TA/Prabhupada 0939 - 64 முறை மணந்த ஒரு கணவனை யாரும் மணந்து கொள்ள மாட்டார்கள்



730427 - Lecture SB 01.08.35 - Los Angeles

பக்தர்: மொழிபெயர்ப்பு: "வேறு சிலரோ பௌதிகத் துன்பத்தில் உழலும் பந்தப்பட்ட ஆத்மாக்கள் பயன்பெறுவதற்காகவும், விடுதலை பெறுவதற்காகவும், கேட்டல், நினைத்தல், பிரார்தித்தல், என்னும் பக்தித் தொண்டிற்கு புத்துயிர் அளிப்பதற்காகவும் நீர் அவதரித்துள்ளீர் என்று கூறுகின்றனர்." (SB 1.8.35)

பிரபுபாதர்: அஸ்மின் பவே. அஸ்மின் என்றால் "இது." படைப்பு, பவே என்றால் படைப்பு. பவ, பவ என்றால், "நீ ஆவாய் ஆக". "நீ ஆவாயாக" என்றாலே, நீ மறைவாய் என்றும் பொருளாகும். நீ ஆவது என்பதைப் பற்றி கேள்வி எழுந்த உடனேயே நீ மறையவும் செய்வாய். எது ஒன்று பிறந்தாலும் அது இறந்தாக வேண்டும். இது இயற்கையின் சட்டம். பெயரளவு விஞ்ஞானிகள், அவர்களுடைய விஞ்ஞான ஆராய்ச்சியினால் மரணத்தை நிறுத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் பிறந்த எதுவும் இறக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிவதில்லை. ஜன்ம-ம்ரு'த்யு. இது ஒன்றை ஒன்று சார்ந்தது. மேலும் பிறக்காத எதுவும் இறக்காது. ஜடம் பிறக்கிறது. எந்த ஜடப் பொருளும் பிறக்கிறது. ஆனால் ஆத்மா பிறப்பதில்லை. எனவே தான் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது : ந ஜாயதே ந ம்ரியதே வா கதாசின் (ப.கீ. 2.20). ஆத்மா பிறப்பதே இல்லை, எனவே இறப்பதும் இல்லை.

இப்போது, பவே 'ஸ்மின். பவ, இந்த பவ என்றால் பௌதிக உலகம், பிரபஞ்சத் தோற்றம். பவே 'ஸ்மின் க்லிஷ்யமானானாம். இந்த பௌதிக உலகில் இருக்கும் யாரும் செயல்பட்டாக வேண்டும். இதுதான் பௌதிக உலகம். சிறைச்சாலையில், அவன் உட்கார வைக்கப்பட்டு, மாப்பிள்ளையைப் போல மதிக்கப்படுவான் என்பதற்கு சாத்தியமில்லை. இல்லை. எங்கள் நாட்டில் மாப்பிள்ளை மிகவும் மதிக்கப்படுவான். மதிக்கப்படுவான் என்றால் முகஸ்துதி செய்யப்படுவான். பெண்ணை விவாகரத்து செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக. எனவே யாரும் எதிர்பார்க்கக் கூடாது... இந்தியாவில், நாங்கள் மாப்பிள்ளையைப் பற்றி ஏதாவது வேடிக்கையாக பேசுவோம். முன்பு..... இப்போதுகூட பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முறை இருக்கிறது. அது தந்தையின் பொறுப்பு. அதன் பெயர் கன்யா-தானம். தந்தை தன் மகனுக்கு மணம் முடிக்காமல் இருக்கலாம். அது மிகப்பெரிய பொறுப்பு அல்ல. ஆனால் ஒரு மகள் இருந்தால், அவளுக்கு திருமணம் முடிக்க வேண்டியது தந்தையின் கடமை. முன்பு, அது 10 வயதாக, 12 வயதாக, 13 வயதாக இருந்தது. அதைவிட அதிகம் இல்லை. அதுதான் முறை. அதுதான் வேத முறை. கன்யா. கன்யா என்றால் பூப்படைவதற்கு முன். கன்யா. எனவே கன்யா தானம். அவள் யாருக்காவது தானமாக அளிக்கப்பட வேண்டும். புலினா பிராமணர்கள், என்னும் மிக மதிப்பு வாய்ந்த சமூகத்தில், ஒரு தகுதி வாய்ந்த மாப்பிள்ளையை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். எனவே, முற்காலத்தில், திருமணம் செய்து கொள்வதால் மட்டுமே ஒரு கனவான், ஒரு வியாபாரி ஆகிவிட முடியும். என் இளமைப் பருவத்தில், நான் ஒரு மாணவனாக, பள்ளி மாணவனாக இருந்தபோது, எனக்கு ஒரு நண்பன் இருந்தான், அவன் என்னை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அங்கே நான் ஒரு கணவான் புகைத்துக் கொண்டிருப்பதை பார்த்தேன், மேலும் என் நண்பன் என்னிடம் கூறினான், "இவர் யார் என்று உனக்கு தெரியுமா?" நான் கேட்டேன் "ஓ, எனக்கு எப்படி தெரியும்?" அவன் கூறினான்," அவர் என் அத்தையின் கணவர், என் அத்தை இவருடைய 64ஆவது மனைவி." 64ஆவது. இந்த புலினா பிராமணர்கள், அவர்களது வேலையே அப்படித்தான் இருந்தது. எங்காவது திருமணம் செய்துகொண்டு, சிலநாள் தங்கி, பிறகு மற்றொரு மனைவியிடம் சென்று, பிறகு மற்றொரு மனைவிடம் செல்வது, பிறகு மற்றொரு மனைவியிடம் செல்வது. வெறுமனே மனைவியிடம் செல்வது, இதுதான் வேலை. இது நாம் பார்த்த ஒரு சமூகப் பழக்கம். இப்போது இந்த விஷயங்கள் எல்லாம் முடிந்துவிட்டன. 64 முறை மணந்து கொண்ட ஒரு கணவனை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். (சிரிப்பு) ஆனால் இது நடந்தது. அந்த ஜாதியில் மாப்பிள்ளைகள் பெரிதும் மதிக்கப்படுபவர். பல கதைகள் உள்ளன. நாம் நமது நேரத்தை அந்த வகையில் வீணடிக்கக் கூடாது.(சிரிப்பு)