TA/Prabhupada 0863 - நீங்கள் மாமிசம் சாப்பிடலாம், ஆனால் உங்களது பெற்றோர்களையே கொன்று சாப்பிட முடியுமா



750521 - Conversation - Melbourne

இயக்குனர்: இன்னும் சில சதவிகிதம் மக்கள் மாறவில்லையே அதற்கு உங்களது பதில் என்ன, மிகவும் சில மக்கள், தத்துவத்தை ஏற்கிறார்கள்...

பிரபுபாதர்: இல்லை, மிக சிறிய சதவிகிதம், மாதிரி... வானத்தில் நிறைய நக்ஷ்த்திரங்கள் உண்டு, ஆனால் நிலவு ஒன்று தான். சதவிகிதம் என்று பார்த்தால் நிலவு ஒன்றுமே இல்லை. நக்ஷ்த்திரங்கள் சதவிகிதம் பார்த்தால் நிலவு ஒன்றுமே இல்லை தான். ஆனால் அனைத்து நக்ஷ்த்திரங்களையும் விட நிலவு மிகவும் முக்கியமானது. (சிரிப்பு). சதவிகிதம் என்று பார்த்தால், சதவிகிதம் வாக்கு ரொம்பவே குறைவு. அது நிலவு என்பதால், அது இந்த எல்லா நக்ஷ்த்திரங்களை விடவும் முக்கியமானது. இது தான் உதாரணம். சதவிகிதம் எடுத்து என்ன ப்ரயோஜனம் நிலவு இருக்கும் போது? ஒரே ஒரு நிலவு இருப்பதே போதுமானது. சதவிகிதம் என்பது கேள்வி இல்லை. ஒரு சிறந்த மனிதர். எப்படி கிறிஸ்தவர்களுக்கு ஒரே ஓரு இயேசு கிறிஸ்துவோ அவ்வாறு.

இயக்குனர்: நீங்கள் மாட்ஸேடுங் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

பிரபுபாதர்: ம் யார் அவர்?

அமோஹா: நீங்கள் மாட்ஸேடுங் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கிறார்?

இயக்குனர்: சீனாவில் அவர்தான் உயர்ந்த மனிதர்.

அமோஹா: அவர் ஒரு கம்யூனிஸ்ட்.

பிரபுபாதர்: அவர் உயர்ந்து இருந்தது பரவாயில்லை.

இயக்குனர்: சீனாவில் அவர்...

பிரபுபாதர்: உயர்ந்தவர், கம்யூனிஸ்ட் யோசனை, எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம், நல்ல சிந்தனை. ஆனால் அவர்களுக்கு எல்லோரையும்.... எவ்வாறு நாட்டு மக்களை பார்த்துக்கொள்கிறார்களோ, ஆனால் அப்பாவி விலங்குகளை மிருகவதை மையங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஏனென்றால் கடவுள் பக்தி இல்லை, அவர்களுக்கு விலங்கினமும் உயிரினம், என்பது தெரியவில்லை. அதனால் அவர்களின் நா ருசிக்காக விலங்குகளின் கழுத்து அறுபடுகிறாது. அது ஒரு குறை. பண்டித:சம தர்ஷின:(ப.கீ 5.18). எவன் ஒருவன் நன்றாக படித்திருக்கிறானோ, அவன் எல்லோரையும் சமமாகவே பார்க்கிறான். படித்துவிட்டு. "என் தம்பியை பார்த்துக்கொள்கிறேன் ஆனால் உன்னை கொன்று விடுகிறேன்" என்றால் அது சரியல்ல. இது நடந்துக்கொண்டு இருக்கிறது. தேசிய வாதம் என்கிறார்கள். தேசம் என்றால் அந்த பூமியில் பிறந்த எல்லா ஜீவராசிகளும் அடக்கம். ஆனால் விலங்குகள், இந்த அப்பிராணிகள் பேச முடியாததால், அவைகளை மிருகவதை மையங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் உயர்ந்த கொள்கை உள்ளவர்களாக இருந்திருந்தால், அதை தடுத்திருக்கலாம். "ஓ, இதை ஏன் செய்கிறீர்கள்? நீங்களும் வாழுங்கள் அவற்றையும் வாழ விடுங்கள் என்றிருக்கலாம். வெறும் தானியங்களை வளர்த்து, நீங்களும் உண்டு, உயிரினங்களுக்கும் கொடுக்கலாமல்லவா. எதற்காக விலங்குகளை மாமிசம் ஆக்குகிறீர்கள்?" பகவத்கீதையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர்: ஆனால் சில சமயம் குளிர்காலம் நீண்ட நாள் நீடிப்பதால், மக்கள் விலங்குகளைக் கொன்று உண்ண ஆரம்பித்தார்கள்.

பிரபுபாதர்: நீங்கள் இதை... நான் இந்தியவிற்காகவோ அல்லது ஐரோப்பியர்களுக்காகவோ பேசவில்லை. நான் பூரா மக்கள் சமுதாயத்தைப் பற்றி பேசுகிறேன். புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்கள்.

இயக்குனர்: மக்கள் குளிர்காலத்தில் எதுவுமே கிடைக்காததுனால் மாமிசம் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

பிரபுபாதர்: இல்லை, நீங்கள் மாமிசம் சாப்பிடலாம், ஆனால் உங்களது பெற்றோர்களையே கொன்று சாப்பிட கூடாது. அது மனித நேயம். நீங்கள் பசுவிடமிருந்து பால் குடிக்கிறீர்கள், அதனால் பசு உங்களுக்கு அம்மாவைப் போன்றது. ஆஸ்திரேலியாவில், பால் குடிக்கிறீர்கள், அவ்வளவு பால், வெண்ணை மற்றும் எல்லாவற்றும் கிடைக்கிறது. எல்லாம் முடிந்தவுடன், அதன் தொண்டையை அறுத்து மற்ற நாட்டுக்கு அனுப்பி தொழில் செய்கிறீர்கள். என்ன முட்டாள்தனம் இது? இது மனிதாபிமானமா? என்ன நினைக்கிறீர்கள்?

இயக்குனர்: நல்லது, ஒரு இரு நூறு வருஷத்துக்கு முன், மக்கள் குளிரை தாங்க, கொல்ல ஆரம்ப...

பிரபுபாதர்: இல்லை, இல்லை. நீங்கள் உங்களது தாயிடம் பால் குடிக்கிறீர்கள். உங்களது தாயிடம் பால் குடிக்கிறீர்கள், அந்த தாயார் பால் கொடுக்க முடியவில்லை என்றால் அவளைக் கொன்று விடுவீர்களா? இது என்ன? மனிதாபிமான மா? இயற்கை ரொம்பவே வலிமையானது, இந்த அநியாயத்துக்கும், பாவப்பட்ட செயலுக்கும், நீங்கள் கஷ்டப்பட வேண்டியது தான். நீங்கள் கஷ்ப்பட தயாராக இருக்க வேண்டியதுதான். அதனால் போர் வரலாம், ஒட்டுமொத்த அழிவு வரும். இயற்கை இதை ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது. அவர்களுக்கு இதெல்லாம் தெரியாது, இயற்கை எப்படி செயல்படுகிறது, கடவுள் எல்லாவற்றையும் எப்படி பார்த்துக் கொள்கிறார் என்றெல்லாம். அவர்களுக்கு கடவுளே தெரியாதே. அது தான் சமுதாயத்தின் குற்றம். அவர்களுக்கு கடவுளை பற்றி கவலை இல்லை. "நாங்கள் விஞ்ஞானிகள். எங்களால் எதுவும் செய்ய முடியும்." என்ன செய்ய முடியும்? மரணத்தை நிறுத்த முடியுமா? இயற்கை சொல்கிறது "ஒரு நாள் நீ இறந்து போகபோகிறாய் என்று. நீ ஐன்ஸ்டினாக இருந்தாலும் சரி, இறப்பு இன்றியமையாதது." ஏன் ஐன்ஸ்டினோ அல்லது பல விஞ்ஞானி களோ, மருந்து அல்லது ஒரு உத்தியோ? இறந்து போகாமல் இருக்க கண்டுபிடிக்க முடியவில்லை? இதுதான் இந்த சமூகத்தின் குற்றம். அவர்கள் அனைவரும் முழுவதும் இயற்கையின் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறார்கள, சுதந்திரமாக செயல் படுகிறார்கள். அறியாமை. அறியாமை. இதை மாற்ற முற்படுகிறோம்.

இயக்குனர்: சரி நீங்கள் உங்களது கொள்கையில் வெற்றி பெற எங்களது வாழ்த்துக்கள்.

பிரபுபாதர்: ம்..?

இயக்குனர்: வாழ்த்துக்கள்.

பிரபுபாதர்: ம்... நன்றி.

இயக்குனர்: ஒரு பொது சேவையாளியாக எப்படி உன் வாழ்க்கையை சீர் செய்கிறாயோ அதைப்போல சுற்று சூழளையும் சரி செய்ய வேண்டும். ஒரு சமூகத்தின் கோட்பாடுகளை பின்பற்றவா(?)

பிரபுபாதர்: ஆதலால் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அது... எங்களது தத்துவத்தை கற்றுக் கொள்ளுங்கள், இது எவ்வளவு நல்லா இருக்குன்னு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

இயக்குனர்: கண்டிப்பாக.

பிரபுபாதர்: ஆம். நாங்கள் சதவிகிதத்தை எண்ணுவதில்லை. நாம் ஒவ்வொருவரும் சிறந்தவர்களாக முன்னேற வேண்டும். அதே உதாரணம் தான். ஒரு நிலவுக்கும் ஆயிரம் நக்ஷ்த்திரங்களுக்கும் சதவிகிதம் எடுக்க முடியாது. சதவிகிதம் என்ன? கோடி நக்ஷ்த்திரங்கள் இருக்கு. அதேதான்...என்ன சதவிகிதம், கோடியில் ஒன்றா? சொல்லப் போனால் சதவிகிதம் பூஜ்யம்தான். ஆதலால், இது நிலவு, இதுவே போதுமானது எல்லா நக்ஷ்த்திரங்களையும் விட. அதனால் நிலவை உருவாக்க வேண்டும்.

இயக்குனர்: ஆமாம், அந்த நிலவு ரொம்ப பெரியது, அதனால் அதைப்பார்க்க முடிகிறது, ஆனால் இன்னொருவரை, அதாவது அந்த சிறிய நக்ஷ்த்திரத்தை....

பிரபுபாதர்: இல்லை, பரவாயில்லை. உனக்கு நிலவை மாதிரி ஆக்க முடியவில்லை என்றாலும்...

இயக்குனர்: என்ன சொல்கிறீர்கள்?

பிரபுபாதர்: உங்களால் உருவாக்க முடியாது, ஆனால் அவன் சிறந்த மனிதனாக இருந்தால் கண்டிப்பாக முடியும்.

இயக்குனர்: ஒப்புமை ஸ்வாரஸ்யமாக தான் இருக்கு, ஆனால் அந்த நபர் கேட்பார், நீயும் என்னை மாதிரி மனிதன் தானே, உங்களுக்கு எப்படி தெரியும்.... நக்ஷ்த்திரமாக இல்லை, உங்கள் கருத்து, என்னைப்போல...

பிரபுபாதர்: இல்லை, இந்த முறை உங்களுக்கு சரி என்று பட்டால் நீங்கள் பல வழியில் ஒத்துழைக்கலாம். முதலாவதாக இந்த முறை என்ன என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும், இந்த கிருஷ்ண பக்தி இயக்கம். நாங்கள் உங்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறோம், இந்த முறையின் மகத்துவம் இது. ஆதலால் நீங்கள் நம்பினால், ஒத்துழைக்க முயற்சி செய்யுங்கள். மற்ற தலைவர்களை உருவாக்குங்கள். ஏன் நீங்களும் தலைவர்தானே. யத் யத் ஆசரதி ஷ்ரேஷ்டஸ் தத் தத் ஏவேதரோ ஜனா: (ப.கீ 3.21). சமூகத்தில் தலைவர்கள் இந்த இயக்கத்தை கண்டு கருணையுள்ளம் கொண்டால், பொது மக்களும் பின்பற்றுவார்கள், "ஓ, நம் தலைவனே, நம் மாந்திரிகள் இதை ஆதரிக்கிறார்கள்" என்று.