TA/Prabhupada 0979 - இந்தியாவின் நிலைமை மிகுந்த குழப்பத்தில் உள்ளது



730408 - Lecture BG 04.13 - New York

பிரபுபாதர்: ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மனித சமுதாயத்திற்கு மூளையைக் கொடுக்கிறது. பிராமணன். இந்த மூளை... பிராமணனின் வேலை... பிராமண, இந்தச் சொல் எதிலிருந்து வருகிறதென்றால்:

நமோ பிராமண தேவாய
கோ ப்ராமண ஹிதாய ச,
ஜகத் திதாய கிருஷ்ணாய
கோவிந்தாய நமோ நமஹ
(சை.ச. மத்திய 13.77, விஷ்ணு புராண 1.19.65)

எனவே பிராமணன் என்றால் கடவுளை அறிந்தவன் என்று பொருள். அவனே பிராமணன். கடவுளை மனதில் வைத்து, அவர்கள் மற்றவர்களை கடவுளை உணர செய்வார்கள். கடவுளைப் பற்றிய உணர்வு இல்லையெனில் மனித சமுதாயம் வெறும் மிருக சமுதாயமே. மிருகங்களுக்கு கடவுள் உணர்வு, எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும், பூனைகளுக்கோ நாய்களுக்கோ, அது சாத்தியமில்லை. ஏனெனில் கடவுள் யார் என்று புரிந்து கொள்வதற்கான மூளை அவர்களுக்கு இல்லை. எனவே மனித சமுதாயத்தில் கடவுளைப் பற்றி போதிக்க பிராமணன் இல்லை என்றால், கடவுளை உணரும் நிலைக்கு ஒருவரை யாரால் உயர்த்த முடியும், அதுவும் மிருக சமுதாயம் ஆகிவிடும். மிருகங்களுக்கு வெறுமனே உண்பது, உறங்குவது, உடலுறவு கொள்வது, தற்காப்பு இவையே வேலை. எப்படி உண்பது, எப்படி உறங்குவது, எப்படி பாலியல் வாழ்வை அனுபவிப்பது, எப்படி தற்காத்துக் கொள்வது என்று மிருகங்களுக்கும் தெரியும். அவர்களுக்கே அது தெரியும்.

அப்படியிருக்க இதனை மட்டும் கொண்டிருப்பவன் மனிதன் ஆகிவிட முடியாது. மனித சமுதாயத்தின் நோக்கம் நிறைவேறாது. கிருஷ்ணர் சொல்வதுபோல 4 வரலாற்று மனிதர்கள் இருக்க வேண்டும்: சாதுர்-வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் (ப.கீ. 4.13). பிராமண குலத்தைச் சேர்ந்த மக்கள் இருக்க வேண்டும், சத்ரிய குலம் வைசிய குலம்... இதெல்லாம் இருக்கிறது. ஆனால் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது போல விஞ்ஞான ரீதியாக இவை ஒழுங்கு படுத்தப்பட வில்லை. சாதுர்-வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் (ப.கீ. 4.13). குண-கர்ம-விபாகஷ:. குணா என்றால் அவற்றின் தரம் என்று பொருள். இந்தியாவில் இந்த நான்கு குலத்து மக்களும் இருக்கின்றனர், ஆனால் அது பெயரளவில்தான் உள்ளது. அதுவும் ஒரு குழப்பமான நிலையில் தான் உள்ளது. ஒருவரும் பகவத்கீதையில் சொல்லப்பட்ட கருத்துக்களை கடைபிடிப்பதில்லை. குண-கர்ம-விபாகஷ:. இந்தியாவில் உயரிய பிராமண குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவர் குணமும் பண்பும் சூத்திரனை விட தாழ்மையாக இருந்தாலும், அவன் பிராமணனாகவே ஏற்றுக்கொள்ள படுகிறான். அதுதான் சிரமமே. அதனால்தான், இந்தியாவில் குழப்பம் நிலவுகிறது. ஆனால் இது விஞ்ஞானரீதியான வழிமுறை. மேற்கத்திய மக்களான நீங்கள், இதை புரிந்து கொள்ள வேண்டும். நம்முடன் இணைந்து உள்ள ஆண்களும் பெண்களும், இதனைப் புரிந்துகொண்டு அந்த கொள்கைகளை, நடைமுறைப்படுத்த முயற்சி செய்கின்றனர். பிராமணர்களுக்கு என்று விதிக்கப்பட்டுள்ள கிருஷ்ண பக்தி இயக்கத்தை நாம் எடுத்துக் கொண்டால், நீ குணத்தால் பிராமணன் ஆகும்பொழுது, உன்னுடைய மேற்கத்திய நாடுகள்... முக்கியமாக அமெரிக்கா, முதல்தர நாடாகி விடும். அது முதல்தர நாடாக விடும். உங்களிடம் அறிவு இருக்கிறது. உங்களிடம் வளங்களும் இருக்கின்றன. அறியும் ஆவல் இருக்கின்றது. நல்லவற்றை சட்டென்று புரிந்து கொள்கிறீர்கள். உங்களிடம் பல நல்ல குணங்கள் உள்ளன. இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தை மட்டும் நீங்கள் அக்கறையாக பின்பற்றுவீர்கள் ஆனால், உலகிலேயே மிகச் சிறந்த நாடாகிவிடுவீர்கள். அது எனது வேண்டுகோள்.

மிக்க நன்றி ஹரே கிருஷ்ணா.

பக்தர்கள்: ஜெய்! எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதருக்கே!