TA/Prabhupada 0950 - நம் பக்கத்துக்கு வீட்டுக்காரர் பட்டினி கிடப்பார், ஆனால் நாம் அதைப்பொருட் படுத்துவதில
(Redirected from TA/Prabhupada 0950 -)
720902 - Lecture Festival Sri Vyasa-puja - New Vrindaban, USA
பெண்களே, ஆண்களே இந்த விழா ... நிச்சயமாக, எனது மாணவர்ககளுக்கு, இந்த விழா என்னவென்று அவர்களுக்குத் தெரியும். வருகையாளர்களின் தகவலுக்காக, இந்த விழா குறித்து நான் உங்களுக்கு ஏதாவது தெரிவிக்கலாம். இல்லையெனில், அது ... தவறாக புரிந்து கொள்ளப்படலாம். புதிதாக வருபவர் "ஒரு நபர் ஏன் கடவுளைப் போல வணங்கப்படுகிறார்?" என்று நினைக்கலாம். சில சந்தேகம் இருக்கலாம். எனவே இது முறை. இந்த விழா வியாச-பூஜா என்று அழைக்கப்படுகிறது. வியாச. வியாசர் என்றால் வேத இலக்கியத்தின் மூல ஆசிரியர். அவர் நாராயணரின் அவதாரம். அவர் நமக்கு எல்லா வேத அறிவையும் கொடுத்தார். அவர் நாரதரிடமிருந்து அறிவைப் பெற்றார். நாரதர் பிரம்மாவிடமிருந்து அறிவைப் பெற்றார். பிரம்மா கிருஷ்ணரிடமிருந்து அறிவைப் பெற்றார். எனவே இந்த வழியில், குரு பரம்பரையில் அடுத்தடுத்து, நாம் ஆழ்நிலை அறிவைப் பெறுகிறோம்.
ஆகவே வியாசதேவா ... முன்னதாக, வியாசதேவாவுக்கு முன்பு, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதற்கு முன்னர் எழுதப்பட்ட இலக்கியம் தேவைபடவில்லை. மக்கள் தங்கள் நினைவாற்றலில் மிகவும் கூர்மையாக இருந்தார்கள், அவர்கள் ஆன்மீக குருவிடமிருந்து எதைக் கேட்டாலும், அவர்கள் வாழ்நாள் முழுதும் நினைவில் வைத்திருப்பார்கள். நினைவாற்றல் மிகவும் கூர்மையாக இருந்தது. ஆனால் இந்த யுகத்தில் - இது கலியுகம் என்று அழைக்கப்படுகிறது - நாம் நம் உடல் வலிமை, நம் நினைவாற்றல், மனப்பாடம் செய்யும் சக்தி, மற்றவர்கள் மீதான அனுதாபம், இரக்கம், வயது, வாழ்நாள், மத முனைப்பு. இந்த வழியில், இந்த யுகத்தில் நாம் எல்லாவற்றையும் குறைத்து வருகிறோம். நீங்கள் ஒவ்வொருவரும் மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். முன்பு யாரோ ஒருவர் வேறொரு மனிதனால் தாக்கப்பட்டால், அவருக்கு உதவ பல நபர்கள் வருவார்கள்: "இந்த மனிதன் ஏன் தாக்கப்படுகிறான்?" ஆனால் தற்போதைய தருணத்தில் ஒருவர் தாக்கப்பட்டால், வழிப்போக்கர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் மற்றவர்களிடம் காட்டும் தங்கள் அனுதாபத்தையும் இரக்கத்தையும் இழந்துவிட்டார்கள். நம் பக்கத்துக்கு வீட்டுக்காரர் பட்டினி கிடப்பார், ஆனால் நாம் அதைப்பொருட் படுத்துவதில்லை. ஆனால் முன்பு மற்ற உயிரினங்களுக்கான அனுதாபம், ஒரு எறும்புக்கு கூட ... மஹாராஜ பரீக்ஷித் போலவே, அவர் தனது ராஜ்யத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஒரு மனிதன் ஒரு பசுவைக் கொல்ல முயற்சிப்பதை அவர் கண்டார். பரீக்ஷித் மஹாராஜா பார்த்தார். உடனே அவர் தனது வாளை எடுத்தார், யார் நீ? என் ராஜ்யத்தில் ஒரு பசுவைக் கொல்கிறீர்களா? " ஏனென்றால், மன்னர் அல்லது அரசாங்கம் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும், அரசாங்கம் என்பது மனிதனுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு, விலங்குகளுக்கு அல்ல என்பதல்ல. இது கலியுகம் என்பதால், அரசாங்கம் இரண்டு பிரஜைகளிடையே பாகுபாடு காட்டுகிறது. குடிமகன் என்றால் நாட்டில் பிறந்த ஒருவர். அது குடிமகன் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ... அனைவருக்கும் தெரியும். எனவே மரங்கள், அவையும் நாட்டில் பிறக்கின்றன, நீர்வாழ்வனவும் நாட்டில் பிறக்கின்றன. ஈக்கள், ஊர்வன, பாம்புகள், பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் - எல்லோரும் அந்த நாட்டில் பிறந்தவர்கள். உங்கள் நாடு, அமெரிக்கா.... ஒரு வகை உயிரினங்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு அளித்து, மற்றவர்களை ஏன் நிராகரிக்க வேண்டும்? இதன் பொருள் அவர்கள் மற்றவர்கள் மீதான அனுதாபத்தை இழந்துவிட்டார்கள். இது கலியுகம் முன்னதாக, கலியுகத்திற்கு முன்பு, தேவையில்லாமல் ஒரு எறும்பு கூட கொல்லப்படாது. ஒரு எறும்பு கூட. விலங்குகளைக் கொல்வதைப் சாதகமாக பயன்படுத்தி வந்த ஒரு வேட்டைக்காரன், ஆனால் அவர் ஒரு பக்தரானபோது ஒரு எறும்பைக் கூட கொல்லத் தயாராக இல்லை.