TA/Prabhupada 0998 - ஒரு சாதுவின் நோக்கம் அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக
730406 - Lecture SB 02.01.01-2 - New York
உள்ளது 8,400,000 வெவ்வேறு வகையான வடிவங்கள் உள்ளன. கிருஷ்ணர் கூறுகிறார், "அவை அனைத்தும் என் பகுதி மற்றும் துளியாக இருக்கும் உயிர் வாழிகள் ஆனால் அவை இப்போது வெவ்வேறு ஆடைகளால் மூடப்பட்டுள்ளன. ஆனால் அவை உயிர் வாழிகள்.
இதுவே, கிருஷ்ண உணர்வு பார்வை. ஆகவே உண்மையில் கிருஷ்ண உணர்வுள்ளவர், பண்டித, பண்டிதாஹ் ஸம-தர்ஷினா ... (ப கீ 5.18). பண்டிதாஹ், அவர் வெளிப்புற ஆடையைப் பார்க்கவில்லை; இந்த குறிப்பிட்ட வகை உடலில் அடங்கியுள்ள ஜீவனை அவர் காண்கிறார். எனவே அவருக்கு உடலில் எந்த அக்கறையும் இல்லை. எனவே ஒரு சாது எப்போதும் அனைவரின் நன்மையையும் நினைப்பார். ரூபா கோஸ்வாமி, சனாதன கோஸ்வாமி போல. கோஸ்வாமிகளில் இது கூறப்படுகிறது, லோகானம் ஹித-காரினாவ் த்ரி-புவனே மான்யாவ். ஏனென்றால் அவர்கள் எல்லா வகையான உயிரினங்களுக்கும் உபகாரிகளாக இருந்ததால், அவர்கள் மூன்று உலகங்களில் த்ரி-புவனேகளாக கவுரவிக்கப்பட்டனர். திரி-புவனே. லோகானம் ஹித-காரினாவ். நானா-சாஸ்த்ரா-விச்சாரனைகா-நிபுனாவ். ஒரு சாதுவின் நோக்கம் அனைத்து உயிரினங்களின் நலனுக்காகவே. ஒரு மரத்தை கூட வெட்ட ஒரு சாது விரும்புவதில்லை, ஏனென்றால், " இங்கே உள்ளது ஒரு உயிரினம். அவர் இங்கே பல ஆண்டுகளாக தனது கர்மாவால் நிற்கிறார், மேலும் இதை அவர் இன்னும் பல ஆண்டுகளாக தொடர வேண்டும். எனவே இதை அவர் தவிர்க்க முடியாது அது இயற்கையின் விதி. " நீங்கள் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டதைப் போல, உங்களை யாரும் காப்பாற்ற முடியாது, உங்களது சிறைக்காலத்தை, ஆறு மாதங்களுக்கு ஒரு நாள் குறைவாக கூட யாரும் குறைக்க முடியாது. எனவே நம்முடைய குறிப்பிட்ட வகை உடலைப் பெறுகிறோம், இயற்கையின் விதிகளின்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நாம் அந்த உடலில் இருக்க வேண்டும். எனவே உடலை வெட்டுவதன் மூலம் - அதனிலுள்ள உயிரினம் இறக்கவில்லை - இறக்கிறது - ஆனால் அவருடைய காலத்தின் தொடர்ச்சியை நாம் சோதிப்பதால், நாம் பாவத்தை பெறுகிறோம். கிருஷ்ணாவின் நோக்கம் இல்லாமல் நீங்கள் ஒரு மரத்தை கூட வெட்ட முடியாது. கிருஷ்ணரின் நோக்கம் இல்லாமல் ஒரு எறும்பைக் கூட நாம் கொல்ல முடியாது, ஒரு மரத்தைக் கூட வெட்ட முடியாது, பின்னர் நாம் தண்டனைக்கு உட்படுத்தப்படுவோம். எனவே ஒரு சாது "இதுவும் ஒரு உயிரினம்" என்று பார்க்கிறார். பண்டிதாஹ் ஸம...
- வித்யா-வினயா-சம்பன்னே
- பிரஹ்மனே காவி ஹஸ்தினி
- ஷுனி ச்சைவ சுவ-பாகே சா
- பண்டிதாஹ் ஸம-தர்ஷினஹ்
- (ப கீ 5.18).
"இது ஒரு விலங்கு, இவர் ஒரு மனிதன்" என்று பண்டிதாஹ் எந்த பாகுபாடும் செய்வதில்லை. இல்லை, அவர் பார்க்கிறார், "விலங்கு கிருஷ்ணரின் ஒரு பகுதியும், துளியும் ஆகும். அதற்கு ஒரு வகை உடல் கிடைத்துள்ளது, மேலும் அந்த மனிதனும் கிருஷ்ணரின் ஒரு பகுதியும் துளியும் தான், அவருக்கு வேறு வகை உடல் கிடைத்துள்ளது. கர்மனா, ஒருவரின் கர்மாவின் படி, அவர் வெவ்வேறு வகை உடலில் உறையிடப்படுகிறார். " எனவே லோக-ஹிதம். (ஸ்ரீ பா 2.1.1).