TA/Prabhupada 0871 - மன்னர்களை, அனுபவம் உள்ள ப்ராமணர்களும், ரிஷிகளும் ஆட்சியில் உதவி செய்தார்கள்



750519 - Lecture SB - Melbourne

மன்னன், அவனது ராஜ்யத்தில் இருக்கும் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவன் மனிதனோ அல்லது மிருகமோ, ஏன் மரங்களுக்கு கூட. சட்டம் என்று எதுவும் இல்லை, தேவை இல்லாமல் வெட்டுவதோ அல்லது கொல்வதோ கிடையாது. தகுந்த காரணம் இருந்தால் பரவாயில்லை... ஒரு தேசம் என்றால்...யாரெல்லாம் அந்த தேசத்தில் பிறந்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் தான். இப்பொழுது இருக்கும் ஆட்சியோ மனிதனை பாதுக்காக்கிறதே தவிர, விலங்குகளை பாதுகாப்பதில்லை. இது தான் தேசியவாதமா? மிருகங்கள் எதை செய்தது அவைகளை பாதுகாப்பதிலிருந்து புரக்கனிக்க? இதுதான் கலியுகம், பாவப்பட்ட காலம். பாவங்கள் நிறைந்த காலம். அது அதிகரித்து வருகிறது, அதுதான் அதிகரிக்கிறது. ஆனால் மஹாராஜா பரீக்ஷ்தின் ஆட்சியின் போது, அநீதியான செயலை எவரும் செய்யவில்லை. அதனால் ஸாஸ்திரம் காமம் வவர்ஷ பர்ஜன்ய:(ஶ்ரீ.பா 1.10.4) என்கிறது. அனைத்தும் நல்லதாக இருந்ததால், இயற்கையும் எல்லா வசதிகளையும், வேண்டும் அளவுக்கு கொடுத்துக் கொண்டிருந்தது, வாழ்க்கையும் முழுமையாக இருந்தது. மன்னன் அல்லது கடவுளின் சட்டத்திற்கு தீங்கு அல்லது கீழ்ப்படியாமல் போன உடனே.... மன்னன் மஹேசனின் ப்ரதிநிதியாக கருதப்பட்டான். ஆதலால், ஒரு மன்னன் கடவுளின் ப்ரதிநிதியாக இந்தியாவில் ஏற்றுக் கொள்ளபட்டான். ஆதலால் மன்னர்களுக்கு அதற்கேற்றவாறு பயிற்சி அளிக்கப்பட்டது அந்த ஒருவனே உலகம் முழுவதையும் ஆள, போதுமானதாக இருந்தது... அதாவது ஒரு கோளத்தை. அதுதான் நடைமுறை. ராஜாவும் கடவுள் நம்பிக்கையோடு இருந்தான். இப்படி பட்ட மன்னர்களை பற்றி நிறைய தகவல்கள் இருக்கிறது. அவர்கள் ஏன் கடவுளை நம்பினார்கள்? ஏனென்றால் அவர்களையும் ஒருவன் பாதுகாத்தான். ராஜாக்களை, அனுபவம் உள்ள ப்ராமணர்களும் ரிஷிகளும் ஆட்சியில் உதவி செய்தார்கள். இந்த ப்ராமணர்கள் அரசியல் நிர்வாகத்தில் ஒரு காலமும் ஈடுபடமாட்டார்கள், ஆனால் அவர்கள் அரசர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள், "இப்படி தான் மக்களை ஆள வேண்டும்" என்று. மன்னன் அதை செய்யவில்லை என்றால், ப்ராமணர்களிடம் நிறைய சக்தி இருந்தது- ஏன் உதாரணங்களே இருக்கிறது-மன்னனை ஆட்சியிலிருந்து விலக்கவும் அல்லது அவனை அழிக்கவும் கூட. ஆனால் ஆட்சியை அவர்கள் கையில் எடுக்க மாட்டார்கள். மன்னனின் புதல்வனுக்கு ஆட்சி அளிக்கப்படும். அதுதான் அப்போதைய முறை.

இந்த பரீக்ஷ்த் மஹாராஜாவையும் ஏழே நாட்களில் மரணம் என்ற சாபம் அளிக்கபட்டது. அதுவும் அருமையாக, ஸ்வாரஸ்யமானது. அவ்வளவு ஸ்வாரஸ்யமும் இல்லை; அது வருத்தப்படக் கூடிய நிலைமை, மஹாராஜா பரீக்ஷித்தை ஒரு ப்ராமண சிறுவன் ஏழே நாட்களில் பாம்பு கடித்து மரணம் அடைய சபித்துவிட்டான். என்ன நடந்தது? மஹாராஜா ஒரு முறை வேட்டையாடுவதற்காக காட்டுக்கு போயிருந்தார். ஷத்ரிய மன்னர்களுக்கு மட்டுமே வேட்டையாடும் தகுதி இருந்தது. ஏனென்றால் அவர்களே ஆட்சி செய்பவர்கள், அந்த காலத்தில் முரடர்களையும், பாவம் செய்பவர்களையும், மன்னனின் அனுமதியோடு, அல்லது மன்னனே அவர்களை உடனே கொன்று தண்டனை அளிக்கவே, மிருகங்களை கொன்று பயிற்சி பெற்றனர். அந்த பயிற்சியுமே ஏதாவது கொடூரமான மிருகத்தை காட்டில் கொன்றுதான் செய்தார்கள், அவற்றை சாப்பிடுவதற்காக இல்லை. இப்பொழுது வேட்டையாடுவது மிருகங்களை கொன்று தின்பதிற்கு நடக்கிறது. இல்லை, அது சட்டம் இல்லை. மஹாராஜா பரீக்ஷித் வேட்டையாடும் பொழுது மிகவும் தாகம் எடுத்தது. அதனால் ஒரு முனிவரின் ஆஸ்ரமத்தில் தண்ணீர் குடிக்க புகுந்தார். அப்பொழுது முனிவர் ஆழ்ந்த த்யானத்தில் இருந்தார். அவர் உள்ளே நுழைந்து, அவரிடம் "குடிக்க தண்ணீர் கிடைக்குமா, மிகவும் தாகமாக உள்ளது" என்றார். "அது ஒரு ஆஸ்ரமம்" தானே என்று நினைத்தார், ஆனால் அவர் குரல் ஆழ்ந்த த்யானத்தில் இருந்த முனிவருக்கு கேட்கவே இல்லை. மன்னருக்கு அவமானமாக இருந்தது, "நான் ஒரு மன்னன், குடிக்க நீர் கேட்டால், இவர் மௌனமாக இருக்கிறாரே" என்றார். மிகவும் கோபம் அடைந்தார், பக்கத்தில் ஒரு செத்த பாம்பு இருக்கவே. அதை எடுத்து அந்த முனிவரின் கழுத்தில் மாலையாக போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேரினார்.

முனிவரின் பத்து, பன்னிரண்டு வயது இருக்கும் மகன் அங்கே வரவே. அவன் விளையாடிக்கொண்டிருக்கும் போது, அவனது நண்பர்கள் நடந்த சம்பவத்தை அவனிடம் சொல்ல "மன்னன் உன் தந்தையை இவ்வாறு அவமதித்தார்" என்று. மகன் மிகவும் கோபம் அடைந்து, "ஓ மன்னன் முரடானவன் எவ்வாறு என் தந்தையை அவமதித்துள்ளான்" செத்த பாம்பு அவரின் கழுத்தில் இருப்பதை பார்த்தான். உடனே மஹாராஜா பரிக்ஷித்துக்கு சாபம் அளித்தான், "யார் இந்த செயலை செய்தாரோ அவர் பாம்பு கடித்து ஏழே நாட்களில், மரணம் அடைவார்" என்று. அவன் சத்தமாக அழுதுக் கொண்டிருந்தான், ஒரே சத்தமாக இருந்தது என்று சொல்ல வருகிறேன், அந்த சத்தம் கேட்டு முனிவர் முழித்துக் கொள்ளவே, "என்ன ஆச்சு ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார். "இல்லை, இல்லை. மன்னர் உங்களை அவமதித்துள்ளார், அதனால் அவருக்கு சாபம் அளித்துவிட்டேன்." ஓ, அவருக்கு மனம் பொருக்க முடியவில்லை "இவ்வளவு நல்ல பக்தனை ஒரு மன்னனை சபித்துவிட்டயே? ஓ, உன் செயல் ப்ராமணவர்கத்தையே இழிவு படுத்தி உள்ளது. கலியுகத்தை வரவழைத்திருக்கிறாய். இதுதான் கலியுகத்தின் சதி." என்றார். எப்படியோ, இந்த தகவலை மன்னரிடம் சேர்த்தார் "எனது மகன் முட்டாள்தனமாக உங்களை சபித்து விட்டான். இப்படியாக... நான் என்ன செய்வது? கடவுளின் இச்சை, நடந்து விட்டது. தயாராக இருங்கள்." இப்பொழுது, பாருங்கள், ப்ராமணக் குலத்தில் பிறந்த சிறுவனுக்கு கூட, எவ்வளவு சக்தி உண்டு என்பதை, பத்து வயது சிறுவன், ஒரு மன்னனை சபித்து, அவரும் அவனுடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டார் என்றால், அப்படி இருந்தது க்ஷத்ரிய, ப்ராமண குலம், மற்றும் வைஸ்ய, சூத்ர குலம் என்று சொல்ல வருகிறேன். சாதுர்-வர்ண்யம் மயா ஸ்ரிஷ்டம் குண-கர்ம-விபாகஷ:(ப.கீ.4.13) மனித சமூகம், கடவுளின் விருப்பத்தால் நான்கு வர்கமாக உள்ளது. முதல் வர்கம் ப்ராமண; இரண்டாவது க்ஷத்ரிய; மூன்றாவது வைஸ்ய; இதர வர்கம் சூத்திரர்கள்.