TA/Prabhupada 0925 - மன்மதன் அனைவரையும் மயக்குபவன். மேலும் கிருஷ்ணரோ மன்மதனையும் மயக்குபவர்



730423 - Lecture SB 01.08.31 - Los Angeles

மொழிபெயர்ப்பு: "போற்றுதற்குரிய பகவான் கிருஷ்ணரே, நீர் குறும்பு செய்த பொழுது, உம்மை தண்டிப்பதற்காக யசோதை ஒரு கயிற்றினால் கட்டி வைத்தாள், அப்போது துன்பம் தாளாது, உமது விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் உமது விழிகளில் தீட்டி இருந்த மையை கரைய செய்தது. அச்சத்தின் உருவமே உம்மை கண்டு அஞ்சுகின்ற போது நீர் அப்போது அஞ்சிய அக்காட்சி என்னை குழம்பு செய்கிறது."

பிரபுபாதர்: இந்த லீலை கிருஷ்ணரின் மற்றொரு செல்வத்தினை எடுத்துக் காட்டுகின்றது. கிருஷ்ணரிடம் ஆறு செல்வங்கள் முழுமையாக உள்ளன. எனவே இந்தச் செல்வம் அழகு, அழகின் செல்வம். கிருஷ்ணரிடம் ஆறு செல்வங்கள் உள்ளன. அவை பொருள்வளம், உடல் பலம், செல்வாக்கு, ஞானம், துறவு மற்றும் அழகு. எனவே இந்தச் செல்வம், கிருஷ்ணருடைய அழகின் செல்வம். கிருஷ்ணர் எல்லோரும்....

நம்மைப்போல, நாம் கிருஷ்ணருக்கு பயபக்தியுடன் நமது வந்தனங்கள் அர்ப்பணிக்கிறோம். ஆனால் இங்கு யாரும் கிருஷ்ணரிடம் கயிறுடன் வருவதில்லை: "கிருஷ்ணா, நீ ஒரு குற்றவாளி. நான் உன்னை கட்டி போடுகிறேன்." இப்படி யாரும் வருவதில்லை (சிரிப்பு) இது மிகப் பக்குவமான பக்தரின் மற்றொரு தனிச்சிறப்பு. ஆம். கிருஷ்ணர் விரும்புகிறார். காரணம் அவர் எல்லா செல்வ வளமும் முழுமையாக நிறைந்தவர்....... இதுவும் மற்றொரு செல்வவளமே. அணோர் அணீயான் மஹதோ மஹீயான். பெரியவற்றுள் பெரியது, மற்றும் சிறியவற்றுள் சிறியது. இதுவும் ஒரு செல்வம்.

எனவே குந்திதேவி, கிருஷ்ணரின் செல்வத்தைப் பற்றி சிந்திக்கிறாள், ஆனால், அவள் யசோதையின் நிலையை எடுத்துக் கொள்வதைப் பற்றி யோசிக்கவில்லை. அது சாத்தியமில்லை. குந்திதேவி, கிருஷ்ணருடைய அத்தையாக இருந்தாலும், அவளுக்கு அத்தகைய சலுகைகள் எதுவும் இல்லை..... அந்தச் சலுகைகள் குறிப்பாக அன்னை யசோதைக்கு அளிக்கப்பட்டிருந்தது. அவள் மிகவும் முதிர்ந்த பக்தர் என்பதால், பரம புருஷ பகவானையே கண்டிக்கும் உரிமையை அவர் பெற்றிருந்தார். இது தனிச் சிறப்பு. எனவே குந்திதேவி அன்னை யசோதைக்கு அளிக்கப்பட்ட சலுகையை பற்றி மட்டும் நினைத்துக் கொண்டிருந்தாள், அதாவது அவள் எந்த அளவுக்கு அதிர்ஷ்டசாலியாக இருந்தால், அச்சத்தின் உருவமே அஞ்சும் படியான, பரம புருஷ பகவானை மிரட்டும் அளவிற்கு, சலுகை அளிக்கப்பட்டவளாகவும் இருந்தாள். பீர் அபி யத் பிபேதி (ஸ்ரீ. பா. 1.8.31). யார் கிருஷ்ணரை கண்டு அச்சப் படுவதில்லை? அனைவருமே. ஆனால் கிருஷ்ணர், அன்னை யசோதையிடம் அச்சம் கொள்கிறார். இதுதான் கிருஷ்ணரின் சிறந்த தன்மை.

கிருஷ்ணரது மற்றொரு பெயரான மதன மோகனன் என்பதைப்போல. மதன என்றால் மன்மதன். மன்மதன் எல்லோரையும் மயக்குகிறான். மன்மதன். மேலும் கிருஷ்ணர் மன்மதனையே மயக்குபவர். எனவே அவருடைய பெயர் மதன மோகனன். மன்மதனையே மயக்கும் அளவிற்கு அவர் மிகவும் அழகானவர். ஆனால் அதே சமயம் மற்றொரு பக்கம், கிருஷ்ணர் மன்மதனை மயக்கும் அளவிற்கு மிக அழகாக இருந்தாலும், அவர் ஸ்ரீமதி ராதாராணியால் மயக்கப்படுகிறார். எனவே ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் மதன-மோகன-மோகினி. கிருஷ்ணர் மன்மதனை மயக்குபவர், மேலும் ராதாராணியோ, மயக்குபவரையே மயக்குபவர். இவையெல்லாம் கிருஷ்ண உணர்வின் மிக உயர்ந்த ஆன்மீக புரிதல்கள். இது கட்டுக் கதையோ, கற்பனையோ அல்ல. இவை எல்லாம் உண்மைகள். இவையெல்லாம் உண்மைகள். மேலும் ஒவ்வொரு பக்தரும் உண்மையில் முன்னேற்றம் அடைந்தால் இத்தகைய சலுகைகளை பெறலாம். நீங்கள்.....

அன்னை யசோதைக்கு அளிக்கப்பட்ட சலுகை, மற்றவர்களுக்கு அல்ல என்று நினைக்காதீர்கள்.... அதைப்போலவே இல்லை என்றாலும், அனைவரும் அந்த சலுகையைப் பெறலாம். நீங்கள் கிருஷ்ணர் மீது உங்கள் குழந்தையை போல அன்பு செலுத்தினால், பிறகு நீங்களும் அத்தகைய சலுகையைப் பெறலாம். ஏனெனில் அன்னைக்கு.... ஏனெனில் அன்னையே குழந்தையை அதிகம் விரும்புபவர். யாருமே.... இந்த பௌதிக உலகத்தில் அன்னையின் அன்பிற்கு எந்த ஒப்பீடும் இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல். இந்த பௌதிக உலகத்தில் கூட. பொதுவாக அன்னையின் அன்பு பதிலுக்கு எதையும் எதிர்பாராதது. இந்த பௌதிக உலகம் மிகுந்த களங்கம் அடைந்ததாக இருப்பதால் ஏதாவதொரு அன்னை கூட நினைக்கிறாள்: "இந்தக் குழந்தை வளர்வான். இவன் ஒரு பெரிய மனிதன் ஆவான். இவன் நிறைய பணத்தை சம்பாதிப்பான் மேலும் அதனை நான் பெறுவேன்." இப்படி சில எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. ஆனால் கிருஷ்ணர் மீது அன்பு செலுத்தும் போது, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை, இதுவே தூய அன்பு. அன்யாபிலாஷிதா-ஷூன்யம் (பக்தி-ரஸாம்ரு'த-ஸிந்து 1.1.11) எல்லாவித பௌதிக லாபத்தில் இருந்து விடுபட்டது.