TA/Prabhupada 0905 - எல்லாம் கடவுளுக்குத்தான் சொந்தம் என்னும் உண்மை உணர்வுக்கு வாருங்கள்
730418 - Lecture SB 01.08.26 - Los Angeles
எனவே இதனைப் போதையில் இருப்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது. " இது என்னுடைய சொத்து என்று அவர்கள் நினைப்பார்கள். நான் திருடி விட்டேன், நான் சிவப்பிந்தியர்கள் இடமிருந்து இந்த அமெரிக்க நிலத்தை கொள்ளையடித்து விட்டேன். இப்போது இது என்னுடைய சொத்து" ஆனால் அவனுக்கு தான் ஒரு திருடன் என்று தெரியாது. அவன் ஒரு திருடன். ஸ்தேன ஏவ ஸ உச்யதே (ப.கீ 3.12) என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது யார் ஒருவன் கடவுளின் சொத்தை எடுத்துக்கொண்டு தன்னுடையதாக உரிமை கோருகிறானோ,அவன் ஒரு திருடன். எனவே தான் , பக்தர்களாகிய, கிருஷ்ண உணர்வுடன் உள்ளவர்களாகிய நாம் இந்த கம்யூனிச கொள்கையின் கருத்தைக் கொண்டுள்ளோம். நம்மிடம் கிருஷ்ண உணர்வு உள்ள கம்யூனிசக் கொள்கை இருக்கிறது. அது என்ன? எல்லாம் கடவுளுக்குத்தான் சொந்தம். அதாவது அவர்கள் எல்லாம் நாட்டுக்கு தான் சொந்தம் என்று நினைப்பதைப் போல. இந்த கம்யூனிஸ்டுகள், இந்த மாஸ்கோவை சேர்ந்த மாஸ்கோயிஸ்டுகள், அல்லது ரஷ்யர்கள் அல்லது சீனர்கள், அவர்கள் நாட்டை வைத்து நினைக்கிறார்கள். ஆனால் நாம் நாட்டை அடிப்படையாக வைத்து நினைப்பதில்லை. நாம் கடவுளை அடிப்படையாக வைத்து சிந்திக்கிறோம் எல்லாம் கடவுளுக்குத்தான் சொந்தம். அதே கொள்கை. நீங்கள் விரிவு படுத்துங்கள். உங்களுக்கு சிறிது புத்திசாலித்தனம், புத்திசாலித்தனம் மட்டுமே தேவைப்படுகிறது. ஏன் நீங்கள் இந்த நாடு சிலருக்கு மட்டும் சொந்தம் என்று நினைக்கிறீர்கள்? இந்த அமெரிக்க நிலமானது, இங்கிருக்கும் மக்களுக்கு, அமெரிக்க மக்களுக்கு மட்டும் சொந்தம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் ஏன் அவ்வாறு நினைக்கிறீர்கள்? இதை நீங்கள் கடவுளின் சொத்தாக நினைக்க வேண்டும்.
ஒவ்வொரு உயிர் வாழியும் கடவுளின் குழந்தையே. கடவுள்தான் உன்னதமான தந்தை. கிருஷ்ணர் கூறுகிறார், அஹம்' பீ3ஜ-ப்ரத:3 பிதா. "எல்லா உயிர் வாழிகளுக்கும் விதை அளிக்கும் தந்தை நானே" ஸர்வ-யோனிஷு கௌந்தேய (ப.கீ 14.4). "அவர்கள் எந்த வடிவத்தில் வாழ்ந்தாலும், எல்லா உயிர் வாழிகளும் என்னுடைய குழந்தைகளே." அது தான் உண்மை. உயிர் வாழிகளான நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகளே. ஆனால் நாம் அதை மறந்துவிட்டோம். எனவேதான் நாம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு அழகிய குடும்பத்தைப் போல, யாராவது "தந்தை தான் நமக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கிறார் எனவே சகோதரர்களாகிய நாம் ஏன் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும்" என்று தெரிந்து கொள்வதைப் போல. அதைப் போலவே நாமும் கடவுள் உணர்வை ஏற்றுக்கொண்டால், நாம் கிருஷ்ண உணர்வு உடையவர் ஆகினால், இந்த சண்டைகள் எல்லாம் முடிந்துவிடும். நான் அமெரிக்கன், நான் இந்தியன், நான் ரஷ்யன், நான் சீனன், இந்த எல்லாம் முட்டாள் தனங்களும் முடிந்துவிடும். கிருஷ்ண உணர்வு இயக்கமானது மிகவும் அற்புதமானது மக்கள் கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொண்ட உடனேயே இந்த சண்டைகள் எல்லாம்,, இந்த அரசியல் சண்டைகள், நாட்டு சண்டைகள், உடனடியாக முடிந்துவிடும். காரணம் எல்லாம் கடவுளுக்குத்தான் சொந்தம் எனும் உண்மையான உணர்வுக்கு அவர்கள் வருவார்கள். மேலும் குழந்தைகள், ஒரு குடும்பத்தின் குழந்தைகளுக்கு, தந்தையுடையது எடுத்துக் கொள்ளும் உரிமை இருப்பதைப் போல, ஒவ்வொருவரும் கடவுளின் அங்கத் துணுக்கு, அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பதால், அனைவருக்கும் கடவுளின் சொத்தை உபயோகிக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமை, அந்த உரிமை மனிதர்களின் உரிமை மட்டுமல்ல. பகவத் கீதையின் கூற்றுப்படி, அந்த உரிமை எல்லா உயிர்களுக்குமே உள்ளது. அந்த உயிர்வாழி விலங்காகவோ, மரமாகவோ, பறவை, மிருகம், அல்லது பூச்சியாக கூட இருக்கலாம். அதைப் பற்றி கவலை இல்லை. இதுதான் கிருஷ்ண உணர்வு. என் சகோதரன் நல்லவன், நான் நல்லவன். மற்றவரெல்லாம் கெட்டவர்களே. அப்படி நாம் நினைப்பதில்லை.. இப்படிப்பட்ட குறுகிய, முடங்கிய உணர்வை நாம் வெறுக்கிறோம், நாம் இதனை உதைத்து தள்ளுகிறோம். நம்முடைய சிந்தனை :பண்டி3தா: ஸம-த3ர்ஷி2ன: (ப.கீ 5.18). பகவத் கீதையில் நாம் காணலாம்.
- வித்3யா-வினய-ஸம்பன்னே
- ப்3ராஹ்மணே க3வி ஹஸ்தினி
- ஷு2னி சைவ ஷ்2வ-பாகே ச
- பண்டி3தா: ஸம-த3ர்ஷி2ன:
- (ப.கீ 5.18).
பண்டிதன் எனப்படும் ஒருவன், கற்றறிந்தவனாக இருப்பவன், எல்லா உயிர்வாழிகளையும் சமமாக பார்ப்பான். எனவேதான் ஒரு வைஷ்ணவர் மிக்க கருணையுடன் இருக்கிறார். லோகானாம்' ஹித-காரிணௌ. மனிதகுலத்திற்கு உண்மையில் நன்மை பயக்கும் செயலை அவர்களால் செய்ய முடியும். இந்த எல்லா உயிர் வாழிகளும் கடவுளின் அங்க துணுக்கு என்பதை அவர்கள் பார்க்கவும், உணரவும் செய்கிறார்கள். எப்படியோ, அவர்கள் இந்த பௌதிக உலகத்தின் தொடர்பில் விழுந்துவிட்டனர் மேலும் பல்வேறு கர்மாவின் படி, அவர்கள் பல்வேறு உடல்களை அடைந்துள்ளனர். எனவே கற்றறிந்த பண்டிதர் எனப்படுபவன், எந்தவித வித்தியாசமும் பார்க்க மாட்டான். அதாவது, இது ஒரு விலங்கு. இதை கசாப்பு கடைக்கு அனுப்ப வேண்டும். மேலும் இந்த மனிதன், இவன் அதை சாப்பிடுவான்." இல்லை. உண்மையில், கிருஷ்ண உணர்வுள்ள ஒருவன் எல்லோரிடத்தும் கருணையாக இருப்பான். ஏன் அந்த மிருகம் கொல்லப்பட வேண்டும்? எனவேதான் மாமிசம் உண்ணாதிருத்தல் நம்முடைய கொள்கை. மாமிசம் உண்ணக்கூடாது. நீங்கள் மாமிசம் உண்ணக்கூடாது. ஆனால் அவர்கள் கேட்க மாட்டார்கள், "ஓ, இது என்ன முட்டாள்தனம். இதுதான் நம்முடைய உணவு. இதை ஏன் நான் சாப்பிடக் கூடாது?" காரணம் ஏத4மான-மத:3 (ஸ்ரீமத் பா 1.8.26) அவன் போதையில் உள்ள அயோக்கியன். அவன் உண்மையை கேட்டுக் கொள்ள மாட்டான்.