TA/Prabhupada 0960 - கடவுளின் இருப்பை மறுக்கின்றவன் பைத்தியக்காரன்



750624 - Conversation - Los Angeles

பிரபுபாதர்: உண்மையான ஆனந்தம் கொள்பவரும் துக்கம் கொள்பவரும் ஆன்மா தானே தவிர இந்த உடல் அல்ல. உடலை விட்டு ஆன்மா சென்றவுடன், உடல் ஆனந்தமும் துக்கமும் அனுபவிப்பதில்லை, அது வெறும் ஜடப்பொருள் ஆகிவிடுகிறது. ஆன்மா உள்ள வரையில் தான் ஆனந்தம் துக்கம் என்ற உணர்வு எல்லாம். எனவே ஆன்மா முக்கியம். ஆன்மாவைப் பற்றி படிக்க முடிந்தால் பகவானைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.

பீட்டர்: ஆன்மா இருக்கிறது என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

பிரபுபாதர்: ஏனெனில் நீ பேசுகிறாயே? நீ கேட்கிறாயே, அதனால் ஆன்மா இருக்கிறது என்று எனக்கு தெரியும். நீ ஆன்மாவாக இருப்பதனால்தான் கேள்வி கேட்கிறாய். ஆன்மா உன் உடலை விட்டுச் சென்றுவிட்டால், உன்னால் கேள்வி கேட்க முடியாது. கேள்விகள் முடிந்துவிடும்.

டாக்டர் உல்ஃப்: ஆன்மாவும் வாழ்வும் ஒன்று என்று சொல்ல முடியுமா?

பிரபுபாதர்: ஆமாம். ஒன்றுதான்..... வாழ்க்கை என்பது ஆன்மாவின் அறிகுறி. ஆன்மா இருப்பதனால் வாழ்க்கை இருக்கிறது. ஆன்மா சென்றவுடன் வாழ்க்கை முடிந்துவிடும். வானில் சூரியன் இருக்கும் வரை வெளிச்சம் இருக்கும் சூரிய வெளிச்சம். சூரியன் அஸ்தமனம் ஆனவுடன் வெளிச்சம் இருக்காது, இருட்டு ஆகிவிடும்.

டாக்டர் ஆர்: அதனால் உடல் கட்டுப்படுத்தப்பட வேண்டுமா? உடல் ஒழுக்க படுத்தப்பட வேண்டுமா கட்டுப்படுத்தப்பட வேண்டுமா அலட்சியம் செய்து விடலாமா? அதை தான் நீங்கள் பரிந்துரைக்கிறீர்களா?

பிரபுபாதர்: அலட்சியம் செய்வதா?

பகுலாஷ்வ: உடலை எப்படி நடத்த வேண்டும்?

டாக்டர் ஆர்: உடலை எப்படி நடத்துவீர்கள்?

பிரபுபாதர்: கெட்ட பேரத்திலும் ஒரு நல்லதை பார்க்க வேண்டும்? அது ஒரு கெட்ட நேரம், ஆனால் அதனை பயன்படுத்தி தானே ஆக வேண்டும்.

டாக்டர் ஆர்: அனைத்தும் கடவுளுடைய அங்கம் என்று சொல்லும் நீங்கள், உடலை மட்டும் விதிவிலக்கு என்கிறீர்களா - உடல் தெய்வீகமானதில்லையா?

பிரபுபாதர்: ஆமாம்.

பக்தர்: இல்லை. அவர் கேட்கிறார் அனைத்தும் இறைவனின் அம்சமாக இருக்கும் பொழுது உடல் மட்டும் விதிவிலக்கானதா என்று. உடல் விதிவிலக்கு என்கிறார் அவர். கடவுளின் அம்சம் இல்லையா என்று கேட்கிறார்.

பிரபுபாதர்: இல்லை, ஏன்? உடலும் அங்கம்தான். அதை நான் முன்பே விளக்கி இருக்கிறேன்.

டாக்டர் ஜூடா: மாயா சக்தி.

பிரபுபாதர்: ஆம், அது வேறு ஒரு சக்தி.

டாக்டர் ஆர்: அப்படியா.

டாக்டர் ஜூடா: கிருஷ்ணரின் தாழ்ந்த சக்தி.

டாக்டர் ஆர்: தாழ்ந்த சக்தி.

பிரபுபாதர்: அனைத்தும் பகவானின் சக்தி தான், எனவே உடலும் பகவானின் சக்தி தான். எனவே உடலில் சிறந்த பிரயோகம் என்னவென்றால் இறைவனின் சக்தியை இறைவனுக்கே பயன்படுத்துவது தான். அப்படி என்றால் உடலும் ஆன்மீக மயமாக்கப்பட்டுவிடுகிறது. உடலும் இறைவனின் சக்தி தான், இறைவனின் சேவையில் ஈடுபடுத்தப்படும் போது அதன் பின்னர் உடல் கெட்ட பேரமாக இல்லாமல் நல்ல பேரமாகிவிடும்.

பிரபுபாதர்: வாடகைக்கு இருப்பவர் "இந்த வீடு என்னுடையது நான் தான் முதலாளி" என்று நினைப்பது தவறு. இது வீட்டின் சொந்தக்காரருக்கு சொந்தமானது என்று சரியாக புரிந்திருந்தால், "இது நமக்காக கொடுக்கப்பட்டது" என்று அறிந்து இருந்தால் அதுவே அறிவு.

டாக்டர் உல்ஃப்: ஸ்ரீல பிரபுபாதர், வாடகைக்கு இருப்பவர் எளிதில் வெளியேற்றப் பட்டுவிடலாம்.

பிரபுபாதர்: வெளியேற்றப்படலாம். அப்போது அவன் புரிந்து கொள்வான் யார் முதலாளி என்று. அதுவும் பகவத்கீதையில் சொல்லப்பட்டுள்ளது ம்ருத்யு: ஸர்வ-ஹரஷ் சாஹம் (ப.கீ. 10.34). கடவுளை நம்பாதவர்களிடம் கடவுள் ஒருநாள் இறப்பின் வடிவில் வந்து சேர்வார், "இப்பொழுது என்னை நம்பு. வெளியேறு!" அவ்வளவுதான் முடிந்தது. உனது அகந்தை எல்லாம் முடிந்தது. உன் அகந்தை, உன் சொத்து, உன் குடும்பம், உன் வங்கிக் கணக்கு, அடுக்குமாடி கட்டிடம் எல்லாம் எடுத்துச் செல்லப்படும். "முடிந்துவிட்டது. வெளியேறு" இதுதான் கடவுள். இப்போது புரிகிறதா? நம்புகிறாயோ நம்பவில்லையோ, கடவுள் ஒருநாள் கண்டிப்பாக வருவார். உன்னை எடுத்துக் கொள்வார், உன்னிடம் உள்ள அனைத்தையும் எடுத்துக்கொள்வார், பின்னர் உன்னை வெளியேற்றி விடுவார் அதுவே கடவுள். நீ நம்புவதும் நம்பாததும் பொருட்டல்ல. அதே உதாரணம்தான்: வாடகைக்கு இருப்பவன் வீட்டு முதலாளியை நம்புகிறானோ இல்லையோ, வீட்டு முதலாளி நீதிமன்ற ஆணையுடன் வந்து "வெளியேறு" என்றால், வெளியேற வேண்டியதுதான். அவ்வளவு தான். இதுவே பகவத் கீதையில் கூறப்படுகிறது, "கடவுளை நம்பாதவர்களுக்கு, நான் இழப்பாக வருகிறேன் வந்து அனைத்தையும் எடுத்துக் கொண்டு விடுகிறேன். முடிவடைந்து விடுகிறது." அதை ஒருவர் நம்ப வேண்டும். "ஆமாம் இறப்பு என்பது நிச்சயம்." அதனால் கடவுள் உண்மையானவர் தான். உயிர் சில வருடங்கள் உள்ளவரை நாம் அதனை மறுத்துக் கொண்டே இருக்கலாம், ஆனால் உன் தற்போதைய அகங்காரத்தையும் கௌரவமான நிலையம் எடுத்துக்கொண்டு, உன்னை திருத்துவதற்காக கடவுள் வருவார், "வெளியேறு." என்று. அப்போது ஒரு பைத்தியக்காரன் மட்டும்தான் "கடவுள் இல்லை." என்று சொல்வான். கடவுளின் இருப்பை ஏற்காதவன் பைத்தியக்காரன் ஆவான்.

டாக்டர் உல்ஃப்: அவனைக் குருடு என்றோ முட்டாள் என்றோ சொல்லலாம் அல்லவா பிரபுபாதரே?

பிரபுபாதர்: ஆமாம், அனைத்து முட்டாள் தனத்திற்கும் முழுமையான பெயர் பைத்தியக்காரத்தனம் தானே. நான் பைத்தியக்காரன் என்று சொல்வது, அனைத்து முட்டாள்தனத்தையும் உள்ளடக்கியதுதான். இப்போது நீங்கள் அவர்களுக்கு பிரசாதம் கொடுக்கலாம். அவர்கள் நேரத்தை நாம் எடுத்துக் கொண்டு விட்டோம் என்று நினைக்கிறேன்.