TA/Prabhupada 0872 - மனித சமூகத்தை நான்கு பிரிவுகளாக பிரிப்பது இன்றியமையாத ஒன்று



750519 - Lecture SB - Melbourne

இக்காலக்கட்டத்தில், ப்ராமணர்களோ, ஷத்ரியர்களோ இல்லை, வைஸ்யர்களோ இல்லை, நான்காவது வர்கம் அனைவரும் சூத்திரர்கள் தான். அதனால் நீங்கள் இவர்கள், இந்த நான்காவது வர்கத்தவர்கள், சந்தோஷம் அளிப்பதற்கு வழி வகுப்பார்கள் என்று நினைத்தால், முடியாது. ஆகையால் உலகமே சின்னாபின்னமாகி இருக்கிறது. யாருமே சந்தோஷமாக இல்லை. அதனால் மனித சமூகத்தை நான்கு பிரிவுகளாக பிரிப்பது இன்றியமையாத ஒன்று. ப்ராமண வர்க்கம் அதாவது முதல் மனித வர்க்கம், அவர்களது குணங்களை பார்த்து, மற்றவர்கள் பின்பற்றுவார்கள். யத் யத் ஆசரதி ஸ்ரேஷ்ட: (ப.கீ 3.21). ஆகையால் இந்த க்ருஷ்ண பக்தி இயக்கம் உருவான காரணமே உன்னதமான மனித வர்க்கத்தை உருவாக்குவதன் நோக்கமே. இதுவே க்ருஷ்ண உணர்வு, இந்த இயக்கம். அதனால் தான் எங்களிடம் இந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளது: தகாத உறவு, மாமிசம் சாப்பிடுவது, போதைக்கு உள்ளாவது, சூதாடுவது இவை எல்லாம் கிடையாது. இதுவே முதல் தரமான மனித வர்க்கத்துக்கு ஆரம்பம். ஆகையால் நாங்கள் சில மனிதர்களை முதல் வர்க்கத்துக்கு கொண்டுவர முற்படுகிறோம். ஆனால் புராண காலங்களில் இருந்தார்கள். சதுர்...

இப்பவும் இருக்கிறது. யாவரும் ஒரே மாதிரியான சிந்தனை உள்ளவர்கள் என்று நினைக்காதீர்கள். இல்லை. இப்பொழுதும் சில சிறந்தவர்கள் இருக்கிறார்கள். விஞ்ஞானிகளோ, தத்துவ ஞானிகளோ அல்லது சமயதாரர்களைப் போலவோ, சிறந்த மனிதர்களாக இருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராத விதமாக இப்பொழுது யார் முதல் தரப்பட்டவர்கள் என்றும் கடைசி தரப்பட்டவர்கள் என்றும் சொல்ல முடிவதில்லை. ஆகையால் இந்த சமுதாயம் ஒழுங்கு முறையாக செயல்படுவதற்கு முதல் வர்கத்தவர்களும், இரண்டாம் வர்கத்தவர்களும், மூன்றாம் வர்கத்தவர்களும் இருந்தே ஆக வேண்டும். உங்களது உடலில் வெவ்வேறு உறுப்புகள் இருப்பது போல்: தலை, புஜம், வயிறு, கால்கள் போல. இது இயற்கையே. தலை இல்லாமல், வெறும் கைகளும், வயிறும், கால்களும், இருந்தால் அது இறந்து போன சடலம்தான். அதாவது உன்னை வழிநடத்த, அதுதான் இந்த மனித சமூகத்தை, முதல் தரபட்டவர்கள் வழிநடத்தவில்லை என்றால், அது உயிரற்ற சமூகமாகவே கருதப்படும். ஆதலால் இதில் பிரிவு இன்றியமையாதது சதுர் வர்ண்யாம் மயா ஸ்ரிஷ்டம் குண கர்ம...(ப.கீ 4.13) பிறப்பினால் அல்ல, நடத்தையினால். ஆதலால் ஒருவரை அவரது விருப்பப்படி முதல் வர்கத்தவராகவோ, அல்லது இரண்டாவது வர்கத்தவராகவோ, ஆவதற்கு பயிற்சி கொடுக்கலாம். அதுவே நாகரீகம்.

சில மனிதர்களை முதலாம் வர்க்கத்திற்கு கொண்டு வருவதற்கு பயிற்சி அளிக்கவேண்டும், சில மனிதர்களை இரண்டாவது வர்க்கத்திற்கு கொண்டு வருவதற்கு பயிற்சி அளிக்கவேண்டும், அதைப்போல சில மனிதர்களை மூன்றாவது வர்க்கத்திற்கு கொண்டு வருவதற்கு பயிற்சி அளித்து, சரிசமம் ஆக்கவேண்டும், எவருக்கு பயிற்சி அளிக்க முடியவில்லையோ, அவர்களை இம்மூவருக்கு சேவை செய்விக்கலாம். இதுவே சூத்திர வர்கத்தவர்கள். ஆதலால்..

...அது முடியாது. ஒரு மனிதனுக்கு, சிறப்பான முறையில் பயிற்சி அளிக்க வேண்டும், அவன் சரியான முறையில் பயிற்சி எடுத்துக் கொண்டால், அவனை முதல் வர்கத்தவனாக மாற்ற முடியும். பரவாயில்லை. பிறப்பின் காரணமாக ஒருவன் தாழ்ந்தவனாக இருந்தாலும் பரவாயில்லை. தகுந்த பயிற்சியால், அவனை முதல் வர்கத்தவராக ஆக்க முடியும். அதுவே பகவத்கீதையின் உத்தரவு.

மாம் ஹி பார்த்த வ்யபாஷ்ரித்ய
யே 'பி ஸ்யு பாப-யோனய:
ஸ்ரித்ய சூத்ரா: ததா வைஸ்யா
தே'பி யாந்தி பராம் கதிம்
(ப.கீ 9.32).

பராம் கதிம். பராம் கதிம் என்றால் வீட்டுக்கு திரும்புவது என்று அர்த்தம், கடவுளிருக்கும் இடத்திற்கே செல்வது- அதுவே நமது உண்மையான இருப்பிடம், ஆன்மீக உலகம்- நிரந்தரமாக, ஆனந்தமாக, அறிவுற்றவராக வாழலாம். அதுவே நமது உண்மையான நிலை. இங்கு நாம் பௌதிக உலகத்தில் சந்தோஷத்தை தேடுவதற்காக வந்திருக்கிறோம். சந்தோஷத்தை தேடும் பொருட்டு வலையில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். அது நமக்கு தெரியாது. மாயையே உண்மையான சந்தோஷம், அதுவே வாழ்வின் குறிக்கோள் என்று நினைக்கிறோம். இல்லை, அது நமது வாழ்க்கையின் குறிக்கோள் இல்லை. அதுவே வலையில் சிக்கிக்கொள்ளும் வழி.