-ஜ்ஞ, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னவேன்பதை அவர்கள் அறிவார்கள். எனவே கலியுகத்தைப் பற்றி கலந்துரையாடுகையில், இந்த யுகத்தின் முக்கிய அறிகுறிகளை சுகதேவ கோஸ்வாமி விவரிக்கிறார். அவர் சொல்லும் முதல் அறிகுறி, ததஷ் ச அனு-தினம். இந்த கலியுகம் போகப் போக, தர்மம், மதக் கொள்கைகள்; சத்யம், உண்மைத்தன்மை; ஷௌசம், தூய்மை; க்ஷமா, மன்னிப்பு; தயா, இரக்கம்; ஆயு:, ஆயுட்காலம்; பலம், உடல் வலிமை; ஸ்ம்ருதி:, நினைவு... எத்தனை என்று எண்ணுங்கள். தர்ம:, ஸத்யம், ஷௌசம், க்ஷமா, தயா, ஆயு:, பலம், ஸ்ம்ருதி - எட்டு. இந்த விஷயங்கள் படிப்படியாக குறைந்து போகும், கிட்டத்தட்ட இல்லாமல் போகும். நான் சொன்னது போல, சத்ய-யுகத்தின் காலம் பதினெட்டு இலட்சம் ஆண்டுகளாக இருந்தது. மனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்தனர். ஒரு லட்சம் ஆண்டுகள். அடுத்த யுகம், அந்த யுகத்தின் காலம், பன்னிரண்டு இலட்சம் ஆண்டுகள், மக்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார்கள், இல்லை, பத்தாயிரம் ஆண்டுகள். பத்து மடங்கு குறைந்துவிட்டது. அடுத்த யுகம், த்வாபர-யுகம், மீண்டும் பத்து மடங்கு குறைந்தது. ஆனாலும், அவர்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார்கள், யுகத்தின் காலம் எட்டு இலட்சம் ஆண்டுகள். இப்போது, ​​அடுத்த யுகம், இந்த கலியுகத்தில், வரம்பு நூறு ஆண்டுகள். நாம் நூறு ஆண்டுகள் வரை வாழ முடியும். நாம் நூறு ஆண்டுகள் வாழ்வதில்லை, இருந்தாலும், வரம்பு நூறு ஆண்டுகள். எனவே பாருங்கள். இப்போது, ​​நூறு ஆண்டுகளில் இருந்து... இப்போது இந்தியாவில் சராசரி வயது சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள். உங்கள் நாட்டில் எழுபது ஆண்டுகள் என்று சொல்லப்படுகிறதா? எனவே அது குறைந்து வருகிறது. எவ்வளவு குறையும் என்றால், ஒரு மனிதன் இருபது முதல் முப்பது ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் வயதானவராக கருதப்படுவார், இந்த யுகமான கலியுகத்தில். ஆகவே, ஆயு:, ஆயுட்காலம் குறையும்.