TA/Prabhupada 0898 - நான் ஒரு பக்தன் ஆகிவிட்ட காரணத்தினால், இனிமேல் எந்த ஆபத்தும் இல்லை, எந்தத் துன்பமும் இ



730417 - Lecture SB 01.08.25 - Los Angeles

பிரபுபாதா : கிருஷ்ண பக்தி எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்படாதது. கடுமையான துன்பங்கள் இருந்தபோதிலும். இதுதான் குந்திதேவியின் போதனை. குந்திதேவி வரவேற்கிறார், வரவேற்கிறார் : விபத:3 ஸந்து தா: தத்ர த... இவையெல்லாம்...... குருக்ஷேத்திரப் போரில் வெற்றி கொள்வதற்கு முன் பாண்டவர்கள் அனைவரும் பல்வேறு ஆபத்தான நிலையில் இருந்தனர். இது முந்தைய ஸ்லோகங்களிலேயே விளக்கப்பட்டது. சில சமயம் அவர்களுக்கு விஷம் அளிக்கப்பட்டது, சில சமயம் மெழுகால் ஆன வீட்டில் வைக்கப்பட்டு, வீடு நெருப்பு வைக்கப்பட்டது. சில சமயம் பெரிய பெரிய இராட்சதர்கள், நர மாமிசம் சாப்பிடுபவர்கள், பெரும் வீரர்களுடன் சண்டையிட வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும்...... அவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை இழந்தனர், மனைவியை இழந்தனர், தங்கள் மானத்தையும் இழந்தனர். அவர்கள் காடுகளுக்கு தள்ளப்பட்டனர். முழுமையாக ஆபத்து நிறைந்தது. ஆனால் அந்த எல்லா ஆபத்துக்களிலும், கூடவே கிருஷ்ணர் இருந்தார். திரௌபதியின் ஆடை இழுக்கப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட போது, கிருஷ்ணர் ஆடையை வழங்கிக் கொண்டிருந்தார். கிருஷ்ணர் எப்போதும் இருக்கிறார்.

எனவே தான் பீஷ்ம தேவர் மரணப்படுக்கையில் இருந்தபோது..... அவர் பாண்டவர்களின் பாட்டனார். அவரது மரணப்படுக்கையில் , பாண்டவர்கள் அவரைப் பார்க்க வந்த போது, "இவர்கள், என்னுடைய பேரர்கள், மிகவும் நல்லவர்கள். யுதிஷ்டர் மகாராஜா, மிக உயர்ந்த தர்மவான். அவரது பெயரே தர்மராஜா, தர்மத்தின் ராஜா. அவர் தான் மூத்த சகோதரர். மேலும் பீமனும் அர்ஜுனனும், பக்தர்கள் என்பதால் மிகப் பெரும் வீரர்கள். அவர்களால் ஆயிரக்கணக்கானவர்களை கொல்ல முடியும். அந்த அளவுக்கு அவர்கள் சக்தி படைத்தவர்கள். எனவே யுதிஷ்டிரர், யுதிஷ்டிரர் இருக்கிறார், பீமன் இருக்கிறார். அர்ஜுனன் இருக்கிறார், மேலும் திரௌபதி அதிர்ஷ்ட தேவதையே ஆவார். திரௌபதி எங்கு இருக்கிறாரோ அங்கு உணவுக்கு எந்த பஞ்சமும் இருக்காது என்பது உத்தரவாகவே இருந்தது. இந்த வகையில் இவர்களின் சேர்க்கை மிகவும் அற்புதமாக இருந்தது, அனைத்திற்கும் மேலாக, கிருஷ்ணர் அவர்களுடன் எப்பொழுதும் இருந்தார், இருந்தும் அவர்கள் துன்பத்தில் இருக்கின்றனர்." என்று அழுதார். எனவே அவர், "கிருஷ்ணருடைய திட்டம் என்ன என்று எனக்குத் தெரியாது, இத்தகைய தர்மவான்களும், இத்தகைய பக்தர்களும், இவர்களும் துன்பப்படுகின்றனர்"

என்று அழ ஆரம்பித்தார். எனவே, "நான் பக்தன் ஆகிவிட்ட காரணத்தினால், இனிமேல் எந்த ஆபத்தும் இருக்காது, எந்த துன்பமும் இருக்காது." என்று நினைக்காதீர்கள். பிரகலாத மஹாராஜா மிகவும் துன்பப்பட்டார். பாண்டவர்களும் மிகத் துன்பப் பட்டனர். ஹரிதாஸ் தாகூர் மிகவும் துன்பப்பட்டார். ஆனால் நாம் அந்தத் துன்பங்களினால் சஞ்சலப்படக் கூடாது. " கிருஷ்ணர் இருக்கிறார். அவர் எனக்கு பாதுகாப்பு அளிப்பார்." என்னும் நம்பிக்கையை, உறுதியான நம்பிக்கையை நிச்சயம் வைத்திருக்க வேண்டும் கௌந்தேய ப்ரதிஜானீஹி ந மே ப4க்த: ப்ரணஷ்2யதி (ப.கீ 9.31). கிருஷ்ணரைத் தவிர வேறு எந்த அடைக்கலத்தின் நன்மையையும் எடுத்துக்கொள்ள முயற்சிக்காதீர்கள். எப்பொழுதும் கிருஷ்ணரின் அடைக்கலத்திலேயே இருங்கள்.

கிருஷ்ணர் கூறுகிறார் : கௌந்தேய ப்ரதிஜானீஹி ந மே ப4க்த: ப்ரணஷ்2யதி. "எனதன்பு அர்ஜுனா, எனது பக்தன் என்றும் அழிவதே இல்லை என்பதை உறுதியுடன் அறிவிப்பாயாக." ஏன் இந்த அறிவிப்பு அர்ஜுனனால் அளிக்கப்படும் படி அறிவுறுத்தப்பட்டது? ஏன் அவரே அறிவிக்கவில்லை? இதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. காரணம் இந்த அறிவிப்பை, கிருஷ்ணர் செய்தால், அதை மீறுவதற்கான வாய்ப்பு உண்டு, காரணம் சில சமயம் அவர் தன்னுடைய சத்தியத்தை மீறியதுண்டு ஆனால் அவருடைய பக்தர் சத்தியம் செய்தால், அது என்றுமே மீறப் படாது. இதுதான் கிருஷ்ணருடைய வேலை. "ஓ, என் பக்தன் இதை அறிவித்து விட்டான். இது கட்டாயம் நடக்கும்படி நான் பார்த்துக் கொள்ள வேண்டும்." இதுதான் கிருஷ்ணருடைய நிலை. அவர் அந்த அளவுக்கு தன் பக்தர்களிடம் பற்று கொண்டுள்ளார். எனவேதான் அவர் கூறினார் "நீயே அறிவிப்பாயாக, நான் அறிவித்தால் மக்கள் அதனை நம்ப மாட்டார்கள். ஆனால் நீ அறிவித்தால், அதனை மக்கள் நம்புவார்கள். காரணம் நீ ஒரு பக்தன். உன்னுடைய அறிவிப்பு என்றுமே......"

கிருஷ்ணர் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறார் : "என் பக்தனின் சத்தியம் நிறைவேற்றப்பட்டது. என் சத்தியம் நிறைவேற்றப்படாமல் இருக்கலாம், மீறப் படலாம்." இதுவே கிருஷ்ண பக்தி. நாம் எல்லா சூழ்நிலைகளிலும், மிக ஆபத்தான சூழ்நிலையில் கூட நிச்சயம் கிருஷ்ண உணர்வுடனேயே இருக்க வேண்டும். நாம் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் நமது நம்பிக்கையை நிச்சயம் வைத்திருந்தோமென்றால், பிறகு எந்த ஆபத்தும் இருக்காது.

மிக்க நன்றி.

பக்தர் : ஜெய ஸ்ரீல பிரபுபாதா!