TA/Prabhupada 0973 - அவன் கொள்கைகளை பின்பற்றியிருந்தால் உறுதியாக அவன் முழுமுதற் கடவுளின் திருவீட்டிற்கு



730400 - Lecture BG 02.13 - New York

பிரபுபாதர்: ஆக யார் புத்திசாலி? முழுமுதற் கடவுளின் திருவீட்டிற்கு செல்வதால் என்ன பயன் என்றால், அது பகவத் கீதையில் உறுதியளிக்கப் பட்டிருக்கிறது: மாம் உபேத்ய து கௌந்தேய து: காலயம்-அஷாஷ்வதம் நாப்னுவந்தி (பகவத் கீதை 8.15). "நீ என்னிடம் வந்தால், மீண்டும் இந்த ஜட உடலை ஏற்கவேண்டிய அவசியம் இருக்காது, அந்த ஜட உடல் துக்கங்களால் நிறைந்தது. நீ உன் ஆன்மீக உடலிலேயே இருந்திடுவாய்." ஆக நம் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம், நான் என்ன சொல்ல வரேன் என்றால், வாய்ப்பளிப்பதற்காக, எல்லா உயிர்வாழீகளையும் மேன்மை அடைய செய்வதற்காக... வாஸ்தவத்தில் எல்லோரையும் அப்படி செய்யமுடியாது. அது மிக கஷ்டமான காரியம். ஆனால் யாரொருவன் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஏற்றிருக்கிறாரோ, அவன் கொள்கைகளை பின்பற்றினால், பிறகு அவன் நிச்சயமாக கடவுளின் திருவீட்டிற்கு செல்வான். அது உறுதி. ஆனால் நீ வழிதவறினால், மாயையால் கவரப்பட்டால், அதற்கு நீ தான் பொறுப்பு. நாங்கள் உனக்கு அறிவளிக்கிறோம். இது தான் முறை, எளிதான முறை. ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தை ஜெபியுங்கள், ஜடத்தின் பிடிகளிருந்து விடுபட்டு இருங்கள், பிறகு 'த்யக்த்வா தேஹம். மாம் உபேத்ய. ஜன்ம கர்ம மே திவ்யம் யே ஜானாதி'... நீ வெறும் கிருஷ்ணரை புரிந்துகொள்ள முயன்றால், பிறகு 'த்யக்த்வா தேஹம்', இந்த உடலை விட்ட பிறகு, 'மாம் ஏதி', "நீ என்னிடம் வருவாய்." ஆக இது தான் எங்கள் தத்துவம். இது மிக எளிதானது மற்றும் எல்லாம் பகவத்-கீதையில் விளக்கப்பட்டிருக்கிறது. உலகத்தின் நன்மைக்காக நீ இந்த முறையை உணர்ந்து பிரசாரம் செய்யவேண்டும். அப்போது அனைவரும் மகிழ்ச்சி பெற்றிருப்பார்கள். மிக நன்றி.

பக்தர்கள்: ஜய, ஸ்ரீல பிரபுபாதருக்கு எல்லா புகழும் சேரட்டும்.!