TA/Prabhupada 0861 - மெல்போர்ன் நகரத்தின் அனைத்து பசிக்கும் ஆண்களே, இங்கு வாருங்கள், நீங்கள் உங்கள் வயிர் ந



750521 - Conversation - Melbourne

இயக்குனர்: இந்த இடத்தில் யாரோ உடைத்துக் கொண்டு வந்தால் நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள்?

அமோஹா: அவர் கூறுகிறார், "யாரோ ஒருவர் உடைத்துக்கொண்டு, அதாவது, அந்த வீட்டை கொள்ளையடிப்பதை நாம் எப்படி எதிர் கொள்வோம்?"

பிரபுபாதர்: திருடுவதற்கு?

அமோஹா: ஒரு திருடன். ஒரு திருடன் வந்தால் நாம் என்ன செய்வோம்? வேறுவிதமாக கூறினால், நாம் அவனுடன் சண்டையிடுவோமா? பிரபுபாதர்: ஒரு திருடன் வந்தால் நாம் அவனை தண்டிப்போம்.

இயக்குனர்: நீங்கள் வன்முறை காண்பிக்க வேண்டுமா?

பிரபுபாதர்: ஏன் இல்லை? ஒரு திருடன் தண்டிக்கப்பட வேண்டும்.

இயக்குனர்: நீங்களே தண்டிக்கலாமா? நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அவனைத் தாக்கத் தொடங்கலாமா?

பிரபுபாதர்: இல்லை, நம்மையோ, பிறரையோ அல்ல, ஆனால் ஒரு திருடனானவன் தண்டிக்கபட வேண்டும். ஒரு திருடனானவன் தண்டிக்கபட வேண்டும். நாமோ, பிறரோ அது கணக்கில் வராது. திருடன் திருடன்தான். அவன் தண்டிக்கப்பட வேண்டியவன்.

இயக்குனர்: அவன் பசியின் காரணமாக திருட வந்திருந்தால்?

பிரபுபாதர்: யார் உடைத்தார்?

அமோஹா: அவர் கூறுகிறார் ஒரு வேளை அவன் பசியின் காரணமாக திருட வந்திருந்தால்? அவனுக்கு உணவு வேண்டும் என்பதற்காக அவன் வீட்டினுள் திருட வந்திருந்தால்?

பிரபுபாதர்: நாங்கள் அனைவரையும் "வாருங்கள் வந்து உணவு உண்ணுங்கள்" என்று கூறுகிறோம், அவன் மட்டும் ஏன் பசியுடன் அவதிப்படவேண்டும்? நாங்கள் எல்லோரையும் அழைக்கிறோம், "இங்கே வாருங்கள், சாப்பிடுங்கள், ஆனால் கட்டணம் இல்லை." கட்டணம் வசூலிப்பது கிடையாது. அதனால் அவன் ஏன் பசியுடன் இருக்கவேண்டும்? நாம் நமது திட்டத்தை அதிகரிக்க வேண்டும். மெல்போர்ன் நகரத்தின் அனைத்து பசிக்கும் ஆண்களே, இங்கு வாருங்கள், நீங்கள் உங்கள் வயிர் நிரம்ப உணவு எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் அனைவரையும் அழைக்கிறோம், "வாருங்கள்," ஏன் பசியுடன் இருக்க வேண்டும்?

இயக்குனர்: அவன் ஒரு வேளை குடி பழக்கத்திற்கு ஆளானவராக இருந்தால், அவனுக்கு பசித்தால்.

பக்தன்: எங்களிடம் ஒரிரண்டு குடி பழக்கத்திற்கு ஆளானவர்கள் வருகிறார்கள், அவர்களுக்கு தினமும் இரவு சாப்பாடு அளிக்கிறோம்.

இயக்குனர்: அப்படியா?

பக்தன்: ஆம்

இயக்குனர்: கோர்டன் ஹவுஸ் மாதிரி.

பக்தன்: ஆம். அவர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு ஞாயிரும் விருந்து அளிக்கிறோம். அவர்கள் வருகிறார்கள் நாங்கள் உணவு வழங்குகிறோம்.

பிரபுபாதர்: இது நடைமுறையில் வருவதற்கு சில சமயம் எடுத்துக்கொள்ளும். இல்லையேல், இந்த சமூக சீர்ந்திருத்தம் எல்லோருக்கும் பொருந்தும்.

இயக்குனர்: ஆனால் ஒரு நாளைக்கு இவ்வளவு மக்களுக்கு தான் உணவு அளிக்க முடியும் என்ற வரையரை உள்ளதா?

பிரபுபாதர்: ம்?

அமோஹா: நமக்கே வரையரை இருக்கும் பொழுது எப்படி நம்மால் மக்களுக்கு உணவு அளிக்கமுடியும்.

பிரபுபாதர்: அரசாங்கம் எங்களுக்கு உதவ முன் வந்தால் நாங்கள் இன்னும் பல மக்களுக்கு உணவளிக்க முடியும்.

இயக்குனர்: நீங்கள் அநாதைகளாக இருப்பவர்களுக்கு ஆதரவு கொடுக்கலாம், இங்கே வந்து அவர்கள் இலவசமாக உண்ணலாம்.

பிரபுபாதர்: ஓ ஆமாம், ஓ ஆமாம். அனைவரும், நாங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறோம். வாருங்கள் ப்ரசாதம் உட்கொள்ளுங்கள் என்று.

இயக்குனர்: அரசு உங்களை பயன் படுத்திக் கொள்ளளாமா...

பிரபுபாதர்: இல்லை, அரசாங்கம் எங்களை பயன் படுத்திக்கொள்ள முடியாது. ஆனால் நாங்கள் அரசாங்கத்தைப் பயன் படுத்திக் கொள்ளாம். அரசு எங்களை ஆணையிட முடியாது. அது ப்ரயோஜனப்படாது.

இயக்குனர்: ஒரு நிமிடம் ஒரு நிமிடம்... நாம் கவனித்துக் கொள்ள நிறைய ஆனாதையானவர்கள் இருக்கிறார்கள், உங்களின் மதப்படி மக்களுக்கு நீங்கள் உதவ வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இந்த சேவைகளை சலுகைகளாக வழங்க அரசு உங்களை அனுமதித்தால்.

பிரபுபாதர்: அது நாங்கள் செய்யலாம்.

இயக்குனர்: செய்யலாம். அவர்களுக்கு எந்த விதமான முரண்பாடு இல்லை என்றால்...

பிரபுபாதர்: இல்லை. எங்களது கொள்கை இதுதான்...

இயக்குனர்: பல தேவாலயங்கள் கூட குழந்தைகளை எடுத்து வளர்க்கிறார்கள்....

பிரபுபாதர்: ஒரு நாள் நீங்களும் காண முடியும். உங்களால் விடியக்காலையில் வந்து ஒரு நாள் தங்க முடிந்தால், நாங்கள் செய்வதைப் பாருங்கள், நன்றாக செய்கிறோம் என்று நீங்கள் நினைத்தால் எங்களுக்கு உதவ முன் வாருங்கள்.

இயக்குனர்: நான் ஒரு தனி நபராக வரவில்லை. என் துறையின் பிரதிநிதியாக வந்துள்ளேன்.

பிரபுபாதர்: அது என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்...

இயக்குனர்: நீங்கள் எனது நம்பிக்கையின் பாத்திரமாக இருக்கிறீர்களா... இந்த சமூகம் நம்ப வேண்டும்...நாங்கள் மிகவும் ஏழ்மையில் இருப்பவர்களுக்கு உதவுகிறோம் என்று சொல்ல முடியும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்கிறேன், பிறகு ஒருவேளை ஏதாவது ஒன்று செய்ய முடியும் என்று நினைக்கிறேன். அல்லது மந்திரியிடம் என்ன கூறமுடியுமோ, எனக்குத் தெரியாது, அதன் படி கூறிவிட்டு என் மற்ற கடமைகளுக்கு செல்கிறேன்.

பிரபுபாதர்: அவர்களால் ஒரு குறிப்பிட்ட பங்கு இவர்களை பார்த்துக் கொள்வதற்கு அளிக்கலாம். இன்னும் நிறைய ஜனங்களை அழைக்க முடியும். எங்களது தங்கும் வசதிகளையும் பெருக்க முடியும். இப்பொழுதும் செய்கிறோம். ஆனால் எங்களுக்கு வியாபாரமும் இல்லை, வரவும் இல்லை. நாங்கள் புத்தகங்கள் விற்று தான் பணம் சம்பாதிக்கிறோம். அதனால் வரவு மிகவும் குறைவு. ஆனாலும், நாம் எல்லோரையும் அழைக்கிறோம், வாருங்கள் என்று. அரசாங்கம் எங்களுக்கு கை கொடுத்தால், எங்களது திட்டத்தை அதிகரிக்க முடியும்.

இயக்குனர்: ஆம் (ஆடியோ டேப் க்ராஸ்ஸ்டாக்) நிச்சயமாக, அது ஒரு அரசியல் முடிவு. நான் சொல்ல மட்டுமே முடியும் ...

பிரபுபாதர்: அது அரசியலுக்கு அப்பாற்பட்டது.

இயக்குனர்: என்ன சொல்கிறீர்கள்?

பிரபுபாதர்: ஆம் அரசியலுக்கு அப்பாற்பட்டது.

இயக்குனர்: அது உங்களது கண்ணோட்டம், ஆனால் எங்களது துறை அரசியல் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது.

பிரபுபாதர்: ஒரு துறை என்றால் அது வேறு மாதிரியாகவும் உள்ளதா...

இயக்குனர்: ஆமாம், அது பொது மக்களின் ஒரு கருவியாகும். எங்கள் சமுதாயத்தில் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

பிரபுபாதர்: ஏனென்றால் அவர்களுக் என்று ஒரு துறை உள்ளது, உங்களது போல... உங்கள் துறை என்ன?

பக்தன்: சமூக நலன்.

பிரபுபாதர்: ஆம் சமூக நலன். இங்கே பார்த்தால் அவர்கள் உதவ முன் வரலாமே? ஏன் அவர்கள் அரசியலை கொண்டு வருகிறார்கள்? உண்மையில் சமூக நலன் இங்கே இருந்தால், ஏன் அவர்கள் அதை ஆதரிக்கக்கூடாது?

இயக்குனர்: ஆம் நீங்கள் கூறுவது சரி. ஆனால் நமது சமுதாயத்தில், சில கொள்கைகளை செயல்படுத்த மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார், அவர் விரும்புவதில்லை, ஆனால் மக்களுக்கு வாக்களித்தார்கள். அவர்கள் இதை ஆதரிக்க வரி கட்டுகிறார்கள்.

பிரபுபாதர்: உங்கள் கொள்கை சமூக சீர்திருத்தம் என்றால்...

இயக்குனர்: சமூக சீர்திருத்தம் நம் கொள்கை அல்ல.

பிரபுபாதர்: பின்னர், சமூக நலன்.