TA/Prabhupada 0927 - நீங்கள் எப்படி கிருஷ்ணரை ஆராய முடியும்? அவர் எல்லையற்றவர். இது அசாத்தியமானது



730423 - Lecture SB 01.08.31 - Los Angeles

எனவே கிருஷ்ணரை முதலில் ஆராய வேண்டும் என்று நினைப்பவர்கள், அவர் கடவுளா என்று ஆராய நினைப்பவர்கள், முதல்தர பக்தர்கள் அல்ல. கிருஷ்ணர் மீது தன்னிச்சையான அன்பு கொண்டிருப்பவர்களே முதல்தர பக்தர்கள். நீங்கள் எப்படி கிருஷ்ணரை ஆராய முடியும்? அவர் எல்லையற்றவர். இது அசாத்தியமானது. இந்த வேலை..... நாம் கிருஷ்ணரை ஆராய்வதற்கு, தெரிந்து கொள்வதற்கு, முயற்சிக்க கூடாது. இது அசாத்தியமானது. நம்முடைய உணரும் திறன் எல்லைக்குட்பட்டது, நம்முடைய புலன்களின் சக்தியும் வரம்பிற்குட்பட்டது. நாம் எப்படி கிருஷ்ணரை ஆராய்வது? இது சாத்தியமே அல்ல. கிருஷ்ணர் தன்னை எந்த அளவு வெளிப்படுத்திக் கொள்கிறாரோ, அதுவே போதுமானது. முயற்சி செய்யாதீர்கள். இதுவல்ல....

நேதி நேதி. மாயா வாதிகளை போல, அவர்கள் கடவுள் எங்கு என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள், எங்கே கடவுள், யார் கடவுள். நேதி, இதுவல்ல. வெறும் "இதுவல்ல" மட்டும் தான். அவர்களது தத்துவமே "இதுவல்ல" என்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும் அது என்ன, அது அவர்களுக்கு தெரியாது. பெயரளவு விஞ்ஞானிகளும் கூட, இறுதியான மூலப் பொருளை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்களுடைய வழிமுறை "இதுவல்ல." அவ்வளவே. அவர்கள் எந்த அளவு முன்னேறிக் கொண்டிருக்கிறார்களோ, அந்த அளவிற்கு "இதுவல்ல" என்பதைத் தான் கண்டு பிடிக்கிறார்கள், அப்படி என்றால், இது என்ன? அதை அவர்கள் என்றும் கண்டுபிடிக்க மாட்டார்கள். அதை அவர்கள் என்றும் கண்டுபிடிக்க மாட்டார்கள். "இதுவல்ல" என்று அவர்களால் சொல்ல முடியும். ஆனால் அது என்ன என்று சொல்ல அவர்களுக்கு சாத்தியமாகாது. அது சாத்தியமாகாது. ‌

பந்தாஸ் து கோடி-ஷத-வத்ஸர-ஸம்ப்ரகம்யோ
வாயோர் அதாபி மனஸோ முனி-புங்கவானாம்
ஸோ 'ப்யஸ்தி யத் ப்ரபத-ஸீம்ன்யவிசிந்த்ய-தத்த்வே
கோவிந்தம் ஆதி-புருஷம்' தம் அஹம்' பஜாமி
(பி.ஸ. 5.34).

கிருஷ்ணரைப் பற்றிக் கூற என்ன இருக்கிறது, ஜடப் பொருட்களை கூட அவர்களால் அறிய முடியாது. அவர்கள் சந்திர கிரகத்திற்கு செல்ல முயற்சி செய்கிறார்கள். உண்மையில் அவர்களுக்கு அது என்ன என்பதே தெரியாது. உண்மையில். பிறகு ஏன் அவர்கள் திரும்பி வருகிறார்கள்? அவர்களுக்கு உண்மையில் அது என்ன என்பது சரியாகத் தெரிந்து இருந்தால், அவர்கள் அங்கேயே இந்நேரம் வசிக்க ஆரம்பித்திருப்பார்கள். கடந்த 20 ஆண்டுகளாக அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். "இது அல்ல என்பதை மட்டும் தான் பார்க்கிறார்கள். அங்கே எந்த உயிர்வாழியும் இல்லை. நாம் வாழ்வதற்கு அங்கே சாத்தியங்கள் இல்லை." பலப் பல "இல்லைகள்" அப்படி என்றால் ஆம் என்பது எது? இல்லை, .அவர்களுக்கு அது தெரியாது. மேலும் அது ஒரு கிரகம் அல்லது ஒரு நட்சத்திரம். சந்திர கிரகம் ஒரு நட்சத்திரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

விஞ்ஞானிகள் நட்சத்திரங்களை எல்லாம் சூரியன்கள் என்று சொல்லுகின்றனர், ஆனால் நமது தகவல்களின்படி, பகவத் கீதையின் படி: நக்ஷத்ராணாம் யத ஷஷீ. ஷ ஷீ என்றால் சந்திரன், பல நட்சத்திரங்களை போன்றது. சந்திரனின் நிலை என்ன? சந்திரன், சூரியனின் பிரதிபலிப்பால் வெளிச்சமாக உள்ளது. ஆக, நம்முடைய கணக்கீட்டின்படி சூரியன் ஒன்றுதான். ஆனால், நவீன விஞ்ஞானிகள் பலப்பல சூரியன்கள், நட்சத்திரங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். நாம் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. இது ஒரே ஒரு பிரபஞ்சம் மட்டும் தான். பலப்பல எண்ணற்ற சூரியன்கள் உள்ளன, ஆனால் ஒவ்வொரு சூரியனிலும், ஒவ்வொரு பிரபஞ்சத்திலும், ஒரு சூரியன் தான் உள்ளது, பல என்பதல்ல. எனவே இந்தப் பிரபஞ்சம், நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும், குறைபாடுடைய கண்ணோட்டத்தில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும்.... நமக்கு தெரியாது. எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன, எத்தனை கிரகங்கள் இருக்கின்றன, என்று நமக்கு எண்ணிக்கை தெரியாது. இது அசாத்தியம். ஆக நம் கண்முன் இருக்கும் பௌதிக விஷயங்களை, நம்மால் இன்னும் எண்ண முடியவில்லை, புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், இவற்றை படைத்த உன்னதமான பரமனை பற்றி பேச என்ன இருக்கிறது? இது சாத்தியமல்ல.

எனவேதான் பிரம்ம சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது: பந்தாஸ் து கோடி-ஷத-வத்ஸர-ஸம்ப்ரகம்ய: (பி.ச. 5.34). பந்தாஸ்... கோடி-ஷத-வத்ஸர. விண்வெளி எல்லையற்றது. இப்போது நீங்கள் உங்கள் விமானத்தையோ அல்லது ஸ்புட்னிக் அல்லது ராக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.... அவர்கள் பல விஷயங்களை கண்டுபிடித்துள்ளனர். நீங்கள் செல்லுங்கள். எவ்வளவு நேரத்திற்கு அல்லது நாட்களுக்கு அல்லது வருடங்களுக்கு செல்ல வேண்டும்? இல்லை. பந்தாஸ் து கோடி-ஷத-வத்ஸர. பல கோடிக் கணக்கான வருடங்கள், கோடி-ஷத-வத்ஸர, உங்கள் வேகத்தில் செல்லுங்கள். பந்தாஸ் து கோடி-ஷத-வத்ஸர-ஸம்ப்ரகம்ய: மேலும் எப்படிச் செல்வது? இப்போது காற்றின் வேகத்தில் விமானங்கள் பயணிக்கிறது. இந்த வேகம் அல்ல, மணிக்கு 500 மைலோ அல்லது 1000 மைலோ, அல்ல. காற்றின் வேகம் என்ன?

ஸ்வரூப தாமோதர: நொடிக்கு 196,000 மைல்.

பிரபுபாதர்: நொடிக்கு 96 மைல்கள். இவை வேத இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன, அதாவது, நீங்கள் காற்றின் வேகத்தில் நொடிக்கு 96,000 மைல் வேகத்தில் பயணித்தால்.... எனவே நீங்கள் காற்றின் வேகத்தை கற்பனை செய்துகொள்ளலாம். ஸோ பந்தாஸ் து கோடி-ஷத-வத்ஸர-ஸம்ப்ரகம்யோ வாயோர் அதாபி (பி.ச. 5.34). காற்றின் வேகத்தில் செல்லும் விமானத்தில். அதுவும் காற்றின் வேகத்தில் கோடிக்கணக்கான வருடங்களுக்கு. காற்றின் வேகத்தில் என்றுமட்டும் குறிப்பிடப்படவில்லை, மனதின் வேகத்தில் கூட.