TA/Prabhupada 0882 - கிருஷ்ணா நம்மை வீட்டிற்குத் திரும்பி கூட்டி செல்ல மிகவும் ஆர்வமாக உள்ளார், ஆனால் நாம்



730413 - Lecture SB 01.08.21 - New York

உங்கள் வரையறுக்கப்பட்ட அறிவால் வரம்பற்றதை நீங்கள் அணுக முடியாது. அது சாத்தியமில்லை. எனவே, குந்திதேவி போன்ற பக்தர்களின் கிருபையால், இங்கு வந்துள்ளவர் வாசுதேவா- என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். எங்கும் பரவியுள்ள, முழுமையான உண்மை, பரமாத்மா, வாசுதேவா, இங்கே உள்ளார். கிருஷ்ணாய வாசுதேவாய (ஸ்ரீ. பா. 1.8.21). எனவே இந்த வாசுதேவா உணர்தல் பல, பல பிறப்புகளுக்குப் பிறகு சார்பற்ற தன்மையை மட்டும் வணங்குபவர்களுக்கு சாத்தியமாகும். மிக எளிதாக இல்லை.

பஹூனம் ஜன்மநாம் அந்தே
ஜ்னானவான் மாம் பிரபாத்யாதே
வாசுதேவா சர்வம் இதி
சா மகாத்மா சுதுர்லபா
(ப. கீ. 7.19).

சுதுர்லபா, "மிகவும் அரிதான", மகாத்மா, "பரந்த மனப்பான்மை கொண்டவர்." ஆனால் கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள முடியாத ஒருவர், அவர்கள் ஊனமுற்றவர்கள். அவர்கள் பரந்த எண்ணம் கொண்டவர்கள் அல்ல. ஒருவர் பரந்த எண்ணம் கொண்டவராக இருந்தால், கிருஷ்ணரின் அருளால், அவர் கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள முடியும்.

செவோன்முகே ஹாய் ஜிஹ்வாதாவ் (பக்தி-ராசாமிரிதா- சிந்து 1.2.234). இதன் செயல்முறை செவோன்முகா, சேவை. சேவை, நாக்கிலிருந்து தொடங்கி, வாசுதேவா உணர்தல் சாத்தியமாகும். சேவை, முதல் சேவை ஷ்ரவனம் கீர்த்தனம் (ஸ்ரீ. பா. 7.5.23). ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து, மீண்டும் மீண்டும் கேட்டு பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள். இவை நாவின் இரண்டு பணிகள். எனவே நீங்கள் உணருவீர்கள். மிகவும் எளிய முறை. செவோன்முகே ஹாய் ஜிஹ்வாதாவ் ஸ்வயம்... கிருஷ்ணர் வெளிப்படுத்துவார், உங்கள் முயற்சியால் நீங்கள் கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள முடியும் என்பதல்ல, ஆனால் அன்பான சேவையில் உங்கள் முயற்சி, அது உங்களை தகுதிக்கு உடையவராக்கும். கிருஷ்ணர் வெளிப்படுத்துவார். ஸ்வயம் எவா ஸ்பூரதி அதா. கிருஷ்ணா உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மிகவும் ஆர்வமாக உள்ளார், மீண்டும் கடவுளின் ராஜ்யத்திற்கு. ஆனால் நாம் பிடிவாதமாக இருக்கிறோம். நமக்கு அதில் விருப்பமில்லை. ஆகவே, உங்களை எப்படி வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியும் என்பதற்கான வாய்ப்பை அவர் எப்போதும் ஏற்படுத்தி வருகிறார். பாசமுள்ள தந்தையைப் போல. பாதகன் மகன் தனது தந்தையை விட்டு வெளியேறினான், தெருவில் நோக்கின்றித் திரிகிறான், தங்குமிடம் இல்லை, உணவும் இல்லை, இவ்வளவு துன்பமும். சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல தந்தை அதிக ஆர்வத்துடன் இருக்கிறார். அதேபோல், கிருஷ்ணரும் மிக உயர்ந்த தந்தை. இந்த பௌதிக உலகில் உள்ள இந்த உயிரினங்கள் அனைத்தும், அவை ஒரு பெரிய, பணக்காரனின் வழிதவறிய குழந்தையைப் போலவே, தெருவில் திரிகின்றனர். எனவே மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய நன்மை அவருக்கு கிருஷ்ண உணர்வு அளிப்பதாகும். மிகப் பெரியது ... நீங்கள் எந்த நன்மையையும் கொடுக்க முடியாது; எந்தவொரு பௌதிக லாபமும் வாழும் உயிரினங்களை திருப்திப்படுத்தாது. அவருக்கு இந்த கிருஷ்ண உணர்வு வழங்கப்பட்டால் ... அதே செயல்முறையைப் போலவே. ஒரு குழம்பிய சிறுவன் தெருவில் வாடுகிறான். அவனுக்கு நினைவூட்டினால், "என் அன்பான பையன், நீ ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய்? நீயும் அவ்வளவு பணக்காரனுடைய மகன் தான். உன் தந்தைக்கு இவ்வளவு சொத்துக்கள் கிடைத்துள்ளன. நீ ஏன் தெருவில் திரிகிறாய்?" "ஆமாம், நான் அத்தகைய பெரிய மனிதனின் மகன்." என்று அவர் நினைவுக்கு வந்தால், நான் ஏன் தெருவில் அலைய வேண்டும்?" என்று அவர் வீட்டிற்கு திரும்பிச் செல்கிறார். யத் கத்வா நா நிவர்த்தந்தே (ப. கீ. 15.6).

ஆகவே, "நீங்கள் கிருஷ்ணரின் ஒரு அங்கம். நீங்கள் கிருஷ்ணரின் மகன். கிருஷ்ணர் செழிப்பானவர், ஆறு வகையான செழுமை. நீங்கள் ஏன் பயணம் செய்கிறீர்கள், ஏன் இந்த பௌதிக உலகில் அழுகிக் கொண்டிருக்கிறீர்கள்?" இது மிகப்பெரிய சேவை, கிருஷ்ண உணர்வு. ஆனால் மாயா மிகவும் வலிமையானவர். கிருஷ்ண உணர்வுக்கு அனைவரையும் அறிவூட்ட முயற்சிப்பது ஒவ்வொரு கிருஷ்ண-பக்தரின் கடமையாகும். குந்திதேவி சுட்டிக்காட்டுவது போல. முதலில் அவள் சொன்னது, அலக்ஷ்யம் சர்வ-பூதானம் அந்தர் பஹிர் அவஸ்தி (ஸ்ரீ. பா. 1.8.18) ... கிருஷ்ணர், உயர்ந்த நபராக இருந்தாலும், உள்ளும், புறமும் இருந்தாலும், மோசடிகளுக்கும் முட்டாள்களுக்கும், அவர் கண்ணுக்கு தெரியாதவர். எனவே அவள் சுட்டிக்காட்டுகிறாள்: "இதோ இறைவன், கிருஷ்ணாய வாசுதேவயா (ஸ்ரீ. பா. 1.8.21)." அவர் எல்லாவற்றிலும் பரவலான முழு முதற் கடவுள், ஆனால் அவர் தேவகியின் மகனாக ஆனதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். தேவகீ-நந்தநாய. தேவகீ-நந்தநாய. அதர்வ-வேதத்திலும் தேவகி-நந்தனா குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணர் தேவகி-நந்தனாவாகவும், அவரது வளர்ப்புத் தந்தை நந்தா-கோபா, நந்தா மகாராஜா.