TA/Prabhupada 0851 - மென்ற சக்கையை மறுபடி மறுபடி மெல்வதே பௌதிக வாழ்க்கை



750306 - Lecture SB 02.02.06 - New York

நித்தாய்: இவ்வாறாக நிலைபெற்று, தனது சர்வ வல்லமையால் ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கும் பரமாத்மாவுக்கு ஒருவர் சேவை செய்ய வேண்டும். ஏனெனில், அவரே எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள், நித்தியமானர், எல்லையற்றவர், அவரே நம் வாழ்வின் உன்னத குறிக்கோள், அவரை வழிபடுவதால் ஒருவர் கட்டுண்ட வாழ்வின் காரணத்தை முடித்துக் கொள்ளலாம்.

பிரபுபாதர்:

ஏவம் ஸ்வ-சித்தே ஸ்வத ஏவ ஸித்த
ஆத்மா ப்ரியோ' ர்தோ பகவான் அனந்த:
தம் நிர்வ்ருதோ நியதார்தோ பஜேத
ஸம்ஸார-ஹேதூபரமாஸ் 'ச யத்ர
(SB 2.2.6)

நேற்றிரவு ஒருவர் தனது பராமரிப்பு பற்றி ஏன் கவலைப்படவேண்டும் என்று கலந்துரையாடினோம் அதற்கு ஒரு செல்வந்தரிடம் கையேந்துகிறார். ஒருவர் தன் வாழ்க்கையின் நிலையை தானே அமைத்துக்கொள்ள முடியும். வாழ்க்கையின் நிலை எதுவெனில் ஆஹார-நித்ரா-பய-மைத்துனாம் (Hitopadeśa 25). ஒருவர் துறவு வாழ்வில் இருக்கையில், முதலாவதாக அவர் தனது பாலியல் வாழ்கையையும் பயத்தையும் துறக்க வேண்டும். அதுவே துறவு. இங்குள்ள பல பிரம்மச்சாரிகள், சந்நியாசிகள் போல. சந்நியாசிகள், வானப்பிரஸ்தர்கள், பிரம்மச்சாரிகள் துறவு மேற்கொள்ள வேண்டியவர்களாவர். முதல் துறவு என்னவெனில் ஒருவர் புலனின்பத்தை துறக்க வேண்டும். எனவே துறவு வாழ்வை ஏற்றவர் சுவாமி எனப்படுகிறார். சுவாமி என்றால் எஜமானர். அல்லது கோஸ்வாமி. கோ என்றால் "புலன்கள்," சுவாமி என்றால் "எஜமானர்." எவரொருவர் தன் புலன்களின் ஆளுனர் ஆனாரோ, அவரே கோஸ்வாமி /சுவாமி எனப்படுவார். இல்லையெனில், ஒருவர் தனது புலன்களின் சேவகனாக இருந்தால், அவர் எப்படி சுவாமி/கோஸ்வாமியாக முடியும்? ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் உண்டு. ஒருவர் துறவு பூண வேண்டும். இது பௌதிக வாழ்க்கை. ஜட வாழ்வு என்றால் எல்லோரும் புலனின்பத்தில் ஈடுபட்டுள்ளனர், மேலும், அதுவே நாகரீக முன்னேற்றம் எனக் கொள்ளப்படுகிறது. அதே புலனின்பம் வேறுவிதமாக, மது அருந்துவதும், மாமிசம் சாப்பிடுவதும், பாலுறவு வாழ்வும்; விடுதிக்கோ நிர்வாண கேளிக்கை விடுதிக்கோ செல்வது. எனவே அதே வழக்கம்தான். புன :புனஸ் சர்வித-சர்வனானாம்(SB 7.5.30), மறுபடியும் மென்ற சக்கையை திரும்ப மெல்லுவது போல. இதுவே பௌதிக வாழ்க்கை.

துறவு வாழ்வு என்பது புலனின்பத்தை நிறுத்துவது, குறைந்தபட்சம் கட்டுப்படுத்துவது. துறவு வாழ்வில் நிலைபெறாமல் ஆன்மீக உலகிற்குச் செல்ல முடியாது. உதாரணத்திற்கு உங்கள் கை, உங்கள் கையில் வைத்திருப்பதற்கு பொருத்தமற்ற ஒரு பொருள் கிடைத்தால், அதைவிட நல்லதொரு பொருளை பெற விரும்பினால், கையிலிருப்பதை வீசி விட்டு, நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் வைத்துக்கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை. ஆதலால், ஜட வாழ்க்கைக்கும் ஆன்மீக வாழ்க்கைக்கும் என்ன வேறுபாடு? பௌதிக வாழ்வு என்பது ஒவ்வொரு அடியிலும் முழுக்க முழுக்க பிரச்சனைகள். பதம் பதம் யத் விபதாம் (SB 10.14.58). வெறுமென ஆபத்தானது. நாம் தினந்தோரும் வசதியாக அழகாக காடிலாக் கார் அல்லது மோட்டர் காரில் பயணம் செய்கிறோம், ஆனால், நாம் ஆபத்துடனேயே பயணிக்கிறோம், அவ்வளவுதான். எக்கணத்திலும் நாம் பயணிக்கும் கார் விபத்திற்கு உள்ளாகலாம். விசேஷமாக உங்கள் நாட்டில். அதனால், நான் வீட்டிலேயே இருக்கவா? இல்லை. வீட்டிலும் பல ஆபத்துக்கள் இருக்கலாம். நாம் ஆபத்தில் இருக்கிறோம். நாம் வெறுமனே அதை முறியடிக்க முயல்கிறோம். இதுவே நாகரீக முன்னேற்றம் எனப்படுகிறது. மிருகங்கள் இயற்கையின் பாதுகாப்பில் இருக்கின்றன. ஆனால், நாம் மனிதர்கள்: எமது மேம்பட்ட உணர்வை பயன்படுத்த முயல்கிறோம். ரஷ்யா அணுகுண்டு தயாரிக்கிறது. ஆம்...அணுஆயுதம்...அமேரிக்காவும் தயாரிக்க முயல்கிறது. மேலும் பூனையும் நாயும் கூட தன் நகங்களாலும் பற்களாலும் தற்காத்துக் கொள்ள முயல்கிறது. எனவே, உண்மையான கேள்வி, தற்காப்பு. நாம் மேன்மையான வாழ்வை பெற்றதால், நாய்கள், பூனைகளை விட மேன்மையான வாழ்வை பெற்றதால், நாம் தற்காத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று பொருட்படாது. நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும். அதாவது வேறு சிறந்த விதத்தில். சிறந்த விதம் என்றில்லை, எப்படியாயினும் நாம் இறக்க நேரிடும். எப்படியோ, நாம் அதை மேன்மையான தற்காப்பு என நினைக்கிறோம்.