TA/Prabhupada 0975 - நாம் சிறு கடவுள்கள். மிகவும் நுண்ணிய மாதிரி கடவுள்கள்



730408 - Lecture BG 04.13 - New York

வானில் ஒரு ராக்கெட்டை பார்த்துவிட்டு, அதற்கான முழு பெருமையையும் நாம் எடுத்துக் கொள்கிறோம், நாம் மிக மிக பெரிய ஆராய்ச்சியாளர்கள் ஆகிவிட்டோம் என்று. கடவுளைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. இதுதான் முட்டாள்தனம். முட்டாள் தான் அப்படி கூறுவான். ஆனால் புத்தியுள்ளவன், கடவுள் கோடிக்கணக்கான கிரகங்களை வானில் உலாவிட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை அறிவான், அதனை ஒப்பிடும் பொழுது நாம் என்ன செய்துவிட்டோம்? அதுவே புத்திசாலித்தனம். ஆக நாம் நமது அறிவியல் ஞானத்தினால் மிகவும் அகந்தை கொண்டு விட்டோம், எனவே, தற்போது நாம் கடவுளின் இருப்பை மறுக்கிறோம். சில சமயங்களில், "நான் கடவுள் ஆகி விட்டேன்." என்று கூறுகிறோம். அதெல்லாம் முட்டாள்தனமான அறிக்கைகள்.‌ அவரது புத்திசாலித்தனத்திற்கு முன்னால் நாம் ஒன்றும் இல்லை. நாம் கடவுளின் அங்கம் ஆவதால் கடவுளைப் பற்றி அறிய முற்பட்டால் நம்மை நாமே அறியலாம். நீரின் ஒரு துளியை எடுத்து ஆராய்ந்தாலும் ரசாயன ரீதியாக, பல ரசாயனங்கள் அந்தத் துளியில் இருப்பதை பார்க்கலாம். அதனைக் கொண்டு கடல் நீரின் தன்மையை புரிந்து கொள்ளலாம். அதே குணம்தான் கடலுக்கும் இருக்கும். ஆனால் அளவு தான் அதிகம். அது நமக்கும் கடவுளுக்கும் உள்ள வித்தியாசம். கடவுள்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். மிகச் சிறிய மாதிரி கடவுள்கள். எனவே நாம் மிகவும் பெருமை கொண்டு உள்ளோம். ஆனால் பெருமை கொள்வது அவசியமில்லை, ஏனெனில் நமது அனைத்து குணங்களும் கடவுளில் இருந்து வந்தது என்பதை அறிய வேண்டும். நாம் அவரின் அங்கம். நம் குணங்கள் எல்லாம் அவரிடம் இருந்து வந்ததுதான். வேதாந்த சூத்திரம் கடவுள் யார் பரம்பொருள் என்ன என்பதைச் சொல்கிறது. கடவுளைப் பற்றி கேட்கும்பொழுது, பரம உண்மையை பற்றி கேட்கும்பொழுது, உடனடியாக கிடைக்கும் பதில் ஜன்மாத்யஸ்ய யத: (ஸ்ரீ.பா. 1.1.1). எதனில் இருந்து அனைத்தும் வருகிறதோ, உருவாகிறதோ, அதுவே பரம உண்மை. அனைத்தும் கடவுளில் இருந்து வருகின்றன. அவரை உண்மையான மூலம். நம்முடைய நிலை என்ன? எண்ணிலடங்காத உயிர்வாழிகள் இருக்கின்றனர். அதுவே வேத கருத்து. நித்யோ நித்யானாம் சேதனஷ் சேதனானாம் (கட உபனிஷத் 2.2.13). கடவுளும் உயிர்வாழி தான் நம்மைப்போல, ஆனால் அவர் பரம உயிர்வாழி. நாமும் உயர் வாழிகள்.

ஒரே தகப்பன். அவருக்கு 20 குழந்தைகள் இருப்பது போல.. முற்காலத்தில், ஒருவருக்கு 100 குழந்தைகள் இருக்கும். இப்போது தந்தைகளுக்கு அத்தகைய வலிமை இல்லை. 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட, திருதராஷ்டிரன் 100 மகன்களைப் பெற்றார். ஆனால் இன்றோ நாம்... மக்கள் தொகை அதிகம் ஆகிவிட்டது என்று கூறுகிறோம். ஆனால் அது உண்மை அல்ல. தற்போது அதிக ஜனத்தொகை என்ற கேள்வி ஏது? எத்தனை பேர் நூற்றுக்கணக்கான பிள்ளைகளை பெற்றெடுக்கிறார்கள்? இல்லை. ஒருவரும் இல்லை. ஆனால் முற்காலத்தில், ஒரு தந்தை 100 குழந்தைகளை பெற்றெடுத்தார். எனவே ஜனத்தொகை கூடும் என்ற கேள்வியே இல்லை. ஜனத்தொகை கூடினாலும் அதையும் வேதம் சொல்கிறது: ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான். கடவுளான பரமாத்மாவால் எண்ணிறந்த உயிர்வாழிகளைப் பராமரிக்க முடியும்.