TA/Prabhupada 0862 - நீங்கள் சமுதாயத்தை மாற்றாவிட்டால், எப்படி சமூக நலன் எதிற்பார்க்க முடியும்



750521 - Conversation - Melbourne

இயக்குனர்: கஷ்டத்தில் இருப்பவர்களை கவனித்துக் கொள்வதே எங்கள் கொள்கை ஆகும்.

பிரபுபாதர்: இப்பொழுது எல்லோரும் சிக்கலில் உள்ளார்கள்.

இயக்குனர்: என்ன சொல்கிறீர்கள்?

பிரபுபாதர்: இந்த காலத்தில் மந்திரிகளுமே சிக்கலில் உள்ளார்கள்.

இயக்குனர்: ஆம், அது எங்களது தொழில் அல்ல. எல்லோரும் கஷ்டத்தில் உள்ளார்கள்.(சிரிப்பு).

பிரபுபாதர்: "மருத்துவர்களே நீங்களே உங்கள் வியாதிகளை குணப்படுத்திக் கொள்ளுங்கள்." பாருங்கள்... அவர்களுமே குடிப்பழக்கத்திற்கும், தகாத உறவுகளிளும், மாமிசம் உண்பவர்களாகவும், சூதாடுபவர்களாகவும் தானே இருக்கிறார்கள். அவர்கள் திருத்தப்பட வேண்டும்.

இயக்குனர்: ஆனால் நீங்கள் எதுவும் செய்ய முடியாது. சமுதாயம்... நீங்கள் சீர்த்திருத்த முன் வந்தால் அது நமக்கு கற்றுக் கொடுப்பது வேறு.

பிரபுபாதர்: இல்லை, இல்லை. இந்த சமுதாயத்தை மாற்றாவிட்டால், நீங்கள் எப்படி சமூக நலன் எதிற்பார்க்க முடியும். நீங்கள் அதை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால், அப்புறம் சமூகநலன் என்ற கேள்வி எங்கே?

இயக்குனர்: இந்த வார்த்தைக்கு ஒரு வித்தியாசமான விளக்கத்தை கொடுத்துப் பாருங்கள்.

பிரபுபாதர்: விளக்கம்? இல்லை....

இயக்குனர்: அவருக்கு நான் பேசுவது புரிகிறதா?

பிரபுபாதர்: அடிப்படையாக, ஒருவர் மிகவும் உயர்ந்த மனிதனாக வாழ்ந்துக் காட்ட வேண்டும். அது தான் வேண்டியது.

இயக்குனர்: அது மிகவும் கடினம் அதனால் தான். நீங்களே உங்களுக்காக உழைக்க வேண்டும், நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். மற்றவர்களின் கவனத்தை ஈர்க வேண்டும்...

பிரபுபாதர்: இல்லை, இல்லை. எங்களது சொந்த திட்டம், வோக்ஸ் பாபுலி அல்ல. எங்களிடம் ஒரு குறை கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.

இயக்குனர்: என்ன?

பிரபுபாதர்: எங்களிடும் தவறு இருந்தால் நீங்கள் தாராளமாக கூறலாம்.

இயக்குனர்: நான் எந்த தவறையும் பார்க்கவில்லை.

பிரபுபாதர்: நீங்கள் மறுக்க முடியாது. ஆனால் எல்லாம் நன்றாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்? நீங்கள் நடுநிலையில் இருந்தால் தான் புரியும்.

இயக்குனர்: ஆம் நான் வேறு சூழ்நிலையிலிருந்து வருவதால் நடு நிலையிலிருந்து தான் பார்க்க முடியும்.

பிரபுபாதர்: ஆம். எங்களது....

இயக்குனர்: நீங்கள் உங்கள் வாழ்க்கையையே நடு நிலைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்.

பிரபுபாதர்: இல்லை நாங்கள் நடு நிலைப்படுத்த வில்லை. நாங்கள் அனுமதிக்கிறோம். நீங்கள் முதல்தரமான மனிதராக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் எந்த ஒரு பாவப்பட்ட செயலையும் செய்யக் கூடாது. இது தான் எங்கள் பிரச்சாரம்.

இயக்குனர்: ஆனால் நான், பொதுநல ஊழியராக, சமுதாயத்தை மாற்றுவதற்காக நான் இங்கு வர வில்லை.

பிரபுபாதர்: நாங்களும் பொதுமக்கள். நாங்கள் பொது மக்களுக்கு சொந்தம். நீங்கள் எங்கள் சேவகராக வேண்டும்.

இயக்குனர்: ஆம், என்ன?

பிரபுபாதர்: நாங்கள் பொது, பொது மக்களின் உறுப்பினர்கள். எப்படி பொது மக்களுக்கு நாம் சேவை செய்கிறோம் அதேபோல் இங்கேயும் சேவகராக மாறி விட வேண்டும்.

இயக்குனர்: ஒரு பொது ஊழியர் என்றால், எங்களது தத்துவப்படி, ஒருவன் பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சருக்கு சேவை புரிகிறார் என்பதாகும், இப்படி அவன் பொது சேவை செய்வான். பொதுமக்கள் என்ன தீர்மானிக்கிறார்களோ அதன்படி நடப்பார்.

பிரபுபாதர்: எனவே பொதுமக்கள் இவ்வாறு சீர்ந்திருத்தம் செய்யப் படுகிறார்கள்.

இயக்குனர்: ஆம், அதைத்தான் சொல்ல வந்தேன்.

பிரபுபாதர்: அவர்கள் ஒருவரைத் தேர்ந்தெடுப்பார்கள் ...

இயக்குனர்: நீங்கள் மக்களை சீர்திருத்தும்போது, ​​வேறு விதமாகச் செயல்பட அவர்கள் உங்களைத் தூண்டுவார்கள்.

பிரபுபாதர்: ஆம். எனவே, பொதுமக்கள் ஒரு ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கிறார்கள், நிக்சன், அவர்கள் குழம்பி போய் அவரையே பதவியிலிருந்து கீழே இறக்கி விடுவார்கள். இது நடந்துக் கொண்டு இருக்கிறது.

இயக்குனர்: ஆனால் அவ்வாறு தான் சமுதாயம் வேலை செய்கிறது. சமுதாயம் மாற வேண்டும் என்றால் நாம் மாற வேண்டும். எதை சொல்கிறார்களோ அதை செய்கிறேன். இல்லையென்றால் என் வேலையை நான் இழக்க நேரிடும்.

பிரபுபாதர்: இல்லை, நீ சமூக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றால், அதற்கு நிலையான சூத்திரத்தை பயன்படுத்த வேண்டும். நீங்கள் உங்கள் சொந்த வழியை உருவாக்கினால், அது வெற்றி அடையாது.

இயக்குனர்: நானும் ஒத்துக் கொள்கிறேன் எல்லோரும் க்ருஷ்ணராக மாறிவிட்டால்...

பிரபுபாதர்: இல்லை எல்லோரும் இல்லை. அப்படி நாங்கள்....

இயக்குனர்: அப்பொழுது நாங்கள்... சமூக நலன் என்பதற்கு வேறு அர்த்தமும் உள்ளது.

பிரபுபாதர்: இப்போது, ​​நாம் இங்கு முன்மொழியப் போவதுபோல். நான் முன்மொழியவில்லை - கிருஷ்ணர் கூறுகிறார் - ஒருவர் அமைதியாக இருக்க வேண்டும். எனவே அமைதியாக இருப்பது எப்படி? ஒருவரது மனதில் எப்போதும் நிதானமின்மை இருந்தால், அவர் எவ்வாறு அமைதியாக இருக்க முடியும்?

இயக்குனர்: நீங்கள் சொல்வது சரிதான்.

பிரபுபாதர்: அதுவே வெற்றியின் இரகசியம். நீங்கள் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள், ஆனால் அவரை அமைதியாக இருக்கவைப்பது எப்படி என்று உங்களுக்கு தெரியவில்லை. அதனால் அதை கடைப்பிடிக்க வேண்டும்...

இயக்குனர்: ஆம், உங்களிடம் போட்டிகள் நிறைந்த சமூகம் உள்ளது.

பிரபுபாதர்: ஹரே க்ருஷ்ணா ஜபியுங்கள், வயிறு நிரம்ப இங்கேயே உண்ணுங்கள் என்கிறோம், இங்கே வசதியாக இருக்கவும் செய்யலாம் அமைதி நிச்சயம். யார் வேண்டுமானாலும் ஏன் ஒரு மன நோயாளி கூட, அவன் எங்களது மூன்று கோட்பாடுகளுக்கு உட்பட்டவனாக இருத்தல் வேண்டும். ஹரே க்ருஷ்ணா என்று ஜபிக்க வேண்டும், நாங்கள் கொடுக்கும் அருமையான ப்ரஸாதத்தை உட்கொள்ளவேண்டும், சமாதானமாக வாழ, அவர் அமைதியாக இருப்பார்.