TA/Prabhupada 0938 - இயேசு கிறிஸ்து, அவரிடம் எந்த குற்றமும் இல்லை. ஒரே குற்றம், அவர் கடவுளைப் பற்றி பிரச்சார



730425 - Lecture SB 01.08.33 - Los Angeles

பிரபுபாதர்: ஒரு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அசுரர்கள் எனப்படுகிறார்கள். அவர்கள் ஸுர-த்விஷாம். அவர்கள் எப்போதும் பக்தர்கள் மீது பொறாமை கொண்டு உள்ளார்கள். அவர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பிரகலாத மகாராஜா மற்றும் அவரது தந்தை ஹிரண்யகசிபுவை போல இரணியகசிபு, பிரகலாத மகாராஜாவின் தந்தை, ஆனால், பிரகலாத மகாராஜா பக்தர் என்பதால், அவன் பொறாமை கொண்டான். இதுதான் அசுரர்களுடைய இயற்கை. தன்னுடைய சொந்த மகனை கொல்லும் அளவிற்கு பொறாமை கொண்டவனாக இருந்தான். அந்தச் சிறுவனின் ஒரே தவறு, அவன் ஹரே கிருஷ்ணா ஜபித்துக் கொண்டிருந்தான். இதுதான் அவனுடைய தவறு. அந்தத் தந்தையினால்..... எனவேதான் ஸுர-த்விஷாம், என்று அழைக்கப்படுகின்றனர், எப்போதும் பக்தர்கள் மீது பொறாமை கொண்டவர்கள். அசுரன் என்றால் எப்போதும் பக்தர் மீது பொறாமை கொண்டவன். இந்த பௌதிக உலகம் , மிகுந்த தொந்தரவுகள் நிறைந்த இடம்.....

ஒரு நல்ல உதாரணம் இருக்கிறது. ஏசு கிறிஸ்துவைப் போல, அவரின் குற்றம் என்ன? ஆனால் இந்த ஸுர-த்விஷாம், பொறாமை மிகுந்த நபர்கள் அவரை கொன்று விட்டனர். மேலும் நாம், அவருடைய குற்றம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால், எந்தக் குற்றமும் இல்லை. ஒரே குற்றம் அவர் கடவுளைப் பற்றி பிரச்சாரம் செய்தார். மேலும் அவர் பல எதிரிகள் கண்டார். கொடூரமாக அவர் சிலுவையில் அறையப்பட்டார். நீங்கள் இதனை எப்போதும் காணலாம், ஸுர-த்விஷாம். எனவே இந்த ஸுர-த்விஷாம், இவர்களை கொல்ல கிருஷ்ணர் வருகிறார். எனவே தான் வதாய ச ஸுர-த்விஷாம். இந்தப் பொறாமை கொண்ட நபர்கள் கொல்லப்படுகின்றனர்.

ஆனால் இந்த கொல்லும் செயல்கள், கிருஷ்ணருடைய இருப்பு இல்லாமலே நடக்கலாம். ஏனெனில் பலவகையான இயற்கையின் சக்திகள் இருக்கின்றன, போர், கொள்ளை நோய்கள், பஞ்சம். எது வேண்டுமானாலும். ஏதாவது ஒன்று நடந்தால் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்படுவார்கள். எனவே இந்த அயோக்கியர்களை கொல்வதற்காக கிருஷ்ணர் வர வேண்டுமென்ற தேவை இல்லை. கிருஷ்ணருடைய ஆணைப்படி, இயற்கையின் சட்டத்தால் மட்டுமே அவர்களை கொன்று விடலாம் ப்ரக்ரு'தே: க்ரியமாணானி குணை: கர்மாணி ஸர்வஷ: (ப.கீ. 3.27). ஸ்ரு'ஷ்டி-ஸ்திதி-ப்ரலய-ஸாதன-ஷக்திர் ஏகா (பி.சம். 5.44). இயற்கை, எல்லாவற்றையும் படைத்து, பாதுகாத்து, அழிக்கும், அளவிற்கு சக்தி படைத்தது. இயற்கை மிகவும் சக்தி வாய்ந்தது.

ஸ்ரு'ஷ்டி-ஸ்திதி-ப்ரலய. ஸ்ரு'ஷ்டி என்றால் படைப்பு, ஸ்திதி என்றால் பராமரிப்பு, ப்ரலய என்றால் அழித்தல். இந்த மூன்றையும் இயற்கையால் செய்யமுடியும். இந்தப் படைப்பைப் போலவே, பௌதிகப் படைப்பு, இயற்கையான பிரபஞ்சத் தோற்றம். அது பராமரிக்கப்படுகிறது. இயற்கையின் கருணையால், நாம் சூரிய ஒளியைப் பெறுகிறோம், காற்றை பெறுகிறோம், மழையை பெறுகிறோம், அதன்மூலம் நமது உணவை விளைவித்துக் கொள்கிறோம், நன்றாக விளைவித்து, நன்றாக சாப்பிடு கிறோம். இந்தப் பராமரிப்பும் இயற்கையாலேயே நடக்கிறது. ஆனால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், இவை அனைத்தும் ஒரு வலிமைமிக்க காற்றினால் முடிந்துவிடும். இயற்கை மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே இந்த அசுரர்களைக் கொல்வதற்கு ஏற்கனவே இயற்கை இருக்கிறது. இயற்கை, கிருஷ்ணருடைய ஆணைக்குக் கீழ் செயல்படுகிறது என்பது உண்மைதான். மயாத்யக்ஷேண ப்ரக்ரு'தி: ஸூயதே ஸ-சராசரம் (ப.கீ. 9.10). எனவே இந்த அசுரர்கள் கொல்லப்படலாம் என்று கிருஷ்ணர் கூறினால், பிறகு இயற்கையின் ஒரே அடியில், வலிமைமிக்க ஒரு காற்றினாலேயே, அவர்களில் கோடிக் கணக்கானவர்கள் கொல்லப்படலாம்.

எனவே அந்த காரணத்திற்காக, கிருஷ்ணர் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. யாசித என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல கிருஷ்ணர் வருகிறார். கிருஷ்ணர், வசுதேவர் தேவகியை போன்ற பக்தர்களால் வேண்டிக்கொள்ள படும்போது வருகிறார். இதுதான் அவருடைய வருகை. இதுதான் அவருடைய வருகைக்கான காரணம். மேலும் அவர் வரும்போது இதனையும் கூடக் காட்டுகிறார், அதாவது, "என் பக்தர் மேல் யாராவது பொறாமை கொண்டால், நான் அவர்களை கொல்வேன். நான் அவர்களை கொல்வேன்." அவர் கொலை செய்வதும், பராமரிப்பதும், ஒன்று என்பது உண்மைதான். அவர் பூரணமானவர். கிருஷ்ணரால் கொல்லப்படுபவர்கள் கோடிக்கணக்கான வருடங்கள் தேவைப்படுவதாக, உள்ள முக்தியை உடனடியாக அடைவார்கள். கிருஷ்ணர் இந்த காரணத்திற்காக வந்திருக்கிறார், அந்த காரணத்திற்காக வந்திருக்கிறார், என்று மக்கள் கூறலாம், ஆனால் உண்மையில் கிருஷ்ணர், பக்தர்களின் நன்மைக்காக வருகிறார், க்ஷேமாய. க்ஷேமாய என்பதன் பொருள் என்ன? பராமரிப்பிற்காகவா?

பக்தர்: "நன்மைக்காக."

பிரபுபாதர்: நன்மைக்காக. பக்தர்களின் நன்மைக்காக. அவர் எப்போதும் பக்தர்களின் நன்மையை பார்க்கிறார். எனவே குந்தியின் இந்த அறிவுரையிலிருந்து, நம்முடைய வேலை எப்படி பக்தர் ஆவது என்பது தான். பிறகு எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் வரும். யஸ்யாஸ்தி பக்திர் பகவத்யகிஞ்சனா ஸர்வைர் குணைஸ் தத்ர ஸமாஸதே ஸுரா: (ஸ்ரீ. பா. 5.18.12). நீங்கள் பக்தியை, உறங்கிக் கொண்டிருக்கும் பக்தியை, இயற்கையான பக்தியை மட்டும் வளர்த்துக் கொண்டால்... ... நம்மிடம் இயற்கையான பக்தி இருக்கிறது. ஒரு தந்தை மற்றும் மகனைப் போல, இயற்கையான அன்பு இருக்கிறது. அந்த மகனுக்கு இயற்கையாகவே தன் தந்தையிடம், தன் தாயிடம் அன்பு இருக்கிறது. அதைப் போலவே நாமும் இயற்கையான பக்தியைப் பெற்றிருக்கிறோம். நாம் உண்மையில் ஆபத்தில் இருந்தால், விஞ்ஞானிகள் கூட, கடவுளைப் பிரார்த்திக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆபத்தில் இல்லாத போது கடவுளை மறுக்கிறார்கள். எனவே கடவுள் இருக்கிறார் என்று இந்த அயோக்கியர்களுக்கு கற்றுத் தருவதற்காக ஆபத்து தேவைப்படுகிறது. இது இயற்கையானது தான். ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய-க்ரு'ஷ்ண-தாஸ (சை.சரி. மத்ய 02.108-109). இது நம்முடைய இயற்கையான..... செயற்கையாக நாம் கடவுளை ஒதுக்க முயற்சிக்கிறோம். "கடவுள் இறந்துவிட்டார், கடவுள் இல்லை, நான்தான் கடவுள், இந்தக் கடவுள், அந்தக் கடவுள்." இந்த அயோக்கியத்தனத்தை நாம் கைவிட வேண்டும். பிறகு கிருஷ்ணரால் நாம் எல்லா பாதுகாப்பும் அளிக்கப்படுவோம்.

மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜெய பிரபுபாதா, ஹரி போல்!