TA/Prabhupada 0852 - உங்கள் இதயத்தின் மையத்தில், கடவுள் இருக்கிறார்



750306 - Lecture SB 02.02.06 - New York

ஜட வாழ்க்கை நான்கு விஷயங்களால் நிரம்பி உள்ளது. எப்படி சாப்பிடுவது, எப்படி தூங்குவது, எப்படி பாலின்பம் கொள்வது மற்றும் எப்படி தற்காத்துக்கொள்வது. ஆஹார- நித்ரா-பய மைத்துனாம் ச ஸாமான்யம் எதத் பஷுபிர் நரானாம் (ஹிதோபதேஷ). ஆனால் இவையெல்லாம் நமது கவலைகளுக்குத் தீர்வு தருவதில்லை. அது நமக்குப் புரியவில்லை. பிரச்சினைகள் அங்கே உள்ளன. இந்த வளமான நாட்டைப் பார்க்க அமெரிக்கா வந்திருக்கும் இந்தியர்களாகிய நாங்கள், அவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்திருக்கிறார்களா என்று பார்த்தால் இல்லை. இல்லை, பிரச்சினைகள் உள்ளன. இந்தியாவை விட அதிகமான பிரச்சனைகள். இந்தியாவுக்கு ஒரே ஒரு பிரச்சனை இருக்கலாம், அது ... உண்மையில் இல்லை, ஆனால் இந்தியர்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்று எங்களுக்கு விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் யாரும் பட்டினி கிடப்பதை நான் பார்த்ததில்லை. எப்படியும் பிரச்சனை இருக்கிறது. ஜட வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் தான், நீங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க விரும்பினால், அதற்கு இங்கே மருந்து கொடுக்கப்பட்டுள்ளது: தம் நிர்விருத்தோ நியதார்தோ பஜேத. தம் என்றால் புருஷோத்தமரான முழுமுதற்கடவுள். பின்னர் கேள்வி எழலாம், "சுகதேவ கோஸ்வாமி, உங்களைப் பராமரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கைவிடுமாறு இப்போது நீங்கள் என்னிடம் கேட்டீர்கள். உங்கள் உணவிற்காக மரத்தின் கீழ் காத்திருக்க வேண்டும் என்று நீங்கள் பரிந்துரைத்திருக்கிறீர்கள், மேலும் அவர் உங்களுக்குச் சில பழங்களைக் கொடுப்பார்; நீங்கள் சாப்பிடலாம். அதைப் போலத் தாகம் எடுத்தால் அருகில் உள்ள நதிக்குச்சென்று எவ்வளவு நீர் வேண்டுமோ அவ்வளவு பருகிக்கொள்ளலாம்." பின்னர், இந்த வரிகளுக்கு முன், அவர் சொன்னார், "தூங்குவதற்கு, புல்லில் மிக அழகான மெத்தை உள்ளது. எனக்கு எந்தத் தலையணையும் தேவையில்லை. இப்போது உங்களுக்கு இந்த இயற்கையான தலையணை கிடைத்துள்ளது; அதுதான் நமது கரங்கள். படுத்துக்கொள்." ஆஹார நித்ர பய மைத்துனாம் ச. ஆனால் ஆன்மீக வாழ்கையில் உயர வேண்டும் என்றால் அதற்குப் புலன்களுக்குச் சேவை செய்வதை அடியுடன் விட்டுவிட வேண்டும். அதிலும் முக்கியமானது என்னவென்றால் பாலின்பம் மேற்கொள்வது. மற்றபடி, உங்கள் உணவு, தூக்கம், அபார்ட்மெண்ட் ஆகியவற்றுக்கு முழு ஏற்பாடு உள்ளது. எல்லாம் அங்கே இருக்கிறது. கோயிலும், நீங்கள் பெற்றுள்ளீர்கள். "கோவில் எங்கே? நான் கடவுளை வணங்க வேண்டும். தேவாலயம் எங்கே? கோவில் எங்கே? நான் குகையில் வாழ்ந்தால், கோவிலுக்குச் செல்வதற்கான மற்றொரு வழியை நான் கண்டுபிடிக்க வேண்டும்." ஆதலால் சுகதேவ கோஸ்வாமி சொல்கிறார் "இல்லை." ஏவம் ஸ்வ சித்தே ஸ்வத ஏவ ஸித்த. "உங்கள் இதயத்தின் மையத்தில், பகவான் இருக்கிறார். நீங்கள் எங்கும் - குகையில், காட்டில் அல்லது எங்கும் உட்கார்ந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால், உங்கள் இதயத்தில் பகவான் இருக்கிறார் என்பதை நீங்கள் கண்டுபிடிக்கலாம்," ஈஸ்வர ஸர்வ பூதானாம் ஹ்ருத்-தேஷே அர்ஜுன திஷ்டதி (பகவத் கீதை 18.61).

புருஷோத்தமரான பகவான் - அதாவது அவர் - என்று கிருஷ்ணர் கூறுகிறார். அவர் அனைவரின் இதயத்திலும் இருக்கிறார். நாம் உண்மையாக இருந்தால் ... நாம் என்றால் ஸகல ஜீவ ராசிகளும். நாமும் இந்தச் சரீரத்தில் இருக்கிறோம். அஸ்மின் தேஹே, தேஹினோ'ஸ்மின், தேஹினோ'ஸ்மின் தேஹே (பகவக் கீதை 2.13). நாம் இந்தச் சரீரம் இல்லை. நான், நீங்கள் அனைவரும் இந்தச் சரீரத்தில் குடிகொண்டுள்ளோம். கிருஷ்ணரும் இதே சரீரத்தில் குடிக்கொண்டுள்ளார். ஈஸ்வர ஸர்வ-பூதானாம்-ஹ்ருத்-தேஷே (பகவத் கீதை 18.61). அவர் இந்துக்களின் இதயத்தில் இருக்கிறார், மற்றவர்களின் இதயத்தில் இல்லை என்றெல்லாம் இல்லை. அனைவரது இதயத்திலும் இருக்கிறார். ஸர்வ-பூதானாம். அவர் பூனை, நாய், புலி மற்றும் பிற ஜீவராசிகளின் இதயத்தில் கூட இருக்கிறார். அனைவரிடமும். அவரே ஈஸ்வர. ஈஸ்வர ஸர்வ பூதானாம் ஹ்ரு-தேஷே. இவ்வரிகளை திரும்பத் திரும்ப விவாதித்துள்ளோம் - ஏனொன்றால் இது மிகவும் முக்கியமானது. இந்தத் தேகம் ஒரு இயந்திரம், மோட்டர் கார்போல. மாயயா...ப்ராமயன் ஸர்வ பூதானி யந்த்ர ரூடாணி மாயயா (பகவத் கீதை 18.61). மாயயா. மாயை மூலமாக, ஜட சக்தி, இந்த வாகனம், இயந்திரம் எனக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன்? ஏனென்றால் நான் பிரபஞ்சம் முழுவதும் அலைய விரும்பியதால், அவர்கள் சந்திர கிரகத்திற்கு செல்வது போல். எனவே அனைவருக்கும் இது கிடைத்துள்ளது. இது தத்துவ யோசனைகள் என்று அழைக்கப்படுகிறது. எல்லோரும், எல்லா மனிதர்களும், அவர் ஒரு மனிதனாக இருந்தால், அவர் கருதுகிறார். அதுவே தத்துவ மனம். அவர் கருதுகிறார், "ஓ, பல நட்சத்திரங்கள் உள்ளன. அவைகள் என்ன செய்கின்றன? அங்கு எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்? மோட்டார் கார் இருக்கிறதா? மலை, கடல் இருக்கிறதா?" இந்தக் கேள்விகள் ஒரு புத்திசாலி மனிதனுக்கு தானாகவே வரும். இதுவே தத்துவத்தின் ஆரம்பம். இயற்கை.