TA/Prabhupada 0903- உங்கள் போதை முடிந்த உடனேயே, போதையில் கண்ட கனவும் முடிந்து விடும்



730418 - Lecture SB 01.08.26 - Los Angeles

மொழிபெயர்ப்பு : "போற்றுதற்குரிய பகவானே, தங்கள் பௌதிக விஷயங்களில் நாட்டம் தீர்ந்து போனவர்களுக்கு மட்டுமே அணுகுவதற்கு எளியவர் ஆவீர். உயர்குடிப் பிறப்பு, சிறந்த வளம், உயர்கல்வி, உடலழகு, போன்றவற்றில் தன்னை உயர்த்திக் கொள்ள முயன்று கொண்டு, பௌதிகப் பாதையில் நடைபோடும் ஒருவனால் உணர்வுபூர்வமாக உம்மை நெருங்க முடியாது."

பிரபுபாதா : எனவே இவை எல்லாம் தகுதியின்மைகள். பௌதிக செல்வங்கள், இத்தகைய...... ஜன்மா , மிக உயர்ந்த குடும்பத்தில் அல்லது நாட்டில் பிறப்பு எடுத்தல். அதாவது அமெரிக்கப் பையன்களும் பெண்களும் ஆகிய உங்களைப்போல, நீங்கள் செல்வ வளமிக்க நாட்டின் தாய் தந்தையருக்கு பிறந்திருக்கிறீர்கள். எனவே ஒருவகையில், இது கடவுளின் கருணையே. இதுகூட.... ஒரு நல்ல குடும்பத்தில், அல்லது நல்ல தேசத்தில் பிறப்பு எடுப்பது, செல்வந்தன் ஆவது, மிகுந்த செல்வத்தை அடைவது, அறிவில், கல்வியில் முன்னேறியவனாக ஆவது , இவை அனைத்தும் பௌதிக விஷயங்கள் தான். மேலும் அழகு, இவையெல்லாம் புண்ணிய காரியங்களினால் கிடைக்கும் பரிசுகள் தான். இல்லையெனில், ஏன் ஒரு ஏழை, யாருடைய கவனத்தையும் ஈர்ப்பதில்லை? ஆனால் ஒரு செல்வந்தர் கவனத்தை ஈர்க்கிறான். ஒரு கல்விமான் கவனத்தை ஈர்க்கிறான். ஒரு முட்டாள் அயோக்கியன், கவனத்தை ஈர்ப்பதில்லை. அதைப்போலத் தான் அழகும் செல்வாக்கும். இவைகள் எல்லாம் பௌதிகமாக மிகவும் அனுகூலமானவையே. ஜன்மைஷ்2வர்ய-ஷ்2ருத (ஸ்ரீமத் பா 1.8.26).

ஆனால், ஒரு மனிதன் இப்படி பௌதீக ரீதியில் செல்வந்தனாக இருந்தால், அவன் செல்வத்தின் போதையில் இருக்கிறான். "ஓ நான் ஒரு செல்வந்தன், நான் ஒரு அறிஞன், என்னிடம் பணம் உள்ளது." என்று போதையூட்டப் படுகிறான். எனவேதான் நாம் அறிவுறுத்துகிறோம்.... நாம் ஏற்கனவே நம்முடைய உடமைகள் காரணமாக போதையில் இருக்கிறோம். எனவே மேலும் போதை தேவையா? பிறகு, இயற்கையாகவே இத்தகைய மக்கள் போதையில் இருக்கிறார்கள். போதை என்றால்..... நீங்கள் மது அருந்தினால், பிறகு போதையில் இருப்பீர்கள். அதுபோல. நீங்கள் வானத்தில் பறப்பீர்கள். நீங்கள் அதைப் போல் நினைத்துக் கொள்வீர்கள் நீங்கள் சொர்க்கத்திற்கே சென்று விட்டார் போல. ஆம். இவையெல்லாம் போதையின் விளைவுகள் தான். ஆனால் போதையில் உள்ள நபருக்கு, தன்னுடைய போதை முடிந்துவிடும் என்பது தெரியாது. அதற்கு ஒரு கால அளவு உள்ளது. அது தொடர்ந்து கொண்டே இருக்காது. இதுதான் மாயை. ஒருவர் போதையில் இருக்கிறான் அதாவது "நான் மிகப் பெரிய செல்வந்தன். நான் பெரும் கல்வி கற்றவன், நான் மிக அழகானவன் நான் மிகுந்த..... நான் உயர்ந்த குடும்பத்தில் உயர்ந்த நாட்டில் பிறந்தவன்." அதெல்லாம் சரி. ஆனால் இந்த போதை எத்தனை நாளைக்கு இருக்கும்?

நீங்கள் அமெரிக்கன் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் செல்வந்தனாக அழகாக இருக்கிறீர்கள். அறிவில் முன்னேறியவராகவும் இருக்கிறீர். மேலும் நீங்கள் அமெரிக்கனாகப் பிறந்ததற்கு பெருமைப்பட்டுக் கொள்ளலாம் ஆனால் இந்த போதை எத்தனை காலம் இருக்கும்? இந்த உடல் முடிந்தவுடனேயே எல்லாம் முடிந்தது. இந்த எல்லா போதையும். அதாவது.... அதேதான். நீங்கள் மதுவை குடிக்கிறீர்கள், போதைக்கு உள்ளாகிறார்கள். ஆனால் போதை தெளிந்த உடனேயே, உங்கள் போதையின் எல்லா கனவுகளும் முடிந்தது. எனவே இந்த போதை, நீங்கள் போதையிலேயே இருந்தால், வானத்திலும் மனத்தின் தளத்திலும் பறந்து கொண்டிருந்தால்.... மனதின் தளம், அகங்காரத்தின் தளம் மற்றும் உடலின் தளம் என்று உள்ளது.

ஆனால் நீங்கள் இந்த உடல் அல்ல, இந்த ஸ்தூல உடலோ அல்லது சூட்சம உடலோ அல்ல. இந்த ஸ்தூல உடல், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பொருட்களால் ஆனது. மேலும் சூட்சும உடலோ மனம், புத்தி அகங்காரம் இவற்றால்ஆனது ஆனால், நீங்கள் இந்த எட்டு பொருட்களுக்கு சொந்தமானவர் அல்ல, அபரேயம் .பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது போல இது கடவுளின் தாழ்ந்த சக்தியே. ஒருவன் மனரீதியாக முன்னேறி இருந்தால் கூட, அவன் தான் தாழ்ந்த சக்தியின் தாக்கத்தில் உள்ளோம் என்பதை அறிவதில்லை. அவனுக்கு தெரியாது. இதுதான் போதை. போதையில் இருக்கும் மனிதனுக்கு தன் நிலை என்ன என்பது தெரியாது. அதை போல. எனவே இந்த செல்வாக்கான நிலை என்பதும் போதை தான். மேலும் நீங்கள் உங்களுடைய போதையை அதிகப்படுத்திக் கொண்டால்... நவீன நாகரிகம் என்பது, நாம் ஏற்கனவே போதையில் உள்ளோம், நம்முடைய போதையை இன்னும் அதிகப் படுத்திக் கொள்வோம் என்பதாகும். நாம் இந்த போதையூட்டும் நிலையில் இருந்து வெளியில் வர வேண்டும். ஆனால் நவீன நாகரீகமோ, "இன்னும் அதிக போதையை எடுத்துக்கொள் இன்னும் அதிக போதையை எடுத்துக்கொண்டு, நரகத்திற்கு செல்." என்பதாக இருக்கிறது இதுதான் நவீன நாகரீகத்தின் நிலை.