TA/Prabhupada 0926 - எந்தவித வியாபார பரிவர்த்தனையும் இல்லை. அதுதான் தேவைப்படுகிறது. கிருஷ்ணர் இந்தவிதமான



730423 - Lecture SB 01.08.31 - Los Angeles

கிருஷ்ணர் மீது நாம் ஏதாவது ஒரு பௌதிக லாபத்திற்காக அன்பு செலுத்தக் கூடாது. "கிருஷ்ணா, எங்களது தினசரி உணவை தாருங்கள். பிறகு நான் உங்கள் மீது அன்பு செலுத்துகிறேன். கிருஷ்ணா எனக்கு இதை வழங்குங்கள். பிறகு நான் உங்கள் மீது அன்பு செலுத்துகிறேன்." என்பதல்ல. இந்த வகையான வியாபார பரிவர்த்தனை இருக்கக்கூடாது. அதுதான் தேவைப்படுகிறது.. கிருஷ்ணர் அந்த வகையான அன்பைத்தான் விரும்புகிறார். எனவே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அந்த நிலை, யா தே தஷா, தஷா.... கிருஷ்ணர், அன்னை யசோதை தன்னை கட்டுவதற்காக கயிறுடன் வருகிறாள் என்பதை பார்த்த உடனேயே, மிகுந்த அச்சம் கொண்ட காரணத்தினால், அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. "ஓ, அன்னை இப்போது என்னைக் கட்டப் போகிறாள்." யா தே தஷாஷ்ரு-கலில அஞ்ஜன. மேலும், அதனால் கண்மை எல்லாம் வழிந்தது. மேலும் ஸம்ப்ரம. தன்னுடைய அன்னையை மிகுந்த மரியாதையுடன், "ஆம், அன்னையே, நான் தவறு செய்துவிட்டேன். கருணையுடன் மன்னித்துக் கொள்ளுங்கள்." என்பது போல பார்த்தார். இதுதான் கிருஷ்ணரின் காட்சி. எனவே, இந்தக் காட்சி குந்தியால் பாராட்டப்பட்டது. மேலும், உடனேயே அவர் தலையை குனிந்து கொண்டார்.

இது கிருஷ்ணருடைய மற்றொரு பக்குவம், அதாவது அவர் பரம புருஷ பகவானாக இருந்தாலும்.... பகவத்கீதையில் அவர் கூறுகிறார்: மத்த: பரதரம்' நான்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய (ப.கீ. 7.7). "எனதன்பு அர்ஜுனா, என்னை விட உயர்ந்தவர் யாரும் இல்லை. நானே மிக உயர்ந்தவன். மத்த: பரதரம்' நான்யத் . என்னைத் தவிர வேறு யாருமில்லை" அந்தப் பரம புருஷ பகவான், அவருக்கு மேலே யாரும் இல்லாதவர், அந்தப் பரம புருஷ பகவான், அன்னை யசோதையின் முன்பு தலைகுனிந்து நின்றார். நினீய, வக்த்ரம்' நினீய. அவர் ஒப்புக்கொள்கிறார்: "எனது அன்பு அன்னையே, ஆம், நான் குற்றவாளி." நினீய வக்த்ரம்' பய-பாவனயா, ஒரு அச்ச உணர்ச்சியுடன் நிற்கிறார்., ஸ்திதஸ்ய. சில சமயம் அன்னை யசோதா, தன் குழந்தை மிகவும் பயந்து போய் இருப்பதை கண்டால், அவளும் சஞ்சலப் படுவாள். காரணம் குழந்தை வருத்தப்பட்டால்..... இது ஒரு உளவியல் தத்துவம் தான். உடனே சில விளைவுகள் மனதில் ஏற்படும். எனவே, அன்னை யசோதா, தன் தண்டனையினால், உண்மையில் கிருஷ்ணர் துன்பப்பட வேண்டும் என்று விரும்பவில்லை. அது கிருஷ்ணர் அல்ல, அது அன்னை யசோதையின் குறிக்கோள். ஆனால் தாய்மை உணர்வால், அவள் மிகுந்த தொந்தரவுகளை உணர்ந்த போது, குழந்தை....

இந்த வழக்கம் இந்தியாவில் இன்னும் இருக்கிறது, குழந்தை அதிகமாக தொந்தரவு செய்தால் அவன் ஓரிடத்தில் கட்டிப்போடப் படுவான். இது மிக சாதாரண விஷயம். எனவே அன்னை யசோதையும் அதை கடைபிடித்தாள். ஸா மாம்' விமோஹயதி. இந்தக் காட்சி தூய பக்தர்களால் பாராட்டப்படுகிறது, அதாவது, உன்னத பரம புருஷரிடம் எத்தகைய உயர்ந்த தன்மை இருந்தால், அவர் மிகச் சரியாக ஒரு குழந்தை போலவே செயல்படுகிறார். அவர் ஒரு குழந்தையைப் போல செயல்பட்டபோது, மிகச்சரியாக அவ்வாறு செயல்படுகிறார். அவர் ஒரு கணவராக, 16000 மனைவிகளுக்கு கணவராக நடந்து கொண்டபோது, மிகச்சரியான கணவனாக நடந்து கொண்டார். அவர் கோபியர்களின் காதலனாக இருந்தபோது, அதையும் மிகச்சரியாக செய்தார். இடை சிறுவர்களின் நண்பனாக இருந்தபோது மிகச்சரியாக அதனை செய்தார்.

இடைச் சிறுவர்கள் அனைவரும் கிருஷ்ணரையே நம்பியிருப்பார்கள். அவர்கள் பனை மரத்தின் பழங்களை சுவைக்க விரும்பினர், ஆனால், அங்கு ஒரு அசுரன் இருந்தான், கர்தபாசுரா, அவன் யாரையும் பனைமர காட்டிற்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் கிருஷ்ணருடைய நண்பர்கள், இடைச் சிறுவர்கள், அவரிடம் வேண்டிக் கொண்டார்கள்: "கிருஷ்ணா, நாங்கள் இந்தப் பழத்தை சுவைக்க விரும்புகிறோம். உன்னால் ஏற்பாடு செய்ய முடியுமா...." "சரி." உடனேயே கிருஷ்ணர் ஏற்பாடு செய்தார். கிருஷ்ணரும் பலராமரும் காட்டுக்குள் சென்றனர், மேலும் அந்த அசுரர்கள், அவர்கள் கழுதையின் வடிவத்தில் இருந்தனர், அதனால், உடனேயே அவர்கள் வந்து தங்கள் பின்னங் கால்களால் கிருஷ்ணரையும், பலராமரையும் எட்டி உதைத்தனர். பலராமர், அவர்களில் ஒருவனை பிடித்து, உடனேயே மரத்தின் மேல் தூக்கி எறிந்ததால் அந்த அசுரர்கள் இறந்தனர்.

மேலும், அந்த நண்பர்கள் கிருஷ்ணருக்கு மிகவும் கடமைப்பட்டவர்கள் ஆயினர். அவர்களைச் சுற்றி நெருப்பு இருந்தது. அவர்களுக்கு எதுவும் தெரியாது. "கிருஷ்ணா" "சரி". கிருஷ்ணர் தயாராக இருந்தார். கிருஷ்ணர் உடனேயே அந்த நெருப்பை விழுங்கினார். பல அசுரர்களும் தாக்கப்பட்டனர். ஒவ்வொரு நாளும், அந்தச் சிறுவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்த உடனேயே, தங்கள் அன்னையரிடம் விளக்குவார்கள். "அம்மா, கிருஷ்ணர் மிகவும் அற்புதமானவன். தெரியுமா. இன்றைக்கு இப்படி நடந்தது." மேலும் அந்த அன்னையும் கூறுவாள் : "ஆம், நம் கிருஷ்ணன் மிகவும் அற்புதமானவன்." மிகவும். அவ்வளவுதான். கிருஷ்ணர், பகவான் கிருஷ்ணர், பரமபுருஷ பகவான், என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். கிருஷ்ணர் அற்புதமானவர். அவ்வளவுதான். மேலும் அவர்களுடைய அன்பு அதிகரிக்கும். கிருஷ்ணருடைய அற்புதமான செயல்களை அதிகம் உணர உணர, அவர்களுடைய அன்பும் அதிகரிக்கும். "அவன் ஒரு தேவனாக இருக்கலாம். சரி." இதுதான் அவர்களுடைய கருத்து. நந்த மகாராஜா, தன் நண்பர்களிடையே பேசிக்கொண்டிருக்கும்போது அந்த நண்பர்கள் கிருஷ்ணரைப் பற்றி கூறுவார்கள்... "ஓ, நந்த மகாராஜா, உங்கள் குழந்தை கிருஷ்ணன் மிகவும் அற்புதமானவன்." "ஆம். எனக்கும் தெரியும். அவன் ஏதாவது ஒரு தேவனாக இருக்கலாம்." அவ்வளவுதான். "இருக்கலாம்." அதுவும் கூட நிச்சயமில்லை. (சிரிப்பு) எனவே, விருந்தாவன வாசிகள், அவர்கள், யார் கடவுள், யார் கடவுள் இல்லை, என்பதை பற்றி கவலைப்படவில்லை. அது அவர்களுடைய வேலை அல்ல. ஆனால் அவர்களுக்கு கிருஷ்ணர் வேண்டும். மேலும் அவர்கள் கிருஷ்ணர் மீது அன்பு செலுத்தினார்கள். அவ்வளவுதான்.