TA/Prabhupada 0982 - நாம் ஒரு கார் வாங்குகிறோம் அது எவ்வளவு பழையதாக இருந்தாலும் அதை சிறந்தது என்றே எண்ணுவோ

(Redirected from TA/Prabhupada 0982 -)


720905 - Lecture SB 01.02.06 - New Vrindaban, USA

பாகவதம் சொல்கிறது யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே, நான் இந்த உடல் அல்ல இது வெறும் வண்டிதான் ஒரு வண்டியை ஓட்டுவது போல தான். நான் அந்த வண்டி அல்ல. அதுபோல இது வெறும் எந்திரம் தான். கார் மோட்டார் கார். கிருஷ்ணர் அல்லது கடவுள் அவரே எனக்கு இந்த வண்டியை கொடுத்திருக்கிறார் நான் கேட்டதனால். அது பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ளது, ஈஷ்வர: ஸர்வ-பூதானாம் ஹ்ருத்-தேஷே 'ர்ஜுன திஷ்டதி (ப.கீ18.61). "எனதருமை அர்ஜுனா! பகவான் பரமாத்மாவாக அனைவர் இதயத்திலும் வீற்றிருக்கிறார்." ப்ராமயன் ஸர்வ-பூதானி யந்த்ராரூடானி மாயயா (ப.கீ18.61): "உயிர் வாழிகளுக்கு பயணிக்கும் , சுற்றித் திரியும் வாய்ப்பினை அவர் வழங்குகிறார்." ஸர்வ-பூதானி, "உலகம் முழுவதிலும்" யந்த்ராரூடானி மாயயா, வண்டியை ஓட்டிக் கொண்டு ஜட இயற்கை தந்த வண்டியை ஓட்டிக் கொண்டு. நம்முடைய உண்மையான நிலையை நாம் ஆன்மா என்பது எனக்கு ஒரு நல்ல வண்டி கொடுக்கப்பட்டிருக்கிறது அது நல்ல வண்டி அல்ல ஆனால் ஒரு வண்டி கிடைத்தவுடன் அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் நாம் நல்லது என்றே நினைக்கிறோம். இந்த வண்டியுடன் நம்மை நாம் அடையாளம் காண்கிறோம். "என்னிடம் வண்டி இருக்கிறது வண்டி இருக்கிறது." தன்னையே மறந்து விடுகிறான்... ஒரு விலையுயர்ந்த வண்டியை ஓட்டும் பொழுது தான் ஏழை என்பதை ஒருவன் மறந்து விடுகிறான். தன்னையே அந்த வண்டியாக நினைக்கிறான் அதுவே அவனுக்கு அடையாளம் ஆகிறது.

யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே ஸ்வ-தீ: கலத்ராதிஷு பௌம இஜ்ய-தீ: (ஸ்ரீ.பா 10.84.13). இந்த உடலையே தான் என்று எண்ணுபவன் உடல் சம்பந்தமான உறவுகளை, ஸ்வ-தீ: "இவர்கள் என்னுடையவர்கள். என் சகோதரன், என் குடும்பம், என் நாடு, என் சமூகம், என் சமுதாயம்," என்று பற்பல நான் எனது என்னுடையது. நான் இந்த உடல் என்றும் தனது என்று உடல் ரீதியான உறவை எண்ணுவதும் தவறான புரிதல். யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே ஸ்வ-தீ: கலத்ராதிஷு பௌம இஜ்ய-தீ: (ஸ்ரீ.பா 10.84.13). பௌம இஜ்ய-தீ:, பூமி, பூமி என்றால் நிலம். இஜ்ய-தீ: என்றால் வழிபாட்டுக்கு உரியது. தற்போதைய நிலையில் நான் இந்த உடல் என்ற எண்ணம் வலுவாக ஊன்றி உள்ளது "நான் அமெரிக்கன்", "நான் இந்தியன்", "நான் ஐரோப்பியன்", "நான் இந்து", "நான் முஸ்லிம்" "நான் பிராமணன்", "நான் சத்ரியன்", "நான் சூத்திரன்", "நான் இது", "நான் அது" என்று பற்பல மிகவும் வலுவானது பௌம இஜ்ய-தீ:, ஒரு விதமான உடலுடன் நான் என்னை அடையாளம் காண்பது உடல் எங்கிருந்து வந்ததோ, அந்த நாட்டை வழிபாட்டிற்கு உரியதாக கருதுவது அதுவே தேசியவாதம். யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே ஸ்வ-தீ: கலத்ராதிஷு பௌம இஜ்ய-தீ: (ஸ்ரீ.பா 10.84.13), யத்-தீர்த-புத்தி: ஸலிலே, தீர்த - வழிபாட்டிற்கு உரிய

இடம் நாம் நதிக்குச் சென்று நீராடுவோம் கிறிஸ்தவர்கள் ஜோர்டன் நதிக்குச் சென்று நீராடுவார்கள் ஹரித்துவார் செல்வார்கள் அல்லது கங்கைக்கு செல்வார்கள் அல்லது பிருந்தாவனத்திற்கு செல்வார்கள் நீராடுவதற்கு அந்த நீரில் சென்று நீராடுவது தன்னுடைய கடமையாக எண்ணும் அவர்கள்... கடமை முடிந்து விட்டது என்று எண்ணுவார்கள். கூடாது. உண்மையான கடமையை அந்த வழிபாட்டிற்குரிய தளங்களுக்கு சென்று காண்பது அனுபவப் படுவது ஆன்மீக முன்னேற்றம் அடைவது. ஏனெனில் ஆன்மீகத்தில் முதிர்ச்சி பெற்ற பல மனிதர்களும் அங்கு வாழ்கின்றனர். ஆகவே ஒருவர் எத்தகைய இடங்களுக்குச் சென்று அனுபவம் மிக்க ஆன்மீகவாதிகளை சந்திக்க வேண்டும் அவர்களிடம் இருந்து கற்க வேண்டும். அதுவே உண்மையான திருத்தலங்களுக்கு செல்வதன் பயன். வெறுமனே சென்று நீராடுவது மட்டும் கடமை அல்ல.

யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே
ஸ்வ-தீ: கலத்ராதிஷு பௌம இஜ்ய-தீ:
யத்-தீர்த-புத்தி: ஸலிலே ந கர்ஹிசிஜ்
ஜனேஷ்வபிஜ்ஞேஷு...
(ஸ்ரீ.பா 10.84.13)

அபிஜ்ஞே, அறிவுள்ளவர். நன்றாக அறிந்த ஒருவரை நாம் அணுக வேண்டும். அபிஜ்ஞ: கிருஷ்ணர் அபிஜ்ஞ: ஸ்வரட். கிருஷ்ணரின் பிரதிநிதியும் அபிஜ்ஞ: இயல்பாகவே. கிருஷ்ணருடன் உறவாடி அவரிடம் பேசுபவர் அபிஜ்ஞ: மிகவும் அறிவாளியாக இருப்பார் ஏனெனில் அவர் கிருஷ்ணரிடம் பாடம் கேட்டுக் கொண்டவர். ஆகவே கிருஷ்ணரின் அறிவு பூரணமானது. கிருஷ்ணரிடம் இருந்து அழிவை பெறுவதால் அவனுடைய அறிவும் பூரணமானது. அபிஜ்ஞ: கிருஷ்ணர் பேசுகிறார் என்றால் அது கற்பனையான பேச்சல்ல. கிருஷ்ணர் நான் முன்பே சொன்னது போல அனைவர் இதயத்திலும் வீற்றிருக்கிறார். அதிகாரப்பூர்வமான மனிதருடன் அவர் பேசுகிறார். இப்படி ஒரு பெரிய மனிதர் அதிகாரப்பூர்வமான மனிதருடன் பேசுவாரே தவிர முட்டாள்தனமான அவர்களுடன் பேசி தன் நேரத்தை வீணடிக்க மாட்டார். பேசுவார் என்பது உண்மை ஆனால் அவர் முட்டாள்களுடன் பேசமாட்டார். அவர் பேசுவது அதிகாரப்பூர்வமான பிரதிநிதி இடம். அதை எப்படிப் புரிந்துகொள்வது? அதுவும் பகவத்கீதையில் தேஷாம் ஸதத-யுக்தானாம் (ப. கீ 10.10), குறிப்பிடப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமான பிரதிநிதி.