TA/Prabhupada 0906 - உங்களிடம் பூஜ்ஜியங்கள் தான் உள்ளன. கிருஷ்ணரை முன்னால் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ப



730418 - Lecture SB 01.08.26 - Los Angeles

பிரபுபாதா : இந்த நாட்டில், வீதியில் படுத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை, ஏழை மனிதனை, உதவியற்றவனை நான் கொல்ல முடியுமா? நாடு என்னை மன்னிக்குமா? அது போல தான்.. "இல்லை நான் ஒரு ஏழை மனிதனைத்தான் கொன்றேன். அவனால் எந்த உபயோகமும் இல்லை. அவன் சமூகத்திற்கு தேவையற்றவன். எனவே ஏன் அவன் வாழ வேண்டும்?" "நீ மிக ஒரு நல்ல செயலை செய்து இருக்கிறாய்." என்று நாடு என்னை மன்னிக்குமா? இல்லை. அந்த ஏழை மனிதனும், இந்த நாட்டின் ஒரு பிரஜை தான், ஒரு குடிமகன் தான்.. நீங்கள் அவனை கொல்ல முடியாது. ஏன் இந்தக் கொள்கையை விரிவாக்க கூடாது, அதாவது அந்த அப்பாவி மிருகமும், மரங்களும், பறவைகளும், விலங்குகளும் அவைகளும், கடவுளின் குழந்தைகளே. நீங்கள் கொல்ல முடியாது. அதற்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். நீங்கள் தூக்கிலிடப்படு வீர்கள். வீதியில் இருக்கும் ஒரு ஏழை மனிதனை கொல்வதால், நீங்கள் கொல்லப்படுவீர்கள். அவன் ஏழையாக இருந்தாலும் கூட. அதைப் போலத்தான். அதைப்போலவே, கடவுளின் பார்வையில் இத்தகைய வேறுபாடுகள் எதுவும் இல்லை. கடவுளைப் பற்றி பேச என்ன இருக்கிறது, ஒரு கற்றறிந்த பண்டிதனின் பார்வையில் கூட இத்தகைய வேறுபாடுகள் எதுவும் இல்லை. "இவன் ஏழை, இவன் பணக்காரன், இவன் கருப்பு, இவன் வெள்ளை, இது போல..." இல்லை. ஒவ்வொருவரும் உயிர் வாழிகளே. கடவுளின் அங்கத் துணுக்கு.

எனவே எல்லா உயிர் வாழிகளின் ஒரே நலன்விரும்பி, வைஷ்ணவர் தான். அவர்கள் அவற்றை முன்னேற்ற முயற்சி செய்கின்றனர். ஒரு வைஷ்ணவர், எல்லா உயிர்களையும் கிருஷ்ண உணர்வின் தளத்திற்கு உயர்த்த முயற்சி செய்கிறார்.. லோகானாம்' ஹித-காரிணௌ. ரூப கோஸ்வாமி, கோஸ்வாமிகளைப் போல. லோகானாம்' ஹித-காரிணௌ த்ரி-பு4வனே மான்யௌ ஷ2ரண்யாகரௌ. ஒரு வைஷ்ணவருக்கு இவர் இந்தியன், இவர் அமெரிக்கன், என்பது போன்ற கண்ணோட்டம் கிடையாது..... எங்கோ ஒரு முறை, என்னிடம் யாரோ ஒருவர், நீங்கள் ஏன் அமெரிக்காவிற்கு வந்துள்ளீர்கள்? என்று கேட்டனர் நான் ஏன் இங்கு வரக்கூடாது? நான் கடவுளின் சேவகன், மேலும் இது கடவுளுடைய ராஜ்யம். நான் ஏன் இங்கு வரக்கூடாது? வரக்கூடாது என்று தடுப்பது செயற்கையான தாகும். என்னைத் தடுத்தால், பிறகு நீங்கள் பாவச் செயல்களை செய்வீர்கள். அதாவது அரசாங்க அலுவலர்கள் காவலர்கள், யாருடைய வீட்டிற்குள்ளும் யாருடைய வீட்டிற்குள்ளும், நுழையும் உரிமை பெற்றவர்கள். அதைப்போலவே கடவுளின் சேவகர்களும் எங்கும் செல்வதற்கான உரிமை பெற்றிருக்கிறார்கள். யாரும் அவர்களை தடுக்க முடியாது. அப்படி ஒருவன் தடுத்தால், அவன் தண்டிக்கப்படுவார். காரணம் அனைத்தும் கடவுளுக்குத்தான் சொந்தம்.

எனவே இந்த வகையில், நாம் எல்லாவற்றையும் உள்ளபடி காண வேண்டும். இதுதான் கிருஷ்ண உணர்வு. கிருஷ்ண உணர்வு ஒரு முடங்கிப்போன கருத்தல்ல எனவேதான் குந்தி கூறுகிறார்: ஜன்மைஷ்2வர்ய-ஷ்2ருத-ஸ்ரீபி4ர் ஏத4மான-மத:3 புமான் (ஸ்ரீமத் பா 1.8.26). யாரொருவர் போதையை அதிகப் படுத்திக் கொள்கிறார்களோ, இத்தகையவர்கள் கிருஷ்ண உணர்வு உடையவர் ஆக முடியாது. இத்தகையவர்கள் கிருஷ்ண உணர்வு உடையவர் ஆக முடியாது.ஏத4மான-மத:3. காரணம் அவர்கள் போதையில் உள்ளார்கள். ஒரு போதையில் இருப்பவன், அவன் இப்போது முழு போதையில் இருப்பதனால், முட்டாள்தனமாக பேசுவான் யாராவது ஒருவர் அவனிடம் "என் அன்பு சகோதரனே, நீ முட்டாள்தனமாக பேசிக் கொண்டிருக்கிறாய். இதோ உன்னுடைய தந்தை. இதோ உன்னுடைய தாய்." , என்று கூறினால், யார் அதைப் பற்றி கவலைப் படுவார்கள் ?அவன் போதையில் உள்ளான். அதைப் போலவே, இந்த எல்லா அயோக்கியர்களும், போதையில் உள்ள அயோக்கியர்களும், "இதோ கடவுள்" என்று நீங்கள் கூறினால் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. காரணம் போதை எனவேதான் குநதி கூறுகிறார் : த்வாம் அகிஞ்சன-கோ3சரம். எனவே, ஒருவன் இத்தகைய போதையிலிருந்து, வெளியே வந்தால், அது ஒரு நல்ல தகுதி தான். ஜன்மைஷ்2வர்ய-ஷ்2ருத-ஸ்ரீ... நல்ல பிறப்பு, நல்ல செல்வாக்கு, நல்ல கல்வி, நல்ல அழகு. இவற்றையெல்லாம் பயன்படுத்தலாம். அதே நபர் கிருஷ்ண உணர்வு உடையவராக ஆகும்போது........ அமெரிக்க பையன்களும் பெண்களும் ஆகிய நீங்கள் செய்வதைப்போல. நீங்களும் போதையில் இருந்தீர்கள் ஆனால் உங்களுடைய போதை தெளிந்த பிறகு நீங்கள் நல்ல சேவையை, கிருஷ்ண உணர்வினை செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இந்தியா சென்ற போது அவர்கள் ஆச்சரியப்பட்டதை போல. எப்படி இந்த அமெரிக்க பையன்களும், பெண்களும் கடவுள் மேல் இப்படி பித்து பிடித்தவர்கள் ஆனார்கள். காரணம் அது அவர்களுக்கு கற்றுக் கொடுத்தது : "அயோக்கியர்களே, நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள் , ஏனெனில் நீங்கள் மேற்கத்திய நாடுகளைப் பார்த்து நகல் செய்கிறீர்கள். இப்போது பாருங்கள், மேற்கத்திய நாட்டு பையன்களும் பெண்களும் கிருஷ்ண உணர்வில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள், இப்போது நீங்களும் அதை நகல் செய்யுங்கள்." இதுதான் என்னுடைய கொள்கை.

எனவே இது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆம். எனவே எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல பெற்றோர், இதனை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால்....... மேலும் போதையில் இருந்து, அதை (நல்ல பெற்றோர்) பயன்படுத்தி கொள்ளவில்லை என்றால் அது மிக நல்ல ஒரு செல்வம் அல்ல. ஆனால் நீங்கள் இதனை நல்ல காரியத்திற்காக பயன்படுத்தலாம். நீங்கள் உங்களிடம் உள்ள செல்வத்தை கிருஷ்ணரின் சேவைக்காக பயன்படுத்தினால்,, பிறகு அது நல்லதொரு நிலையில் இருக்கிறது. அதே உதாரணம் தான். ஒரு பூஜ்யத்தை போல. பூஜ்ஜியத்துக்கு எந்த மதிப்பும் இல்லை. ஆனால் அந்தப் பூஜ்ஜியத்திற்கு முன்பாக ஒரு ஒன்றை போட்டால், அது உடனே பத்தாகி விடும். உடனே பத்தாகி விடும், இன்னொரு பூஜ்ஜியம் 100, இன்னொரு பூஜ்ஜியம் ஆயிரம். அதைப்போலவே இவைகளும், ஜன்மைஷ்2வர்ய-ஷ்2ருத-ஸ்ரீ..., நீங்கள் போதையில் இருக்கும் வரை இவை எல்லாம் பூஜ்யமே. ஆனால் நீங்கள் கிருஷ்ணரை வைத்த உடனேயே இது பத்து, நூறாக, ஆயிரமாக, லட்சமாக, மாறிவிடும்.

பக்தர்கள் : ஜெய, ஹரி போல் (சிரிப்பு)

பிரபுபாதா : ஆம் இதுதான் வாய்ப்பு. எனவே உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்கப் பையன்களும் பெண்களும் ஆகிய உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களுக்கு பூஜ்ஜியங்கள் கிடைத்திருக்கின்றன. கிருஷ்ணரை வைத்துவிடுங்கள். நீங்கள் பத்து ஆகலாம். சிரிப்பு சரி.

மிக்க நன்றி.

பக்தர்கள்  : ஹரி போல், ஜெய பிரபுபாதா. எல்லா புகழும் பிரபுபாதருக்கே!