TA/Prabhupada 0978 - பிராமணன் வேண்டியதில்லை என்றால் நீ துன்பப்படுவாய்



730408 - Lecture BG 04.13 - New York

த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி (ப.கீ. 4.9). ஆனால் மக்கள் இந்த பௌதிக உடல் மேல் மிகவும் ஈர்க்கப்பட்டு உள்ளனர் அதனால் அடுத்த ஜென்மத்தில் நாய்களும் பூனைகளுமாக பிறக்க தயாராகின்றனர், ஆனால் திரும்பவும் பகவான் நாட்டிற்கு செல்ல தயாராக இல்லை. அதுவே பிரச்சனை. ஆக ஏன் இந்த பிரச்சனை அது? ஏனெனில் மனித சமுதாயம் ஒரு அமளியில் இருக்கிறது. ஒரு அமளியான நிலை. நான்கு பகுப்புகளாக பிரிக்கப்பட வேண்டும். ஒரு வகுப்பு பிராமணர், அறிவு சார்ந்த மனிதர்களின் வகுப்பு. ஒன்று சத்ரியன் ஆளும் மக்களைக் கொண்ட வகுப்பு. ஏனெனில் மனித சமுதாயத்திற்கு கலந்து ஆலோசிக்க கூடிய நல்ல மூளை தேவை, நல்ல ஆளுமை உடையவர்கள், நல்ல உற்பத்தியாளர்கள் மற்றும் நல்ல தொழிலாளர்கள். அதுதான் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு பிரிவுகளும். எனவே கிருஷ்ணர் சொல்கிறார்: சதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் (ப.கீ. 4.13). மனித வாழ்க்கை செவ்வனே செல்ல, இந்த நான்கு பாகுபாடுகளும் முக்கியம். நமக்கு பிராமணர்கள் தேவையில்லை என்று நீங்கள் கூறினால், தேவையில்லை என்றால் நீங்கள் துன்பப்படுவீர்கள். உடல் கிடைத்து துன்பப்படுவதை போல. உடலின் எந்த பாகம் ஆனது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறது இதனை வெட்டி விடுவோம் என்று நினைத்தால், நீங்கள் இறந்து போவீர்கள். அதுபோல்தான், உடலை நல்ல நிலையில் வாழும் நிலையில் வைத்துக் கொள்வதற்கு, தலை, கைகள், வயிறு, கால்கள், அனைத்து உறுப்புகளும் இருக்க வேண்டும். உடலின் இந்த பாகத்தை தவிர்த்து விடலாம் என்று சொல்ல முடியாது. அதேபோலதான், சதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் (ப.கீ. 4.13). அதில் நான்கு வர்ணங்கள் இருக்க வேண்டும், இல்லையேல் அங்கு அமளி தான் இருக்கும்.

தற்போதைய நிலைமையில், கஷ்டம் என்னவென்றால் பிராமணரும் இல்லை சத்ரியன் இல்லை, இருப்பவர்கள் அனைவரும் வைசியர்களும் சூத்திரர்களும் தான், வயிறு வைசியர்கள், சூத்திரர்கள் காலாகவும் இருக்கின்றனர். எனவே, இந்த நான்கு வர்ணங்களில், ஒன்று இல்லை என்றாலும் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு விடும். நான்கும் இருக்க வேண்டும். மற்றதை ஒப்பிடும் பொழுது, தலை மிக முக்கியமான உறுப்பாக இருந்தாலும், காலை நாம் ஒதுக்கிவிட முடியாது. அது ஒரு ஒத்துழைப்பு மிக்க இணைப்பு. நாம் ஒத்துழைக்க வேண்டும். நாம் எத்தனை புத்திசாலியாக இருந்தாலும் பரவாயில்லை. ஒன்றுக்கு குறைந்த அறிவு. மற்றொன்றுக்கு குறைந்த அறிவு. இதுபோல நான்கு வகுப்புகள் உள்ளன. அனைத்தையும் விட மிக அதிக அறிவு கொண்டது தலை, புத்தி. அதற்கடுத்த புத்திசாலி வகுப்பு, ஆளும் வகுப்பு, அரசாங்கம். அடுத்த புத்திசாலிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள். அதற்கு அடுத்த புத்திசாலிகள் தொழிலாளர்கள். அனைவரும் தேவைதான். ஆனால் தற்போது, தொழிலதிபர்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். மூளை ‍ இல்லை. சமுதாயத்தை எப்படி நடத்துவது? மனித சமுதாயத்தை எப்படி சீரமைப்பது, மனித சமுதாயத்தின் நோக்கத்தை எப்படி நிறைவேற்றுவது, மூளை இல்லாமல்?