TA/Prabhupada 0902 - பஞ்சம் கிருஷ்ண உணர்வுக்குத் தான். எனவே நீங்கள் கிருஷ்ண உணர்வு உடையவரானால், பிறகு எல்லா



730415 - Lecture SB 01.08.23 - Los Angeles

பிரபுபாதா : ஆக, கிருஷ்ணர் மீது பொறாமை கொள்வது ; இதுதான் பௌதிக வாழ்வின் ஆரம்பம் . "ஏன் கிருஷ்ணர் அனுபவிப்பாளராக இருக்க வேண்டும்? நான் அனுபவிப்பாளனாக இருக்கிறேன். "ஏன் கிருஷ்ணர் கோபியர்களை அனுபவிக்க வேண்டும்?, நான் கிருஷ்ணராகி அனுபவிப்பேன். கோபியரின் சங்கத்தை உருவாக்கி, அனுபவிப்பேன்." இதுதான் மாயை. யாருமே அனுபவிப்பாளராக முடியாது. எனவே தான் கிருஷ்ணர் கூறுகிறார், போ4க்தாரம்' யஜ்ஞ (ப்3க்3 5.29)... ஸ்ரீ கிருஷ்ணர் மட்டுமே அனுபவிப்பாளர். மேலும், அவர் இன்பத்தை அனுபவிக்க, நாம் பொருட்களை அளித்தால், அது தான் வாழ்வின் பக்குவ நிலை. மேலும், நாம் கிருஷ்ணரை நகல் செய்ய விரும்பினால், " நான் கடவுளாகி விடுவேன். நான் அனுபவிப்பதை நகல் செய்வேன்" என்றால், பிறகு நீங்கள் மாயையில் இருக்கிறீர்கள். நம்முடைய ஒரே வேலை....... கோபியரின் வாழ்வைப் போன்றது. கிருஷ்ணர் அனுபவிக்கிறார், மேலும் அவர்கள், இன்பத்தை அனுபவிப்பதற்குறியவற்றை கிருஷ்ணருக்கு வழங்குகின்றனர். ஆம். இதுவே பக்தி. நம்முடைய இருப்பே....... கிருஷ்ணர் அளிக்கிறார்.... சேவகனும் எஜமானரும். எஜமானர், சேவகனின் எல்லாத் தேவைகளையும் அளிக்கிறார் ஆனால் சேவகனுடைய கடமை எஜமானருக்கு சேவை செய்வதுதான். அவ்வளவு தான். ஏகோ ப3ஹூனாம்' யோ வித3தா4தி காமான் நித்யோ நித்யானாம்' சேதனஷ்2 சேதனானாம்... (கட2 உபனிஷதம் 2.2.13). இவைதான் வேதங்கள் அளிக்கும் தகவல்கள்...... கிருஷ்ணர் உங்களுக்கு வாழ்வின் எல்லாத் தேவைகளுக்கும் .தாராளமாகவே அளித்துக் கொண்டிருக்கிறார். எதற்குமே பஞ்சமில்லை. எந்தப் பொருளாதார பிரச்சனையும் இல்லை. நீங்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்ய மட்டும் முயற்சி செய்யுங்கள். பிறகு எல்லாமே பூரணமாகி விடும். காரணம் அவர் ஹ்ருஷிகேஷர். மேலும் நிறையவே..... கிருஷ்ணர் விரும்பினால், தாராளமாகவே அளிக்கக் கூடும். உங்கள் நாட்டில் தாராளமான வளங்கள் இருப்பதைப் போல. மற்ற நாடுகளில்..... நான் சுவிட்சர்லாந்துக்கு சென்றிருந்தேன். அங்கே எல்லாமே இறக்குமதி செய்யப்படுபவை தான். இந்த வளமும் இல்லை. அங்கே கிடைப்பது பனிக்கட்டி மட்டும்தான் (சிரிப்பு) வேண்டிய அளவு பனிக்கட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்த்தீர்களா? அதைப் போலவே அனைத்தும் கிருஷ்ணரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. நீங்கள் பக்தரானால், பிறகு பனிக்கட்டிகள் அல்ல, உணவுப் பதார்த்தங்கள் அளிக்கப்படுவீர்கள். மேலும் நீங்கள் பக்தராக மாட்டீர்களென்றால், பிறகு பணியினால் மறைக்கப்படுவீர்கள்.(சிரிப்பு) அவ்வளவுதான். மேகத்தால் மறைக்கப்பட்டுள்ளது. எல்லாமே கிருஷ்ணரது கட்டுப்பாட்டில் உள்ளது.

எனவே உண்மையில் எதற்குமே பஞ்சமில்லை. பஞ்சம், கிருஷ்ண உணர்விற்குத் தான். எனவே நீங்கள் கிருஷ்ண உணர்வுடையவர் ஆகினால், பிறகு எல்லாம் தாராளமாக கிடைக்கும். எந்தப் பஞ்சமும் இல்லை. இதுதான் வழிமுறை. த்வயா ஹ்ரு'ஷீகேஷ2... இங்கே கூறப்பட்டுள்ளது : த்வயா ஹ்ரு'ஷீ... யதா2 ஹ்ரு'ஷீகேஷ2 க2லேன தே3வகீ (ஸ்ரீமத் பா 1.8.23). இந்த உலகம் ஆபத்துகள் நிறைந்தது. ஆனால் தேவகி..... குந்திதேவி கூறுகிறார், ஆனால் தேவகி உங்கள் பக்தர் என்பதால், நீர் அவரை அவரது பொறாமை பிடித்த சகோதரனால் அளிக்கப்பட்ட துன்பத்திலிருந்து காத்தீர்கள். அந்த சகோதரன் "என் சகோதரியின் எட்டாவது மகன் என்னை கொல்வான்" என்று கேட்ட உடனேயே ஓ, அவன் உடனடியாக தேவகியை கொல்ல தயாராக இருந்தான். எனவே அவன் தேவகியின் கணவனால் சமாதானப்படுத்த பட்டான். பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஒரு கணவனுடைய கடமையாகும். "என் இனிய மைத்துனரே, நீங்கள் ஏன் உங்கள் தங்கை மீது பொறாமை கொள்கிறீர்கள்? எப்படியும், உங்கள் தங்கை உங்களை கொல்லப் போவதில்லை. அவளது மகன் தான் உங்களை கொல்லப் போகிறான். அதுதான் பிரச்சனை. எனவே நான் எல்லா மகன்களையும் உங்களிடம் அளித்து விடுகிறேன், அதன் பிறகு நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்யலாம். ஏன் நீங்கள், புதிதாக திருமணம் ஆகி உள்ள இந்த அப்பாவி பெண்ணை கொல்கிறீர்கள்? அவள் உங்களுடைய இளைய சகோதரி, உங்கள் மகளை போன்றவள். நீங்கள் அவளுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?"

எனவே கம்சனும் சமாதானம் ஆகினான். அவன் வசுதேவரின் வார்த்தைகளை, அதாவது எல்லா மகன்களையும் அவரிடம் அளித்து, "நீ விருப்பப்பட்டால் கொல்லலாம்" எனும் வார்த்தைகளை நம்பினான். அவர் நினைத்தார், " தற்போதைய சூழ்நிலையை சமாளிக்கலாம். மேலும் பிறகு, கம்சன் ஒரு மருமகனைப் பெற்றால், அவன் இந்தப் பொறாமையை மறந்துவிடக் கூடும்" ஆனால் அவன் என்றுமே மறக்கவில்லை. ஆம். அவன் அவர்களை சிறையில் வைத்ததோடல்லாமல், எல்லா மகன்களையும் கொன்றான். ஷு2சார்பிதா ப3த்4ய அதிசிரம் (ஸ்ரீமத் பா 1.8.23). அதிசிரம் என்றால், நீண்ட நாளைக்கு என்று பொருள். எனவே அவர் காப்பாற்றப்பட்டார். இவை எல்லாவற்றிற்கும் பிறகு தேவகி காப்பாற்றப்பட்டார் அதைப்போலவே நாம் தேவகி மற்றும் குந்தியின் நிலையை எடுத்துக் கொண்டோமானால்,.... குந்தி, தனது மகன்களான பஞ்ச பாண்டவர்களுடன் தன் கணவனை இழந்த பிறகு, திருதராஷ்டிரரின் முழு திட்டமும் "எப்படி என்னுடைய இளைய சகோதரனின் இந்த குழந்தைகளை கொல்வது? ஏனெனில், விதிவசத்தால், நான் குருடன் ஆகியதால், எனக்கு அரியணை கிடைக்காமல் போனது. என் இளைய சகோதரனுக்கு கிடைத்தது. இப்போது அவன் இறந்து விட்டான். எனவே என்னுடைய மகன்களுக்காவது இந்த அரியணை கிடைக்க வேண்டும்." இதுதான் அவனுடைய கொள்கை, திருதிராஷ்டிரனுடைய கொள்கை. "எனக்கு கிடைக்காமல் போயிற்று" இதுதான் ஜட இயற்கை "நான் மகிழ்ச்சியாக இருப்பேன். என் மகன்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும். என்னுடைய சமூகம் மகிழ்ச்சியாக இருக்கட்டும். என்னுடைய தேசம் மகிழ்ச்சியாக இருக்கட்டும்." இது விரிவுபடுத்தப்பட்ட சுயநலம். யாருமே கிருஷ்ணரைப் பற்றி, எப்படி கிருஷ்ணர் மகிழ்ச்சியாக இருப்பார் என்று நினைப்பது கிடையாது. எல்லோருமே அவரவரின் சொந்த விஷயத்தையே நினைத்துக் கொண்டுள்ளனர்: "நான் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது, என்னுடைய குழந்தைகளை எப்படி மகிழ்ச்சியாக இருப்பர், என் சமூகம் மகிழ்ச்சியாக இருக்கட்டும், என் தேசம்...." இதுதான் வாழ்வை தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டம். எல்லா இடங்களிலும் இதைக் காணலாம். இதுதான் பௌதிக வாழ்க்கை. யாருமே கிருஷ்ணர் எப்படி மகிழ்ச்சியாக இருப்பார் என்று நினைப்பதில்லை.

எனவேதான் இந்த கிருஷ்ண உணர்வு மிகவும் உயர்ந்தது. பகவத் கீதை பாகவதத்தில் இருந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஹ்ரு'ஷீகேண ஹ்ரு'ஷீகேஷ2-ஸேவனம் (சை சரி மத்ய 19.170), மேலும் உங்களது புலன்களை, புலன்களின் எஜமானரது சேவைக்காக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மிக்க நன்றி.

பக்தர்கள் : ஜெய ஸ்ரீல பிரபுபாதா.