TA/Prabhupada 0857 - இந்தச் செயற்கையான போர்வையை அகற்றினால் தான் நாம் கிருஷ்ண உணர்வுக்கு வர முடியும்



740327 - Conversation - Bombay

பிரபுபாதர்: நான் என்னுடைய உணர்வைப் பெற்றுள்ளேன், நான் வலிகளையும் மகிழ்ச்சியையும் உணர்கிறேன், நீங்கள் வலிகளையும் மகிழ்ச்சியையும் உணர்கிறீர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த வலி மற்றும் இன்பம் அமேரிக்கர்களுடையது... இந்த வலி இந்தியர்களுடையது என்று பிரித்துப்பார்க்கிறோம். வலியும் இன்பமும் ஒன்றே. அதில் அமேரிக்கனோ, ஆப்ரிக்கனோ கிடையாது. வலியும் இன்பமும் ஒன்றே. நான் அமெரிக்க வலிகளை, அமெரிக்க மகிழ்ச்சியை உணர்கிறேன் என்ற உணர்வு எப்பொழுது நீங்குமோ, அப்பொழுது தான் உண்மையான உணர்வுக்குள் வர முடியும். ஏனென்றால் ஒருவருடைய உணர்வு அமெரிக்கனோ, ஆப்ரிக்கனோ இருக்க முடியாது. உன்னைக் கிள்ளும்பொழுது வலி உண்டாவதும், ஒரு ஆப்ரிக்கனை கிள்ளும்பொழுது உண்டாகும் வலியானதும் ஒன்றே. எனவே உணர்வு ஒன்றே. செயற்கையாக நாம் அமெரிக்க உணர்வு, ஆப்பிரிக்க உணர்வு என்று நினைக்கிறோம். உண்மையில் அது நம் நிலை அல்ல. வெறுமனே இந்தத் தவறான புரிதல் அகற்றப்பட வேண்டும். இதுவே சேதோ தர்பன மார்ஜனம் (சைதன்ய சரிதாம்ருதம் அந்திய 20.12). அது உண்மை இல்லையா?

பவ-பூதி: ஆம் ஸ்ரீல பிரபுபாதா, அது உண்மை தான்.

பிரபுபாதர்: வலிகள் மற்றும் இன்பத்தை உணரும் உணர்வு, அது அமெரிக்கனாகவோ அல்லது இந்தியனாகவோ இருக்க முடியுமா?

பவ-பூதி: இல்லை

பிரபுபாதா : அது ஒன்றே. செயற்கையாக நாம் அதை அமெரிக்க வலி அல்லது இந்திய வலி என்று நினைக்கிறோம். அது செயற்கையானது. இந்தச் செயற்கையான போர்வையை அகற்ற வேண்டும். பிறகுதான் கிருஷ்ண பக்தி உணர்வுக்கு வர முடியும். உணர்வுகளில் அமெரிக்கன், ஆப்ரிக்கன், இந்தியன் என்ற பாகுபாடு இல்லை. உணர்வுகள் ஒன்று தான் நீங்கள் பசியை உணரும்போது, ​​அமெரிக்கர்கள் வேறு விதமாகப் பசியையும் ஆப்பிரிக்கர் வேறு விதமாகவும் உணர்கிறார்களா? எனவே பசி என்பது ஒன்றுதான். இப்போது, ​​அது அமெரிக்க பசி மற்றும் இது இந்திய பசி என்று சொன்னால், அது செயற்கையானது. எனவே நீங்கள் செயற்கை தளத்திற்கு செல்லாதபோது, ​​அதுவே கிருஷ்ண உணர்வு. இதுவே நாரத பஞ்சராத்ரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸர்வோபாதி-வினிர்முக்தம்
தத்-பரத்வேன நிர்மலம்.
ஹ்ரிஷிகேன ஹ்ருஷிகேஷ-
ஸேவனம் பக்திர் உச்யதே
(சைதன்ய சரிதாம்ருதம் மத்ய 19.170).

இந்தச் செயற்கை அடையாளங்களிலிருந்து நாம் விடுபடும்போது... அமெரிக்க உணர்வு, இந்திய உணர்வு, ஆப்பிரிக்க உணர்வு, அப்படி எதுவும் இருக்காது, இது செயற்கையானது. பறவைகள் மற்றும் மிருகங்கள் கூட, அவை வலிகள் மற்றும் மகிழ்ச்சியை உணர்கின்றன. கொளுத்தும் வெப்பம் இருக்கும்போது, ​​நீங்கள் கொஞ்சம் வலியை உணர்கிறீர்கள் அதுபோல. அது அமெரிக்கனா, இந்தியனா அல்லது ஆப்பிரிக்கனா? கொளுத்தும் வெப்பம் (சிரிப்பு) ஒவ்வொருவரின் உணர்வு ... எனக்கு அமேரிக்கன் வழியில் வெயில் சுட்டெரிக்கிறது என்றால்... (ஹிந்தியில்) பிரபுபாதர்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இது சாத்தியமா? இந்திய பெண்மனி: இல்லை, இது சாத்தியம் இல்லை.

பிரபுபாதர்: இதெல்லாம் வெறுமனே செயற்கையே. மேலும் அனைத்தும் உணர்வைப் பொறுத்தது. எல்லாம் உணர்வைப் பொறுத்தது. ஆகையால், கிருஷ்ண உணர்வே உண்மையான நிலையான உணர்வு.