TA/Prabhupada 0972 - "எனக்கு எந்தவிதமான உடல் கிடைக்கப்போகிறது?"என்று புரிந்து கொள்ளுங்கள்



730400 - Lecture BG 02.13 - New York

உடல் ரீதியான சிந்தனையில் ஒருவர் இருக்கும் வரை, அவருடைய மாயை அதிகரித்துக் கொண்டுதான் போகும். குறையாது. அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் முதலில் சொன்னது... அர்ஜுனனும் அந்த மாயையில் இருந்து இருக்காவிட்டால், அதாவது "நான் இந்த உடல், எனக்கு எதிர்புறத்தில், எனது சகோதரர்கள், எனது பாட்டனார், மற்றும் என் சகோதரனின் பிள்ளைகள், அனைவரும் என்னுடைய உறவினர்கள். நான் எப்படி கொள்வது?" இதுதான் மாயை. இந்த மாயையை, இருட்டைப் போக்குவதற்கு தான், கிருஷ்ணர் தனது முதல் பாடத்தை துவங்குகிறார், "நீ இந்த உடல் அல்ல." தேஹினோ 'ஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா ததா தேஹாந்தர-ப்ராப்திஹ் (ப.கீ. 2.13). இந்த உடல் மாறத்தான் போகிறது இதற்கு முன்பும் மாறி இருக்கிறது. நீ ஏற்கனவே மாறி இருக்கிறாய். நீ குழந்தையாக இருந்தாய். குழந்தையாக இருந்து சிறுவன் ஆகினாய். உடல் பாலகன் பருவத்திற்கு வந்தது. பின்பு அந்த உடல் இளைஞனாக மாறியது. அதன்பிறகு அதே உடல் வயோதிகன் ஆகியது. இந்த மாற்றங்களுக்கு எல்லாம் பிறகு... ஏற்கனவே ஏற்பட்ட மாற்றத்தை போல, இன்னொரு மாற்றமும் ஏற்படும். நீ வேறு ஒரு உடலை ஏற்க வேண்டிவரும். இது மிக எளிய தத்துவம். நீ ஏற்கனவே மாறி இருக்கிறாய்.


எனவே ததா தேஹாந்தர-ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி (ப.கீ. 2.13). அவர்கள் உடல் ரீதியான சிந்தனையிலேயே இருப்பதால், "நான் இந்த உடல். இந்த உடல் மாற்றம் இல்லாதது." உடல் மாறுகிறது. அதை நாம் கண்கூடாக வாழ்க்கையில் பார்க்கிறோம். ஆனாலும் அவன், "இந்த உடல் மாறி வேறொரு உடலும் கிடைக்கும்," என்று நம்புவதில்லை. இது மிகத் தெளிவானது. தேஹினோ 'ஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா ததா தேஹாந்தர-ப்ராப்திஹ் (ப.கீ. 2.13). இந்த உடல் பல முறை மாற்றமடைந்து இருப்பதைப் போல, நான் மாறத்தான் வேண்டும். எனவே, புத்திசாலியான ஒருவன், இதனை புரிந்து கொள்ள வேண்டும், அதாவது "எனக்கு அடுத்தது என்ன விதமான உடல் கிடைக்கப்போகிறது?" என்று யோசிப்பதே புத்திசாலித்தனம். அதுவும் பகவத் கீதையில் விளக்கப்பட்டிருக்கிறது, எந்தவிதமான உடலை நாம் பெறலாம் என்று.

யாந்தி தேவ-வ்ரதா தேவான்
பித்ருன் யாந்தி பித்ரு-வ்ரதா:
பூதானி யாந்தி பூதேஜ்யா
யாந்தி மத்-யாஜினோ 'பி மாம்
(ப.கீ. 9.25).

தேவர்கள் வாழும் உயர் கிரகங்களுக்கு செல்ல வேண்டுமானால், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான வருடங்கள்... பிரம்மாவைப் போல. பிரம்மாவின் ஒரு நாளை நாம் கணக்கிட முடியாது. மேல் கிரகங்களில் ஆயிரக்கணக்கான சிறந்த வசதிகள் இருக்கும், இன்பத்திற்கும் ஆயுளுக்கும். அனைத்தும். இல்லையேல் கர்மிகள் ஏன் சொர்க்கத்திற்குச் செல்ல நினைக்கிறார்கள்? எனவே யாந்தி தேவ-வ்ரதா தேவான் (ப.கீ. 9.25). ஆகவே நீங்கள் மேல் கிரகங்களுக்கு செல்ல விரும்பினால், செல்லலாம். கிருஷ்ணர் கூறுகிறார். அதற்கும் வழிமுறை இருக்கிறது. சந்திர மண்டலத்திற்கு செல்லவேண்டுமானால், பலநோக்கு செயல்களை நாடும் கர்ம காண்டத்தில் சேர்ந்தவராக இருக்க வேண்டும். கர்ம காண்டத்தில் நாம் செய்யும் செயல்களுக்கு புண்ணிய பலன்கள் கிடைக்கும், சந்திர மண்டலத்திற்கு உயர்த்த படுவீர்கள். அது ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சந்திர மண்டலத்திற்கு உங்கள் வழிமுறையில் செல்வது முடியாது: "வலுக்கட்டாயமாக செல்லலாம் வானூர்திகளிலும், ஜெட்களிலும், ராக்கெட்டுகளிலும் ஓ..." ஒருவேளை எனக்கு அமெரிக்காவில் ஒரு நல்ல மோட்டார் கார் கிடைத்தால். மற்றோரு நாட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைய நினைத்தால், அது சாத்தியமா? இல்லை. இதற்கு பாஸ்போர்ட், விசா எல்லாம் வேண்டும். அரசாங்கம் அதற்கு அனுமதி தரவேண்டும். பின்பு தான் நாம் நுழைய முடியும். உன்னிடம் நல்ல மோட்டார் கார் இருப்பதனால் மட்டும், நீ நுழைய அனுமதிக்கப்பட மாட்டாய். எனவே நாம் திணிக்க முடியாது. இது முட்டாள்தனமான, குழந்தைத்தனமான முயற்சி. அவர்கள் செல்ல முடியாது. அதனால்தான் இப்போதெல்லாம் அது நிறுத்தப்பட்டுவிட்டது. அவர்கள் பேசுவதில்லை. தங்கள் தோல்வியை அவர்கள் உணர்கிறார்கள். இப்படி உங்களால் முடியாது. ஆனால், அதற்கு ஒரு வழி இருக்கிறது. அதற்கான சரியான முறையைப் பின்பற்றினால் நீ போக முடியும். நீ உயர்த்த படுவாய். அதுபோல நாம் பித்ரு லோகத்துக்கும் செல்ல முடியும். சிரதாஸ், பிண்டம், முதலியன சமர்ப்பித்து நாம் பித்ரு லோகத்திற்கு செல்ல முடியும். இதே லோகத்திலும் கூட இருக்க முடியும். பூதேஜ்யா. அதுபோல பகவானுடைய திரு வீட்டிற்கும் திரும்பிச் செல்ல முடியும்.