TA/Prabhupada 0848 - கிருஷ்ண தத்துவத்தை அறியாத ஒருவர் குருவாக முடியாது



741227 - Lecture SB 03.26.18 - Bombay

சைதன்ய மஹாபிரபுவும் ராமானந்த ராயரும் ஆன்மீக தன்னுணர்வு பற்றி பேசிக் கொண்டிருந்தபோது... ராமானந்த ராயர் ஒரு சூத்திர குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர் கிரஹஸ்தர். மேலும் சென்னையின் ஆளுநராக இருந்தார், அரசியல்வாதியும் கூட. சைதன்ய மஹாபிரபு அவரிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்... இது சைதன்ய மஹாபிரபுவின் லீலை: மூகம் கரோதி வாசாலம் (CC Madhya 17.80), அவர் எப்படி ஒரு சூத்திர, கிருகஸ்த, அரசியல்வாதியை, தனது குருவாக ஆக்குகிறார். சைதன்ய மஹாபிரபுவின் குருவாக. யாரும் சைதன்ய மஹாபிரபுவின் குருவாக ஆக முடியாது, ஆனால் அவர் அந்த பாகத்தை ஏற்றுள்ளார். அவர் கேள்வி எழுப்ப ராமானந்த ராயர் பதிலளித்துக் கொண்டிருந்தார். எனவே அவரது நிலை எவ்வளவு உயர்ந்தது என்று கற்பனை செய்து பாருங்கள். அவர் கொஞ்சம் தயங்கினார், மேலும் மிகவும் சிக்கலான கேள்விகள் முன் வைக்கப்பட்டபோது... அவரால் பதிலளிக்க முடிந்தது. அவர் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஆனால், கொஞ்சம் தயங்கிக் கொண்டிருந்தார், "ஐயா, நீங்கள் மிக உயர்ந்த பிராமண குடும்பத்திலிருந்து வருகிறீர்கள், மேலும் மிகவும் கற்றறிந்தவரும்கூட, இப்போது நீங்கள் மனித சமுதாயத்தின் மிக உயர்ந்த நிலையான சந்நியாசத்தை ஏற்றுள்ளீர்கள்." சந்நியாசம் மிகவும் மரியாதைக்குரிய நிலை. இன்னும் இது இந்தியாவில் கௌரவிக்கப்படுகிறது. சந்நியாசி செல்லும் இடமெல்லாம், குறைந்தபட்சம் கிராமங்களிலாவது, மரியாதை கொடுக்கிறார்கள், எல்லா வகையான வசதிகளையும் தருகிறார்கள், இப்போதும். சாஸ்திரங்களின் கூற்றுபடி, ஒரு சந்நியாசிக்கு மரியாதை வழங்கப்படாவிட்டால் அல்லது முறையாக மதிக்கப்படாவிட்டால், தண்டனையாக அந்த மனிதன் குறைந்தது ஒரு நாளாவது விரதம் நோற்க வேண்டும். இதுவே வேத முறைமை. ஆனால் இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பல சந்நியாசிகள் உள்ளனர், நாம் கவலைப்படவில்லை. சைதன்ய மஹாபிரபு ஒரு போலி சந்நியாசி அல்ல. அவர் உண்மையான சந்நியாசி. மேலும் ராமானந்த ராயர் உண்மையான கிருகஸ்தர். எனவே அவருக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. அவரை ஊக்குவிக்க, சைதன்ய மஹாபிரபு உடனடியாக கூறினார், "இல்லை, இல்லை. நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? ஏன் தாழ்ந்தவராக உணர்கிறீர்கள்? நீங்கள் குரு." "​​எப்படி குருவாவது?" "யேஇ க்ருஷ்ண-தத்த்வ-வேத்தா, ஸேஇ குரு ஹய (CC Madhya 8.128)." ஏனெனில் கிருஷ்ணரை அறிந்து கொள்வது சாதாரண நிலை அல்ல. யததாம் அபி ஸித்தானாம் கஷ்சித் வேத்தி மாம் தத்த்வத: (BG 7.3). கிருஷ்ணரை அறிந்த ஒருவர் சாதாரண மனிதர் அல்ல. யததாம் அபி ஸித்தானாம் (BG 7.3). அவர் எல்லா பக்குவமடைந்தவர்களிலும் மேலானவரும் கூட. "அப்படியானால் நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? உங்களுக்கு கிருஷ்ண-தத்துவம் தெரியும்; எனவே நான் உங்களிடம் கேட்கிறேன்." எனவே இதுதான் நிலை. எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்னவென்றால் நம்மிடம் வரும் மக்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை பக்குவமடைந்தவர்களை விட மிக மிக மேலானவர்களாக ஆக்குவதாகும். அது மிகவும் எளிதானது. ஒருவர் குருவின் நிலையை வகிக்க முடியும், குரு என்றால் பக்குவமடைந்தவர்களை விட மேலானவர் என்று பொருள். யேஇ க்ருஷ்ண-தத்த்வ-வேத்தா, ஸேஇ குரு ஹய (CC Madhya 8.128) கிருஷ்ண-தத்துவத்தை அறியாதவர் குருவாக முடியாது. சாதாரண மனிதன் அல்ல. யோகிகள், கருமிகள், ஞானிகள், குருவாக முடியாது. அது அனுமதிக்கப்படவில்லை, ஏனென்றால் ஒருவர் ஞானியாக இருந்தாலும், அவர் பற்பல பிறவிகளுக்குப் பிறகுதான் கிருஷ்ணரை பற்றி கற்க வேண்டும்; ஒரு பிறப்பில் அல்ல, பல பல ஜென்மங்களில். பூரண உண்மை என்னவென்பதை அவர் தனது ஞான வழியில், ஊக முறையால் புரிந்து கொள்ளவதற்கு விடாப்பிடியாக முயன்றால், இன்னும் அவர் பற்பல பிறவிகளை பெற வேண்டியிருக்கும். பின்னர் ஒரு நாள் அவர் அதிர்ஷ்டசாலி ஆகலாம். அவர் ஒரு பக்தருடன் தொடர்பு கொண்டால், அப்போது அவர் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.

அது பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது: பஹூனாம் ஜன்மனாம் அந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே (BG 7.19). ப்ரபத்யதே யார்? கிருஷ்ணரிடம் சரணடைபவர். கிருஷ்ணரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாவிட்டால், அவர் ஏன் சரணடைய வேண்டும்? கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (BG 18.66). பெரிய பெரிய அறிஞர்கள், "இது மிகவும் அதிகம்" என்று கூறுகிறார்கள். "இது மிக அதிகம். கிருஷ்ணர் கோருகிறார், மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ. இது மிக அதிகம்." இது அதிகம் இல்லை; இதுதான் உண்மையான நிலை. அவர் உண்மையில் தனது அறிவில் முன்னேறியிருந்தால்... பஹூனாம் ஜன்மனாம் அந்தே (BG 7.19). அது ஒரு வாழ்க்கையில் அடையப்பெறக் கூடியதல்ல. அவர் பூரண உண்மையை புரிந்து கொள்ளும் அறிவில், தொடர்ந்து முயன்றால், பற்பல பிறவிகளுக்குப் பிறகு, உண்மையான அறிவில் நிலைபெறும் போது, ​​அவர் கிருஷ்ணரிடம் சரணடைகிறார். வாஸுதேவ: ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: (BG 7.19). அந்த வகையான மஹாத்மா... வெறுமனே ஆடையை மாற்றுவதன் மூலம் உருவான பல மஹாத்மாக்களைக் காணலாம், அந்த வகையான மஹாத்மா அல்ல. ஸ மஹாத்மா ஸுதுர்லப: அத்தகைய மஹாத்மாக்களைக் காண்பது மிகவும் கடினம், ஆனால் உள்ளனர். ஒருவர் அதிர்ஷ்டசாலி என்றால், அத்தகைய மஹாத்மாவை சந்திக்க முடியும், மேலும் அவரது வாழ்க்கையும் வெற்றிகரமாகிறது. ஸ மஹாத்மா ஸுதுர்லப: