TA/Prabhupada 0976 - அதிக ஜனத்தொகை என்ற கேள்விக்கே இடமில்லை. தவறான கருத்து அது



Lecture on BG 4.13 -- New York, April 8, 1973

ஜன நெருக்கடி இல்லவே இல்லை அது தவறான கருத்து. கடவுளால் உருவாக்க முடிந்தால், காப்பாற்றவும் முடியும். ஆகவே இது உண்மை, நான் பல இடங்களுக்கும் உலகம் முழுவதும் பயணிக்கிறேன். பூமியில் பல காலியிடங்கள் உள்ளன, அதில், இப்போதுள்ள ஜனத்தொகையில் பத்து மடங்கு மக்கள் இருந்தால் கூட அதில் வாழ்ந்து விடலாம். ஆனால் நமக்கு, அதனை எப்படி பயன்படுத்துவது என்பது தெரிவதில்லை. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆகிய நாடுகளில் பயன்படுத்தாத நிலம் நிறைய இருக்கிறது. கிருஷ்ணரின் நிலத்தை ஆக்கிரமித்து விட்டதால் நமக்கு இந்த துன்பம் இருக்கிறது. சீனாவில் ஜன நெருக்கடி. இந்தியாவிலும் ஜன நெருக்கடி. ஆனால் கிருஷ்ண உணர்வை நாம் ஏற்றுக்கொண்டால், இந்தக் கஷ்டங்கள் ஒரு நொடியில் போய்விடும். கிருஷ்ண உணர்வு என்றால் கிருஷ்ணருடைய அனைத்தையும் எடுத்துக் கொள்வது. நானும் கிருஷ்ணருடையவன் தான். அதுவே நம் கிருஷ்ண உணர்வு. உண்மையில் அதுதான் சரியானது. அனைத்தும்.... கிருஷ்ணர் என்றால் கடவுள். அனைத்தும் கடவுளுக்கே சொந்தம். நானும் கடவுளை சார்ந்தவன் தான். ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம் (ஈசோ மந்த்ரா 1). அனைத்தும் கடவுளுடையது. அதுதான் உண்மை. அந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. உண்மை என்று நினைக்கிறோம். அதனால் அது மாயா என்று அழைக்கப்படுகிறது.

அமெரிக்கர்களை போல. இந்த இடத்தை அமெரிக்க குழுவினர் உடையது என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். அதுபோல, மற்ற நாடுகளும், செய்கின்றனர்... ஆனால் நிலம் உண்மையில் கடவுளுக்குத்தான் சொந்தம். நிலம், ஆகாயம், நீர் மற்றும் அவற்றில் இருந்து கிடைக்கும் மற்ற பொருட்கள் அனைத்தும் கடவுளுக்கே சொந்தம். நாம் கடவுளின் குழந்தைகள். தந்தையின் சம்பாத்தியத்தில் வாழும் உரிமை நமக்கு இருக்கிறது. சிறு குழந்தைகள் எப்படி தந்தையின் செலவில் வாழுமோ அதைப்போல. நாமும் கடவுளின் ஏற்பாட்டினால் தான் வாழ்கிறோம். நாம் ஏன் இது நம்முடைய சொத்து என்று உரிமை கொண்டாட வேண்டும்? இதற்குப் பெயர்தான் பொதுவுடைமை ஆன்மீகம். பொதுவுடைமை ஆன்மீகத்தை எப்படி உணர்வது என்பது பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவுடைமை ஆன்மீகத்தில்.... தற்கால பொதுவுடைமைவாதிகள், மனிதனைப் பற்றி மட்டும் தான் நினைக்கிறார்கள். விலங்குகள் மாமிசக் கிடங்குக்கு அனுப்பப்படுகின்றன. மனிதனும் விலங்குகளும் ஒரே நிலத்தில் பிறந்திருந்தாலும்... அவர்களும் தேச வாதிகள் தான். தேச வாதி என்றால் அந்த நாட்டில் தேசத்தில் பிறந்தவன் என்று பொருள். ஏன் இந்த மிருகங்களை தேசியவாதிகள் என்று கூறுவதில்லை? ஏனெனில் அவர்களுக்கு கிருஷ்ண உணர்வு இல்லை, அவர்கள் சிந்தனையை பெருக்க முடியாது. விவாதம் என்பது மனிதர்களுக்கு மட்டும்தான் விலங்குகளுக்கும் மரங்களுக்கும் இல்லை என்று நினைக்கின்றனர். ஆனால் கிருஷ்ண உணர்வு அடையும் பொழுது நீங்கள் அதை புரிந்து கொள்வீர்கள், மரங்கள், செடிகள், ஊர்வன, நீர்வாழ் உயிரினங்கள், மனிதர்கள், மிருகங்கள், ஒவ்வொன்றுமே கடவுளின் அங்கங்கள் என்று. அவர்களின் கர்மாவுக்குத் தகுந்தார்போல் பல்வேறு உடல்களும் நிறங்களும் கிடைத்திருக்கின்றன. காரணம் குண-ஸந்கோ 'ஸ்ய ஸத்-அஸத்-ஜன்ம-யோனிஷு (ப.கீ. 13.22). இவை கீதையில் சொல்லப் பட்டிருக்கின்றன. அவரவர் கர்மாவிற்குத் தகுந்தாற்போல் அவருக்கு உடல் கிடைக்கின்றது. கர்மணா தைவ நேத்ரேண ஜந்தோர் தேஹ உபபத்தயே (SB 3.31.1). நம்முடைய அடுத்த உடல் நம் கர்மாவினால்

நமக்கு கிடைக்கிறது. மாபெரும் விஞ்ஞானம். எப்படி நடக்கின்றது, எப்படி எத்தனை விதமான உயிரினங்கள் இருக்கின்றன என்று மக்களுக்கு தெரிவதில்லை, எவ்வாறு ஒருவர் துன்பப்படுகிறார், ஒருவர் இன்பப்டுகிறார். செல்வந்தராகவும், ஏழையாகவும் ஏன் இருக்கிறார். இத்தனை கிரகங்கள் ஏன் இருக்கின்றன? சிலர் தேவர்களாகவும், சிலர் மனிதர்களாகவும், சிலர் மிருகங்களாகவும் இருக்கின்றனர்? இது பெரும் விஞ்ஞானம், அதற்கான சரியான ஞானம் கொடுக்கப்படவில்லை, நவீன பல்கலைக் கழகங்களிலும் கல்விக் கூடங்களிலும். நம் குழுவினர் மட்டும்தான், கிருஷ்ணபக்தி விஞ்ஞானத்தை பரப்ப முயற்சி செய்கின்றோம். ஆனால் அதுதான் நம் நிலையை புரிந்து கொள்ள உதவும் சிறந்த விஞ்ஞானம்.