TA/Prabhupada 0860 - இந்தியர்களின் எல்லாவற்றையும் கண்டனம் செய்வதே ப்ரிடிஷ் அரசாங்கத்தின் கொள்கையாக இருந

(Redirected from TA/Prabhupada 0860)


750521 - Conversation - Melbourne

இயக்குனர்: விவசாயிகளுக்கென்று தனியாக மனது என்று இல்லையா?

பிரபுபாதர்: அவர்களுக்கு மனது இருக்கிறது, ஆனால் அது தரக்குறைவானது. அவர்களது மனதானது பைத்தியகாரனை போல, அதற்கு மதிப்பு என்ன? நீங்கள் பைத்தியகாரனிடம் கருத்து கேட்கமுடியுமா? அவர்களுக்கு மனது இருக்கிறது, ஆனால் அவன் பைத்தியக்காரன். மூடா. மாயயாபஹ்ருத ஞான(ப.கீ. 7.15) அவருடைய அறிவானது நன்றாக செயல்படாது. மனதானது ஒழுங்கற்ற நிலையில் உள்ளது, அதனால் அவர்களது கருத்திற்கு எந்த மதிப்பும் இல்லை.

இயக்குனர்: அப்படியென்றால் ப்ராமணர்கள் உலகத்தை ஆள வந்துவிட்டால்?

பிரபுபாதர்: ம்..?

பக்தர்: அவர்களது பொருப்பு என்று எண்ணி ப்ராமணர்கள் உலகத்தை ஆள வந்துவிட்டால் என்று கேட்கிறார்?

பிரபுபாதர்: இல்லை, இல்லை.

இயக்குனர்: ஆனால் முதலாளிகளோ அல்லது வேறொறுவரோ...

பிரபுபாதர்: இல்லை, இல்லை. இந்த பொருப்பு அவர்களிடம் கொடுக்கபட்டது இல்லை, அது அவரது குணாதிசயம், சமா போல. அப்படியென்றால் அமைதி. இயக்குனர்: அவர்களுக்குள்ளே ஒரு குழுவை அமைத்துக் கொண்டு அவர்கள் இஷ்டப்படி ஆள ஆரம்பித்து விட்டால்...

பிரபுபாதர்: இல்லை இல்லை. அவர்கள் நம்பிக்கையானவர்கள். அது தெளிவில்லாதவர்கள் வார்த்தை. அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள்.

இயக்குனர்: அவர்கள் புத்தகத்தின்படி செல்ல வேண்டும்.

பிரபுபாதர்: நம்பிக்கையானவர்கள், அப்படியென்றால், அவனுடைய நலனுக்காக இல்லை பிறர் நலனுக்காக... இயக்குனர்: ஒரு வேளை அவன் தவறான வழியில் சென்று விட்டால்?

பிரபுபாதர்: ஆங்?

இயக்குனர்: புத்தகம் வெளிவந்தபின் உலகத்தில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது.

பிரபுபாதர்: அவர்கள் அதன் படி செயல்படவில்லை என்றாலும். இந்தியாவில் ஒரு ப்ரமணனின் குணம் இதுதான் எனலாம். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஆயிரம் வருடம் முன்பு கலாச்சாரங்கள் மறைய தொடங்கியது. ஏனெனில் இந்தியா வெளிநாட்டினரால் அடிமைப்படுத்தப்பட்டது. முகமதியர்கள், தங்கள் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தினர். அதன் பின் ப்ரிடிஷ்காரர்கள்.....எல்லோருக்கும் அவர்களுடையதை புகுத்த ஒரு ஆர்வம். பிரிட்டிஷ் ஆட்சியின் போது பிரிட்டீஷர்கள், அவர்களுடைய லார்ட் மெக்காலே தனிப்பட்ட அறிக்கை விடுத்தார் "நீங்கள் இவர்களை இந்திய இந்துவாக வைத்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் ஒருபோதும் அவர்களை ஆட்சி செய்ய முடியாது." இந்தியர்களின் எல்லாவற்றையும் கண்டனம் செய்வதே ப்ரிடிஷ் அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தது.

இயக்குனர்: ப்ரிடிஷ்காரர்கள் மது அருந்துவதை அனுமதிக்கவில்லை என்று சொன்னீர்களே.

பிரபுபாதர்: ஆங்?

இயக்குனர்: இப்பொழுது தான். நீங்கள் முன்னரே சொன்னீர்கள்?

பிரபுபாதர்: ஆம் ப்ரிடிஷர்கள் மிகவும் கவனமாக அனுமதித்தார்கள், ஏனென்றால் அவர்கள் நேரடியாக அனுமதிக்கவில்லை, அவர்களின் கலாச்சாரத்தில் மறைமுகமாக கைவைத்தார்கள். இப்பொழுது நன்றாக பயிற்சி பெற்றுள்ளனர், வெளிப்படையாக செய்கிறார்கள். ஆனால் இதற்கு பயிற்சி அளித்தது ப்ரிடிஷ்காரர்களே. சாதாரணமாக உயர் வர்கத்தில் இருப்பவர்கள் மது அருந்தவேண்டும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இயக்குனர்: ஆனால் இந்திய சமுதாயம், இந்தியர்களுடையதை தடை செய்கிறார்கள்.

பிரபுபாதர்: இந்திய சமுதாயம், அவர்களுக்கு தேனீர் எப்படி குடிக்க வேண்டும் என்று கூட தெரியாது. நம் சிறுவயதில் ப்ரிடிஷ்காரர்கள் தேயிலை தோட்டம் அமைப்பதை பார்த்திருக்கிறோம். ப்ரிடிஷ் ஆட்சிக்கு முன்னர் நாம் தேயிலை பயிரிடவே இல்லை. ப்ரிடிஷ்காரர்கள் நமது தொழிலாளிகள் விலைக் குறைவாக இருப்பதைக் கண்டு தேயிலை தொழிலை ஆரம்பித்தார்கள். ஆப்ரிக்காவில் இருப்பது போல், காபி தோட்டம், தேயிலை தோட்டம் அமைத்தார்கள். தேயிலை பயிரிட்டார்கள் விற்பனை செய்வதற்கு அமேரிக்காவிற்கு அனுப்பினார்கள். நல்ல வியாபாரம். அனுப்பியது போக மிச்சம் நிறைய மிஞ்சிவிட்டது யார் அதை வாங்குவார்கள்?. அரசாங்கம் தேயிலை குழு ஒன்றை ஆரம்பித்தது. அனைத்து தேயிலை தோட்டம் வைத்திருப்பவர்களும், அரசாங்கத்திற்கு பணம் கட்டவேண்டும் என்றார்கள். சாலை சாலையாக, தெரு தெருவாக தங்கள் வணிகத்தை பிரபலப்படுத்தினார்கள், தேனீர் தயாரிப்பது, மிகவும் நல்ல, குடிப்பதற்கு சுவையான தேநீர், விளம்பரப்படுத்தினார்கள், தேனீர் குடித்தால் உங்களுக்கு பசியே இருக்காது என்றார்கள், மேலும் உங்கள் மலேரியா பறந்து போய்விடும் என்றெல்லாம்... ஆதலால் "நல்ல தேனீர்." என்று குடிக்க ஆரம்பித்தார்கள் மக்கள். நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு சுவை வர ஆரம்பித்திருக்கிறது. இப்பொழுதெல்லாம் துப்புறவாளன் அதிகாலையில், தேனீர் கடையில் ஒரு கப் தேனீருக்காக காத்துக்கொண்டிருக்கிறான். நம் சிறு வயதில் இரும்பல் சரி செய்வதற்கு தேனீர் பருகினார்கள். அதுவும் பின்னர் தான் வந்தது. ஆனால் எப்பொழுது என்று தெரியவில்லை. தேனீர் குடிப்பது, மது அருந்துவது, புகைப்பிடிப்பது, மாமிசம் உண்ணுவது, இவை எல்லாம் தெரியாததாக இருந்தது. விபச்சாரம். விபச்சாரம் நடந்தது. அதற்காக எல்லோரும் விபச்சாரிகள் அல்ல. மிகவும் கண்டிப்பாக இருந்தனர்.

ஆகையால் இவை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ள வேண்டும் - குறைந்தபட்சம் ஒரு சில ஆண்களாவது உயர்ந்த பண்புள்ளவர்களாக வாழ்ந்துக் காட்டினால், மற்றவர்கள் அவர்களை பின்பற்றுவார்கள். பயிற்சி அளித்துக் கொண்டே இருக்க வேண்டும், நாம் இப்பொழுது செய்கிற மாதிரி. நாங்கள் மக்களை ஜபிப்பதற்கும், ஆடுவதற்கும், பிரசாதம் உண்ணுவதற்கும் அழைக்கிறோம். மெதுவாக வருகிறார்கள். இவர்கள் எல்லோரும், குடிப்பழக்கத்திற்கும், விபச்சாரத்திற்க்கும், மாமிசம் சாப்பிடுவதற்கும் அடிமையானவர்கள், அவர்கள் புனிதமான நபராக மாறுகிறார்கள். இதுவே நடைமுறை. அவர்களுடைய முந்தைய வாழ்கையையும் இப்போது வாழும் வாழ்க்கையும் நீங்களே பார்க்கலாம்.

இயக்குனர்: ஆனால் மருத்துவர் சொல்வதை எப்படி மீற முடியும், மாமிசம் நம் உடம்பிற்கு புரத சத்தை கொடுக்கிறது அல்லவா?

பிரபுபாதர்: அது முட்டாள் தனம். அவர்கள் கடந்த பத்து வருடமாக மாமிசம் சாப்பிடுவது இல்லை. அவர்கள் உடல் நலம் குன்றி பார்த்திருகிறீர்களா? மாறாக மக்கள் அவர்களுக்கு "இப்படி ஒரு ப்ரகாசமான முகம்." என்று வர்ணிக்கிறார்கள். ஒரு முறை லாஸ் ஏஞ்சலஸிலிருந்து ஹவாய் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியில், பாஸ்டனில்... சாதாரணமாக உடை அணிந்த ஒருவர், ஒரு மதகுரு என்னிடம் கேட்டார், "சுவாமிஜி, உங்கள் மாணவர்கள் எப்படி மிகவும் பிரகாசமாக இருக்கிறார்கள்?" சில சமயங்களில் "பிரகாசமான முகங்கள்." என்று விளம்பரப்படுத்தப்படுகிறோம். போஸ்டன் அல்லது எங்காவது பெண்கள் கேட்கிறார்கள், "நீங்கள் அமெரிக்கர்களா?" என்று.