TA/Prabhupada 0858 - நாங்கள் பயிற்சி அளிக்கிறோம், தகாத பாலுறவு கொள்வது பாவகரமானது என்று பரிந்துரைக்கிறோம்



750521 - Conversation - Melbourne

பிரபுபாதர்: நாங்கள் பயிற்சி அளிக்கிறோம். சில நேரங்களில் மக்கள் சிரிக்கிறார்கள், "இது என்ன முட்டாள் தனம்?" என்று. அவர்கள் விமர்சிக்கிறார்கள். இந்தச் சமூகத்தின் தலைவர்கள் ஊக்குவிப்பதில்லை. நேற்று ஒரு அர்ச்சகரிடம் பேசிக் கொண்டிருந்தேன். எனவே தகாத பாலுறவு வாழ்க்கை பற்றி அவர் கூறினார் "அதில் என்ன தவறு? அது ஒரு பெரிய மகிழ்ச்சி." பாருங்கள்? நாங்கள் பயிற்சி அளிக்கிறோம், தகாத பாலுறவு கொள்வது பாவம் என்று வாதிடுகிறோம். இந்த நான்கு விஷயங்களை ஒருவர் துறந்து விட வேண்டும் என்பது எங்களது முதல் நிபந்தனை. தகாத பாலுறவு, மாமிசம் சாப்பிடுவது, மது அருந்துவது மற்றும் சூதாடுவது. இது எங்களுடைய முதல் நிபந்தனை. அதை அவர்கள் ஒப்புக்கொண்டு பின்பற்றுகிறார்கள்.

இயக்குனர்: இதைத்தான் நம் மக்கள் செய்கிறார்கள்.

பிரபுபாதர்: உம்?

இயக்குனர்: எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதைத்தான் செய்கிறார்கள்.

பிரபுபாதர்: ஆம், அவர்கள் செய்வார்கள். ஒரு அமைப்பு எல்லா வசதிகளுடன் இயங்கினால்.... இங்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். சில நாட்களில் அவர்கள் அர்ப்பணிப்புள்ள பக்தர்களாக மாறுகிறார்கள். ஒரு வழிமுறை இருக்க வேண்டும். அது தான் இது. நமது இயக்கம் வளர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது. வீழ்ச்சி அடையவில்லை. நாங்கள் இங்கே ஒரு கோவிலைத் திறந்தது போல. இதற்கு முன் இங்குக் கோயிலே இல்லை, ஆனால் இப்பொழுது அழகான கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியில் நம் இயக்கம் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறதே தவிர வீழ்ச்சி அடையவில்லை. இந்தியாவிலிருந்து தனி ஒருவனாக 1965இல் நியூயார்க் வந்தேன். ஒரு வருடத்திற்கு தங்குவதற்கு இடமில்லை, உண்ண வழியில்லை. இங்கும் அங்கும் அலைந்துக் கொண்டிருந்தேன், சில நண்பர்களின் வீட்டில் வசித்து வந்தேன். பிறகு படிப்படியாக மக்கள் வருவது முன்னேறியது. நான் நியூயார்க்கில் உள்ள ஒரு சதுர பூங்காவில் தனியாக மூன்று மணிநேரம் கீர்த்தனம் செய்தேன். அது என்ன, டாம்ப்கின்சன் சதுக்க பூங்கா? ஆம். நீங்கள் நியூயார்க்கில் இருந்தீர்களா? எனவே அதுதான் என் ஆரம்பம். பின்னர் படிப்படியாக மக்கள் வந்தனர். (ஒரு பக்தரிடம்:) நீங்கள் ஒரு க்ளப்பில் இருந்தீர்கள், பெயர் என்ன?

மதுத்விச: கலிபோர்னியா?

பிரபுபாதர்: ஆம்.

மதுத்விச: ஆம் பண்ணையில்.

பிரபுபாதர்: பண்ணையா?

மதுத்விச: அந்த மார்னிங்ஸ்டார்?

பிரபுபாதர்: ஆ, ஹ, ஹ.

மதுத்விச: ஆம். (சிரிப்பு)

பிரபுபாதர்: (சிரிக்கிறார்) அது மற்றொரு விபச்சார விடுதி.

மதுத்விச: ஹிப்பி பண்ணை. நீங்கள் அங்கு வந்தீர்கள்.

பிரபுபாதர்: நான் அங்கு இருந்தேன்... அங்குச் சென்றிருந்தேன். உரிமையாளர், அமைப்பாளர், அவர் என்னை அங்கு அழைத்துச் சென்றார். எனவே நான் நினைக்கிறேன்... நீங்கள் தீவிரமாக இருந்தால், நாம் இணைந்து ஒரு நிறுவனத்தைத் திறக்கலாம். அங்கு எப்படி முதல் தர மனிதனாக ஆவது என்று மக்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். அப்பொழுது தான் தீர்வு கிடைக்கும்.

இயக்குனர்: அப்படியென்றால் சமூகத்தை மாற்ற வேண்டும்.

பிரபுபாதர்: இல்லை, எந்த மாற்றமும் இல்லை. சமூகம் இருக்கட்டும். நாங்கள் டல்லாஸில் செய்வது போல் சில குழந்தைகளுக்கும், சில ஆண்களுக்கும் பயிற்சி அளிக்கிறோம். நாங்கள் அவர்களுக்குப் பயிற்சி அளித்தது போல. அது சாத்தியம். இது நடைமுறை உதாரணம். நீங்கள் ஒரு குகையில் இருந்ததைப் போலவே, மார்னிங்ஸ்டார்.

இயக்குனர்: உங்களுடைய பல மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் குற்றவாளிகளா?

மதுத்விச: குற்றவாளிகளா?

இயக்குனர்: ஆமாம். நீங்கள் சேருவதற்கு முன்பு சட்டத்தின் சிக்கலில் ஈடுபட்டீர்களா?

மதுத்விச: ஓ, நிறைய பக்தர்கள்.

இயக்குனர்: நீங்கள்?

மதுத்விச: ஆம்.

இயக்குனர்: நீங்கள் சில சிக்கலில் இருந்தீர்கள், இல்லையா?

மதுத்விச: ஆம்.

பக்தர்(1): எங்களிடம் ஒரு பையன் இருக்கிறான். அவன் பென்ட்ரிட்ஜ் சிறையில் ஒன்பது மாதம் இருந்திருக்கிறான். (விக்டோரியா சிறைச்சாலை, ஆஸ்ரேலியா).

பிரபுபாதர்: இது நடைமுறைக்குரியது. நாம் நிறுத்தலாம். அவர்கள் ஒரு புனிதமான நபராக மாறியது போல. எல்லோரும்... இந்தியா, அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள் "நீங்கள் எப்படி இந்த ஐரோப்பியர்களை, அமெரிக்கர்களை இப்படி ஆக்கியுள்ளீர்கள்?" அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஏனென்றால், இந்தியாவில், பிராமணர்களும் மற்றவர்களும், "இந்த மேற்கத்திய மக்கள், அவர்கள் நம்பிக்கையற்றவர்கள். அவர்கள் எந்த மேம்பட்ட தர்மவானாகவோ அல்லது ஆன்மீகவாதியாகவோ இருக்க முடியாது." என்ற எண்ணத்தில் அவர்கள் இருந்தனர். எனவே இந்தியாவில் பல கோவில்கள் நமக்குக் கிடைத்துள்ளதை அவர்கள் பார்க்கும்போது, அவர்கள் தெய்வத்தை வழிபடுகிறார்கள் மற்றும் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார்கள், கீர்த்தனம் செய்கிறார்கள், நடனமாடுகிறார்கள் என்று அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். பல சுவாமிகள் எனக்கு முன் வந்தார்கள், ஆனால் அவர்களால் மாற்ற முடியவில்லை. ஆனால் மாற்றியமைத்தது நான் அல்ல, இந்த வழிமுறைகள் அவ்வளவு நன்றாக இருக்கவே அவர்களே தன்னை மாற்றிக்கொண்டார்கள்.