TA/Prabhupada 0873 - பக்தி என்பது என்னவென்றால் நாம் நமது பதவிகளை துறப்பது தான்
750519 - Lecture SB - Melbourne
எனது உணர்ச்சிகளை மகிழ்விப்பதற்காகவே எனக்கு இந்த தேகம் இருக்கிறது என்ற நினைப்பு, இந்திய தேகம், ஆஸ்திரேலியா தேகம் அல்லது அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய தேகம். ஆனால் உன் தேகம் மாறுதலுக்கு உட்பட்டது. ததா தேஹாந்தர-ப்ராப்தி: (ப.கீ2.13). நாம் என்றும் நித்தியம். ந ஜாயதே நா ம்ரியதே வா கதாசின் (ப.கீ 2.20). ஆன்மாவிற்கு பிறப்போ இறப்போ கிடையாது. நாம் நம் தேகத்தை மட்டுமே மாற்றுகிறோம். ததா தேஹாந்தர-ப்ராப்தி: நாம் நம் தேகத்தை மாற்றுவது போல். தாயின் கருவில் சிறிய உருவமாக தோன்றி. அது வளர்ந்து வெளியாகிறது. மறுபடியும் வளர்கிறது. உண்மையாக அது வளர்வதில்லை, அது மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு குழந்தை தன் தேகத்தை ஒரு சிசுவாகவும், அந்த சிசு ஒரு சிறுவனாகவும் மாறுகிறது, அந்த சிறுவன் தன் தேகத்தை ஒரு இளைஞனாக மாற்றிக்கொள்கிறான். அப்புறம்.... இதைப்போல உன் தேகத்தை நீ மாற்றிக் கொள்கிறாய். அதற்கு உன்னிடம் அனுபவம் இருக்கிறது. உன்னிடம் ஒரு குழந்தையின் தேகம் இருந்தது-அது உனக்கு ஞாபகம் இருக்கிறது. அல்லது ஒரு சிறுவனின் தேகம் இருந்தது- அதுவும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் அந்த தேகம் நிரந்தரம் இல்லை. ஆனால் நீ நிரந்தரம். அகையால் நாம் அறிய வேண்டியது என்னவென்றால், இந்த தேகத்தில் நாம் நிரந்தரமாக குடி இருக்க போவதில்லை மாற்று தேகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதையே ததா தேஹாந்தர-ப்ராப்தி என்கிறோம். நாம் மாறுதலுக்கு உட்படுகிறோம். இதுவே இயற்கையின் விதி. ஆன்மாவிற்கு அழிவு இல்லை. ந ஜாயதே ந ம்ரியதே வா கதாசின் ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (ப.கீ.2.20). ஆன்மா அழிவதில்லை; அந்த உடல் தான் அழிகிறது. இல்லை, மக்களுக்கு அது தெரியாது. ஏனெனில் அவர்கள் பாவ செயல்களை செய்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களின் புத்தி மந்தமாகிவிட்டதால் இந்த எளிய உண்மையைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை நீ உன் தேகத்தை இந்த பிறப்பில் எப்படி மாற்றுகிறாயோ, அதைப்போல் அடுத்த பிறவிக்கு மாற்றிக்கொள்வாய். இது ஒரு எளிமையான உண்மை. ஆனால் இந்த பௌதிக நாகரீகத்தின் முன்னேற்றத்தால், நாம் மந்தமாகி முட்டாளாகி ஒன்றுமே புரியாத நிலைக்கு தள்ளப்படுகிறோம். ஆனால் இந்தியாவில், பின் தங்கி இருந்தாலும், கிராமபுறத்தில்: படிப்பறிவில்லாத பாமர மனிதன் நம்புகிறான். ஆனால் இந்த மேலை நாடுகளிளோ, நான் பெரிய பெரிய பேராசிரியர்களை சந்தித்திருக்கிறேன், அவர்களுக்கு இதைப்பற்றி தெரியவில்லை. நான் ஒரு பேராசிரியரை சந்தித்தேன், கொடோவ்ஸ்கீ, மாஸ்கோவில். அவர் கூறியது,"ஸ்வாமிகளே, இந்த தேகம் அழிந்தால், எல்லாம் அழிந்துவிடும் என்றார். பாருங்கள். அவர் பெரிய பேராசிரியர் ஒரு பெரிய வரலாறு துறைக்கு, தலைமை ஆசிரியர். அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. அது உண்மையில்லை. உண்மை என்னவென்றால் நாம் ஒரு சிறிய பொறி, ஆன்மீக பொறி, கடவளின் ஒரு சிறிய அங்கம். எப்படியோ, நாம் இந்த பௌதிக உலகிற்கு உணர்ச்சிக்காக அவதரித்திருக்கிறோம். ஆன்மீக உலகில் புலன் உணர்ச்சி இல்லை. அங்கு உணர்ச்சிகளை சுத்தமாக இருக்கிறது. இந்த பௌதிக உலகில் உணர்ச்சிகள் அசுத்தமாக இருக்கிறது. அவர்களுக்கு இந்த மாயை மட்டுமே அனுபவிக்க வேண்டும். ஆகையால் க்ருஷ்ணா பக்தி என்றால் உன்னுடைய உணர்ச்சிகளை சுத்தப்படுத்துவது தான். அதுதான் வழி.
- ஸர்வோபாதி-வினிர்முக்தம்
- தத்-பரத்வேன நிர்மலம்
- ஹ்ரிஷீகேன ஹ்ரிஷீகேஷ-
- சேவனம் பக்திர் உச்யதே
இந்த பக்தி என்னவென்றால் நாம் நமது பதவிகளிலிருந்து விடுபடுவதே. பதவி என்றால் என்ன?அனைவரும் சிந்திக்கிறார்கள். "நான் அமேரிக்கன்", "நான் இந்தியன்", "நான் ஐரோப்பியன்", "நான் ஆஸ்திரேலியன்", "நான் பூனை," "நான் நாய்," "நான் இது", "நான் அது"-அவர்களது தேகத்தை பொருத்து. நாம் இந்த தேகம் என்ற நினைப்பை மறந்துவிட வேண்டும், "நான் இந்த தேகம் இல்லை". அஹம் ப்ரம்மாஸ்மி: "நான் ஆத்மா." இது நமக்கு புரிய வேண்டும். "இவர் அமேரிக்கன், இவர் ஆஸ்திரேலியன், என்ற வித்தியாசம் இருக்காது, இதோ இவர் இந்து, இவர் முஸ்லிம், இது மரம், இது...." இல்லை. பண்டிதா: சம-தர்ஷின: (ப.கீ 5.18). பண்டிதா: என்றால் படித்தவர், எல்லாம் தெரிந்தவர் என்று அர்த்தம். அவர்களுக்கு,
- வித்யா-வினய-ஸம்பன்னே
- ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி
- ஷுனி சைவ ஷ்வ-பாகே ச
- பண்டிதா:ஸம-தர்ஷின:
- (ப.கீ 5.18).
ஒருவர், படித்தவர், வித்யா மற்றும் மென்மையானவர்... வித்யா என்றால், படித்தவர் என்றால், மென்மையானவர், நிதானமானவர். அவர் முரட்டுதனமானவர் மற்றும் மூர்கர் அல்ல. அதுவே வித்யா. அதுவே நமது படிப்பறிவுக்கு பரிட்சை. அவர் படித்து.. பொருமையானவராக மற்றும் அமைதியானவர். அவரே மேன்மையானவர், ஒரே வார்த்தையில்.