TA/Prabhupada 0959 - கடவுளுக்கும் இந்த பாகுபாடு இருக்கிறது. கெட்ட தனிமங்கள் இருக்கிறது



750624 - Conversation - Los Angeles

பிரபுபாதர்: இது சுகதேவ கோஸ்வாமியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, அதாவது, "இந்தக் கலியுகத்தில் குறைபாடுகள் என்று நான் பலவற்றை குறிப்பிட்டுள்ளேன், ஆனால் அதில் ஒன்றே ஒன்று தான் மிகப் பெரிய லாபம்" அது என்ன? "ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை மட்டும் ஜெபிப்பது மூலம் ஒருவர் பௌதிக பந்தத்திலிருந்து விடுபடலாம்" இதுவே இந்த யுகத்தின் விசேஷ நன்மை.

டாக்டர் உல்ஃப்: அதனை இந்தக் காலத்தின் உண்மையான யோகா என்று கூற முடியுமா?

பிரபுபாதர்: ம்ம். ஆமாம். அதுதான் பக்தி யோகம். பக்தி யோகம் ஜெபத்தில் தொடங்குகிறது. ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: (ஸ்ரீ.பா. 7.5.23). அதிகமாக ஜெபமும் அதிகமாக கேட்கவும் செய்யும் பொழுது நாம் தூய்மை அடைகிறோம். எனவே இந்த நாட்டின் தலைவர்களான நீங்கள் இந்த இயக்கத்தினை முக்கியமாகக் கருத வேண்டும் என்பது என் கருத்து, இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதில் எந்த சிரமமும் இல்லை. ஜெபம். உங்கள் பள்ளிகளில் ஜெபம் செய்யலாம்; உங்கள் கல்லூரிகளில் ஜெபம் செய்யலாம்; தொழிற்சாலைகளில் ஜெபம் செய்யலாம்; வீதிகளில் ஜெபம் செய்யலாம். அதற்கு என்று எந்த ஒரு பிரத்தியேக தகுதியும் அவசியமில்லை. ஆனால் இந்த ஜெபம் செய்வதை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தால், நீங்கள் அடையும் பலன்கள் மிகப்பெரியது. எந்த இழப்பும் இல்லை, பலன் தான் அதிகம்.

டாக்டர் உல்ஃப்: ஸ்ரீல பிரபுபாதர், உங்களுக்கே தெரியும் ஜெபம் செய்வதை சித்து வேலை செய்வதாக சொல்லி வாதாடுகிறார்கள். மனோதத்துவ நிபுணர்கள் அப்படி சொல்கிறார்கள்.

பிரபுபாதர்: அது நல்லது. அது நல்லது. அப்படி மயக்க முடிந்தால் அது.... இப்போதுதான் டாக்டர் ஜுடா போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருந்த ஹிப்பிகளை மயக்கி, அவர்களை கிருஷ்ணரைப் பற்றி புரிந்துகொள்ள செய்வது பெரும் வெற்றி என்று ஒத்துக்கொண்டார். ஆமாம்.

டாக்டர் உல்ஃப்: அது மயக்கம் அல்ல.

பிரபுபாதர்: என்னவாக இருந்தாலும் டாக்டர் ஜூடா அதனை ஒத்துக் கொண்டுவிட்டார். எனவே மயக்குதல் நன்மைக்காக செய்யப்படுமானால், அதனை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு? அது கெடுதலை பயக்கும் என்றால், அது வேற விஷயம். ஆனால் நன்மை பயக்கும் என்றால், அதனை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது? ம்ம்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் பேராசிரியரே?

டாக்டர் ஆர்: எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நீங்கள் சொல்வது சரி என்றே தோன்றுகிறது.

பிரபுபாதர்: நல்லது..... அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

டாக்டர் ஆர்: ஒரு பிரச்சனை... நான் பலமுறை வியந்திருக்கிறேன் உங்களுக்கு எப்படி நிச்சயமாக தெரியும் எது நல்லது என்று அதுவும் போர் என்று வரும்பொழுது. இன்னும் அதிகமாகவே வருத்தப்படுவேன், அதை நினைக்கும் பொழுது...

பிரபுபாதர்: அந்தப் போர் என்ன?

டாக்டர் ஆர்: நீங்கள் சில சமயங்களில் போர் அவசியம் என்று கூறுகிறீர்களே அது. எப்படி முடிவெடுக்கவேண்டும் என்று அறிவதே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று எனக்குத் தோன்றுகிறது...

பிரபுபாதர்: இல்லை, இல்லை, அவசியமென்றால் இந்த பௌதிக உலகத்தில் அனைவரும் புண்ணிய ஆத்மாக்கள் ஆக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது அதனால்தான். கெட்ட வகைகளும் இருக்கின்றன. அந்த தீய சக்திகள் நம்மை வந்து தாக்கும் பொழுது, எதிர்த்துப் போரிட்டு நம்மை காத்துக் கொள்வது நம் கடமை ஆகாதா?

டாக்டர் ஆர்: இருக்கலாம் ஆனால், தீய சக்திகளை என்னிடம் வைத்துக்கொண்டு மற்றவர்கள்தான் தீயசக்திகள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

பிரபுபாதர்: இல்லை. இந்தப் பாகுபாடு பகவானுக்கும் உண்டு. அவர் சொல்கிறார், பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் (ப.கீ. 4.8). தீய சக்திகள் இருக்கின்றன. கடவுளின் மனதில் நல்ல சக்தியும் தீய சக்தியும் இருக்குமானால்..... நாம் கடவுளின் அங்கங்கள் தான். அதே உணர்வுகள் நமக்கும் இருக்குமே. அதை நம்மால் தவிர்க்க முடியாது.

ஜயதீர்த்த: இந்த காலத்தில் 99% தீயதாக தான் இருக்கிறது. 99% தீயது தான். போர் என்பது இரு தீய சக்திகளுக்கு இடையேதான்.

பிரபுபாதர்: ஆமாம்.

ஜயதீர்த்த: ஆக இது வேறு விஷயமாக இருக்கிறது.

பிரபுபாதர்: இரண்டு தீய சக்திகளுக்கு இடையே போரை தடுக்க முடியாது. அவர்களை நல்லவர்கள் ஆக்குங்கள் அப்போது தவிர்க்கலாம். நாய்களுக்கிடையில் ஏற்படட சண்டையை நிறுத்த முடியாது. அது சாத்தியமில்லை. நாய்கள் சண்டையிடுவதை நிறுத்த முயற்சி செய்தால், அது சாத்தியமில்லை. சாத்தியமா? அது வெறும் வீண் முயற்சி தான். மனிதர்களை நாய்களைப் போல வைத்துக்கொண்டு, சண்டையை நிறுத்த விரும்புகிறீர்கள். அது சாத்தியமில்லை. நடைமுறை இல்லை.