TA/Prabhupada 0936 - "வருங்காலத்தில்" என்று உறுதி மட்டும் கொடுக்கின்றனர். "ஆனால் இப்போது என்ன அளிக்கிறீர்கள



730425 - Lecture SB 01.08.33 - Los Angeles

நம்முடைய..... தற்போதைய நொடியில், நாம் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கிறோம். நோய்வாய்ப்பட்ட நிலை என்ன என்பதையும், ஆரோக்கியமான நிலை என்ன என்பதையும் அவர்கள், அந்த அயோக்கியர்கள் அறிய மாட்டார்கள். அவர்களுக்கு எதுவும் தெரியாது, இருந்தாலும் தங்களை பெரும் விஞ்ஞானிகளாக, தத்துவவாதிகளாக காட்டிக் கொள்கிறார்கள்.... "நான் இறக்க விரும்பவில்லை. பிறகு ஏன் மரணம் என் மீது திணிக்கப்படுகிறது?" இதனை அவர்கள் கேட்க மாட்டார்கள். இப்படிப்பட்ட கேள்வியே இல்லை. இதற்கு எந்த தீர்வும் இல்லை. இருந்தும் அவர்கள் விஞ்ஞானிகள். என்ன வகையான விஞ்ஞானிகள்? நீங்கள்.....

விஞ்ஞானம் என்றால், நீங்கள் அறிவில் முன்னேறி, உங்கள் வாழ்வின் துன்ப நிலை குறைக்கப்பட வேண்டும். இதுதான் விஞ்ஞானம். இல்லையென்றால், இது என்ன விஞ்ஞானம்? அவர்கள் வெறுமனே உறுதி கூறுகிறார்கள்; "வருங்காலத்தில்." "ஆனால் நீங்கள் இப்போது என்ன அளிக்கிறீர்கள், ஐயா?" "இப்போது நீங்கள் துன்பப்படுகிறீர்கள்-இப்போது துன்பப்படுவதை போல துன்பப்பட்டுக் கொண்டே இருங்கள். வருங்காலத்தில் நாங்கள் ஏதாவது வேதியல் பொருளை கண்டுபிடிப்போம்." இல்லை. உண்மையில் ஆத்யந்திக-து:க-நிவ்ரு'த்தி. ஆத்யந்திக, இறுதியாக. ஆத்யந்திக என்றால் இறுதியாக. துக்க என்றால் துன்பங்கள். அதுதான் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஆத்யந்திக-துக என்றால் என்ன என்று தெரியாது. துக்க என்றால் தூக்கம். ஆத்யந்திக-துக பகவத்கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இதோ ஆத்யந்திக-துக, ஐயா." இது என்ன? ஜன்ம-ம்ரு'த்யு-ஜரா-வ்யாதி (ப.கீ. 13.9). பிறப்பு, இறப்பு, மூப்பு, மற்றும் நோய்.

எனவே இந்தத் துன்பங்களை மறையச் செய்யவோ, அல்லது குறையச் செய்யவோ, நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? ஆக, அப்படி ஒரு விஷயம் இந்த பௌதிக உலகத்தில் இல்லை. ஆத்யந்திக-து:க-நிவ்ரு'த்தி. எல்லா வகையான துன்பங்களுக்கும் இறுதி தீர்வு பகவத்கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது என்ன?

மாம் உபேத்ய கௌந்தேய
து:காலயம் அஷாஷ்வதம்
நாப்னுவந்தி மஹாத்மான:
ஸம்'ஸித்திம்' பரமாம்' கதா:
(ப.கீ. 8.15).
எனவே நீங்கள் இதை எல்லாம் படிக்க வேண்டும். உங்களிடம் பாகவதம், எல்லாவற்றுக்குமான விளக்கம் உள்ளது. இது அத்யந்திக-துக-நிவ்ருத்தி எல்லாத் துன்பங்களுக்கும் இறுதி தீர்வு. அது என்ன? மாம் உபேத்ய ."என்னை அணுகுபவன் அல்லது என்னிடம், எனது வீடுபேற்றை அடை வருபவன்." கடவுள் யார் என்பதை பற்றியும், ஒருவரால் இறைவனது வீடுபேற்றை அடைய முடியுமா, என்பதைப் பற்றியும் அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை. இது நடைமுறை விஷயம் தானா இல்லையா. எந்த அறிவும் இல்லை. வெறும் மிருகங்களைப் போல. அவ்வளவுதான். எந்த ஞானமும் இல்லை. அவர்கள் வேண்டுகிறார்கள், "ஓ, கடவுளே, எங்களுக்கு எங்கள் உணவைத் தாரும்." இப்போது அவரிடம் கேளுங்கள்: "கடவுள் என்றால் என்ன?" அவரால் விளக்க முடியுமா? இல்லை. பிறகு யாரிடம் கேட்கிறார்கள்? காற்றிலா? நான் வேண்டுகிறேன் என்றால், நான் ஒரு கோரிக்கை வைத்தால், அதற்கு யாராவது ஒரு நபர் இருக்க வேண்டும். ஆக, எனக்கு அந்த நபர் யார் என்பதும் யாரிடம் கோரிக்கையை சமர்ப்பிப்பது என்பதும் தெரியவில்லை. வெறுமனே.... அவர்கள், அவர் வானத்தில் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். வானத்தில் பல பறவைகள் கூட இருக்கின்றன, (சிரிப்பு) ஆனால் அவை கடவுள் அல்ல. பார்த்தீர்களா? அவர்களுக்கு எந்த ஞானமும் இல்லை, எந்த ஞானமும் இல்லை. குறைபாடுள்ள ஞானம். மேலும் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள்: விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், பெரும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், மற்றும்... எல்லாம் குப்பை, எல்லாம் குப்பை. ஒரே புத்தகம் ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை தான். எல்லாம் குப்பை. பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது:

தத்-வாக்-விஸர்கோ ஜநதாக-விப்லவோ

யஸ்மின் ப்ரதி-ஷ்லோகம் அபத்தவத்யபி
நாமான்யனந்தஸ்ய யஷோ 'ங்கிதானி யத்
ஷ்ரு'ண்வந்தி காயந்தி க்ரு'ணந்தி ஸாதவ
(ஸ்ரீ. பா. 1.5.11).

மேலும் மற்றொரு பக்கம்: ந யத் வசஷ் சித்ர-பதம்' ஹரேர் யஷோ (ஜகத்-பவித்ரம்') ப்ரக்ரு'ணீத கர்ஹிசித் தத் வாயஸம்' தீர்தம்... (ஸ்ரீ. பா. 1.5.10). தத் வாயஸம்' தீர்தம். இறைவனைப் பற்றிய ஞானத்துடன் தொடர்பில்லாத எந்த இலக்கியமும், தத், தத் வாயஸம்' தீர்தம். காக்கைகள் கூடும் ஒரு இடத்தை போலத்தான். காக்கைகள் எங்கு கூடும்? குப்பைமேட்டில். மேலும் அன்னப்பறவைகள், வெண்மையான அன்னப்பறவைகள், தூய்மையான, நல்ல, தண்ணீர் நிறைந்த, பறவைகள் இருக்கும் பூங்காக்களில் இன்பம் துய்க்கும்.