TA/Prabhupada 0883 - பொருளாதார பிரச்சனைகளுக்கு எவ்வாறு விடை காண்பது என்று நேரத்தை வீணாக்காதிர்கள்



Lecture on SB 1.8.21 -- New York, April 13, 1973

எனவே கிருஷ்ணர் தனது பக்தர்களுடன் தந்தை மற்றும் தாயாக உறவு கொள்ள விரும்புகிறார். இங்கே, இந்த பௌதிக உலகில், நாம் நித்தியமானவருடனான உறவை தந்தையாக மாற்ற முயற்சிக்கிறோம், ஆனால் கிருஷ்ணர் மகனாக மாற விரும்புகிறார். எனவே நந்த-கோபா (ஸ்ரீ. பா. 1.8.21). அவர் ஒரு பக்தரின் மகனாக ஆவதற்கு மகிழ்ச்சி அடைகிறார். சராசரி மனிதர்கள், கடவுளை தந்தை ஸ்தானத்தில் வைக்க விரும்புகிறார்கள், ஆனால் அது கிருஷ்ணருக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. தந்தை என்றால், தந்தையாக மாறுவது என்றால், எப்போதும் கவலைப்படுவது: "இதை எனக்குக் கொடுங்கள், இதை எனக்குக் கொடுங்கள், இதை எனக்குக் கொடுங்கள்." நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா. நிச்சயமாக கிருஷ்ணருக்கு, எல்லோருக்கும் வழங்குவதற்கான மகத்தான ஆற்றல் உள்ளது. ஏகோ யோ பஹுனாம் விததாதி காமான். அவர் அனைவருக்கும் அவரவர் விரும்பும் அளவுக்கு வழங்க முடியும். அவர் யானைக்கு உணவு வழங்குகிறார். அவர் எறும்புக்கு உணவு வழங்குகிறார். மனிதனுக்கு ஏன் வழங்க மாட்டார் ? ஆனால் இந்த மோசடிகள், அவர்களுக்குத் தெரியாது. ரொட்டியைப் பெற- அவர்கள் கழுதை போல இரவும் பகலும் உழைக்கிறார்கள். அவர் தேவாலயத்திற்குச் சென்றால், அங்கேயும்: "எனக்கு ரொட்டி கொடுங்கள்." அவை ரொட்டி பிரச்சினை மட்டுமே. அவ்வளவுதான். நாம் பணக்கார செழிப்பான நபரின் மகன் என்றாலும், ரொட்டி பிரச்சினையை உருவாக்கியுள்ளோம். இது அறியாமை என்று அழைக்கப்படுகிறது. "நான் என் ரொட்டி பிரச்சினையை தீர்க்கவில்லை என்றால், நான் இரவும் பகலும் என் லாரிகளை ஓட்டவில்லை என்றால் ... (லாரி போல் சத்தம் செய்து, சிரிப்பு) இதுபோன்ற ஒரு முட்டாள்தனமான நாகரிகம். நீங்கள் பார்க்கிறீர்கள். உணவு பிரச்சனை. உணவு பிரச்சனை எங்கு உள்ளது? கிருஷ்ணரால் உணவு வழங்க முடியும். ஆபிரிக்காவில் யானைக்கு அவர் உணவை வழங்க முடிந்தால்- மில்லியன் கணக்கான ஆப்பிரிக்க யானைகள் உள்ளன, உங்களுக்குத் தெரியும், அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இந்த ரொட்டி பிரச்சினைக்கு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று பாகவதம் கூறுகிறது. உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். தஸ்யைவ ஹெதோஹ் ப்ரயதேதா கோவிடோ ந லப்யதே யத் பிரமதாம் உபரி அதஹ் (ஸ்ரீ. பா. 1 .5.18). உங்கள் பொருளாதார பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பதில், உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இது முட்டாள்தனம். நிச்சயமாக, இது மிகவும் புரட்சிகரமானது. மக்கள் என்னை வெறுப்பார்கள். "சுவாமிஜி என்ன பேசுகிறார்?" என்று. ஆனால் உண்மையில் இதுதான் உண்மை. இது மற்றொரு பைத்தியக்காரத்தனம். உங்கள் பணக்கார தந்தை மூலம், போதுமான உணவு கிடைத்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். உங்கள் பொருளாதார பிரச்சினை எங்கே? இது பைத்தியம். பொருளாதார பிரச்சினை இல்லை. "என் தந்தை நகரத்தின் பணக்காரர்" என்று உங்களுக்குத் தெரிந்தால், உங்கள் பொருளாதார பிரச்சனை எங்கே? உண்மையில், அதுதான் நிலை. நமக்கு பொருளாதார பிரச்சனை இல்லை. எல்லாம் இருக்கிறது, முழுமையாக. பூர்ணம் அதஹ் பூர்ணம் இதம் பூர்னாத் பூர்ணம் உதச்யதே (இசோபநிஷத் பிராத்தனை). இங்கே எல்லாம் பூரணமாக உள்ளது. உங்களுக்கு தண்ணீர் வேண்டும். சற்றுப் பாருங்கள்: நீரின் பெருங்கடல்கள் உள்ளன. உங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் வேண்டும். உங்களால் முடியாது. கடல் நீர் இவ்வளவு இருந்தாலும், தண்ணீர் பற்றாக்குறை இருக்கும்போது, ​​நீங்கள் கிருஷ்ணரின் உதவியை நாட வேண்டும். அவர் தண்ணீரை ஆவியாக்குவார். அவர் அதை மேகமாக்குவார். பின்னர் அது கீழே விழும்போது, ​​அது இனிமையாகிறது. இல்லையெனில் உங்களால் பருக முடியாது. எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளன. எல்லாம் நிரம்பியுள்ளது- நீர், ஒளி, வெப்பம். எல்லாம் முழுமை. பூர்னாத் பூர்ணம் உதச்யதே, பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவாவஷிஷ்யதே (இசோ பிராத்தனை). அவரது சொத்து ஒருபோதும் முடியப் போவதில்லை. வெறுமனே நீங்கள் அடிபணிந்தால், தேவையான அனைத்தும் உள்ளது. நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

கிருஷ்ண உணர்வுள்ள நபர்கள், அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, பொருளாதார பிரச்சினையும் இல்லை. எல்லாமே கிருஷ்ணரால் போதுமான அளவு வழங்கப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில், அண்டை வீட்டார் பொறாமை படுகிறார்கள், "நீங்கள் வேலை செய்யவில்லை. உங்களுக்கு எந்த கவலையும் இல்லை. உங்களுக்கு நான்கு கார்கள் கிடைத்துள்ளன. நீங்கள் மிகவும் நன்றாக சாப்பிடுகிறீர்கள். அது எப்படி?" அவர்கள் எங்கள் பக்தர்களிடம் விசாரிக்கிறார்கள். அது உண்மையில் உண்மை. நாங்கள் இவ்வளவு பணத்தை செலவிடுகிறோம், எங்களுக்கு பல மையங்கள் கிடைத்துள்ளன. கணக்கீடுபடி நாம் செலவழிக்கும் சுமார், $70,000 ஆகும். யார் வழங்குகிறார்கள்? எப்படியோ அல்லது வேறுவழியில், நாங்கள் பெறுகிறோம். எனவே எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் வெறுமனே கிருஷ்ணரின் நேர்மையான ஊழியராகி விடுங்கள். எல்லாம் இருக்கிறது. இதுதான் சோதனை.