TA/Prabhupada 1011 - முன்பெல்லாம் ஒவ்வொரு பிராமணனும் இந்த இரு அறிவியல் களையும் கற்பர், ஆயுர்வேதம் மற்றும்



750713 - Conversation B - Philadelphia

பிரபுபாதர்: இந்த பண்புள்ள மனிதர்?

பக்தர் மகன்: இவர் என் தந்தை.—

பிரபுபாதர்: ஓ. மிக்க நன்றி.

தந்தை: உங்கள் அருள் ...

பக்தர்: என் அம்மா.

தாய்: ஹரே கிருஷ்ணா

பிரபுபாதர்: ஓ. எனவே நீங்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள். உங்களுக்கு ஒரு நல்ல மகன் உள்ளார்.

தந்தை: நன்றி.

பிரபுபாதர்: ஆம். கிருஷ்ணா, பக்திக்கு மாறுவதன் மூலம் உங்களுக்கு சிறந்த சேவையை வழங்குகிறார்.

தந்தை: சிறந்த என்ன?

பக்தர்: சேவை.

பிரபுபாதர்: அவர் வீட்டிற்கு வெளியே இருக்கிறார், அவர் தொலைந்து போய் விட்டார் என்று நினைக்க வேண்டாம். இல்லை. அவர் உங்களுக்கு சிறந்த சேவையை வழங்குகிறார்.

தந்தை: சரி, நாங்கள் அவரால் மகிழ்ச்சியடைகிறோம், நாங்கள் எப்போதும் அப்படித்தான். மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்க அவருக்கு உதவியதற்கு நன்றி. இது உங்கள் ஆணையின் மூலம் அவரால் பெற முடிந்த ஒன்று.

பிரபுபாதர்: நன்றி. அவர்கள் மிகவும் நல்ல சிறுவர்கள்.

தந்தை: எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், உங்களிடம் உள்ள வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வலிமை உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது. நீங்கள் அதை எப்படி செய்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? (சிரிப்பு) நான் தங்களைவிட சில வயதில் குறைந்தவன், உங்கள் வேகத்திற்கு ஈடு கொடுப்பது எனக்கு கடினமாக உள்ளது

பிரபுபாதர்: செயல்முறை உண்மையானது, நான் பரிந்துரைக்கும் செயல்முறை மற்றும் அவர்கள் பின்பற்றுகின்றனர். பின்னர் அது நிச்சயம். பக்தர் மகன்: ஆம். கடவுளை வணங்குவதன் மூலம், எங்கள் வாழ்க்கை முறை உங்களுக்கு அந்த பலத்தையும் பெற உதவும் என்று அவர் கூறுகிறார்.

பிரபுபாதர்: மருத்துவரைப் போலவே. அவர் உங்களுக்கு மருந்து தருகிறார், அவர் உங்களுக்கு செயல்முறை, மருந்தின் அளவு, மருந்தை எப்படி எடுத்துக்கொள்வது, உணவை எப்படி எடுத்துக் கொள்வது என்று சொல்கிறார். நோயாளி பின்தொடர்ந்தால், அவர் குணமடைவார். அந்த வாய்ப்பு, மனித வாழ்க்கை. கடவுள் உணர்தல் என்ற இந்த செயல்முறையை மனிதனால் ஏற்றுக்கொள்ள முடியும். அவர் எங்கு பிறந்தார் என்பது முக்கியமல்ல. இந்தியாவில் அல்லது இந்தியாவுக்கு வெளியே, அது ஒரு பொருட்டல்ல. எந்தவொரு மனிதனும் அதை எடுத்துக் கொள்ளலாம். விலங்கு வாழ்க்கைக்கும் மனித வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம் அதுதான். விலங்கு, நாய், அதற்கு குரைப்பது மட்டுமே தெரியும், அவ்வளவுதான். இந்த செயல்முறை பற்றி அவருக்கு கற்பிக்க முடியாது. ஆனால் ஒரு மனிதனால் முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த புத்திசாலித்தனம் கிடைத்துள்ளது. எனவே இந்த மனித வாழ்க்கை வடிவத்தில், இந்த செயல்முறையை நாம் எடுக்கவில்லை என்றால், கிருஷ்ண பக்தி கொள்வது எப்படி என்று, பின்னர் நாம் நாய்களை போல இருப்போம். ஏனென்றால் நாம் வாய்ப்பை இழக்கிறோம்.

தந்தை: கிருஷ்ண பக்தியில் மக்களுக்கு மற்ற மதங்களை விட மிக அதிகமாக என்ன இருக்கிறது?

பிரபுபாதர்: இது மதம். மதம் என்றால் கடவுளை நேசிப்பவராக ஆவது என்று நான் ஏற்கனவே விளக்கினேன். அதுதான் மதம். கடவுள் மீது அன்பு இல்லாதபோது, ​​அது மதம் அல்ல. மதம் என்றால் கடவுளை அறிவதும் அவரை நேசிப்பதும் - நான் ஏற்கனவே விளக்கியுள்ளேன். கடவுள் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அவரை நேசிப்பதற்கான கேள்வி எங்கே? எனவே அது மதம் அல்ல. இது மதத்தின் பெயரில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மதம் என்றால் கடவுளை அறிவதும் அவரை நேசிப்பதும் ஆகும். தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணிதாம் (ஸ்ரீ.பா 6.3.19). (பக்கத்தில்:) இந்த செய்யுளைக் கண்டுபிடிக்க முடியுமா? அவரிடம் கொடு. நீங்கள் கண்டுபிடிக்கவில்லையா? நிதாய்: ஆம், 3.19.

பிரபுபாதர்: மூன்றாவது அத்தியாயம், பத்தொன்பது.

நிதாய்:

தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணிதாம்
ந வை விதுர் ருஸயோ நாபி தேவ:
ந ஸித்த-முக்ய அஸுர மனுஷ்ய:
குதோ நு வித்யாதர-சாரணாதய:
(ஸ்ரீ.பா 6.3.19).

பிரபுபாதர்: தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணிதாம். மதத்தின் கொள்கைகள் கடவுளால் வழங்கப்படுகின்றன. சட்டம் போல. சட்டம் என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் நடவடிக்கைகளின் செயல்முறை. நீங்கள் வீட்டில் சட்டம் செய்ய முடியாது. இது தெளிவாக இருக்கிறதா?

தந்தை: இல்லை, எனக்கு மொழி பிரச்சினை உள்ளது என்று அஞ்சுகிறேன்.

ஜயதீர்த: சட்டம் என்பது அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாகும் என்று அவர் கூறுகிறார். நீங்கள் வீட்டில் உங்கள் சொந்த சட்டத்தை உருவாக்க முடியாது. எனவே இதேபோல், மதம் என்பது இறைவனால் அறிவுறுத்தப்பட்டதாகும். உங்கள் சொந்த செயல்முறையை நீங்கள் உருவாக்க முடியாது.

தந்தை: சரி, நான் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். எனது கேள்வி என்னவென்றால், பிற மதங்கள் இதுவரை வழங்க முடியாத எது ஹரே கிருஷ்ணா பக்தியால் வழங்க முடிகிறது...

பிரபுபாதர்: இது நீங்கள் மதமாக இருக்க விரும்புகிறீர்கள், எனவே நீங்கள் கடவுளிடமிருந்து மதக் கொள்கைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஏனெனில் ஒருவர் வழக்கறிஞராக இருந்தால், ஒருவர் வழக்கறிஞராக விரும்பினால், அவர் அரசாங்கத்தால் வழங்கப்படும் சட்டங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் வீட்டில் வழக்கறிஞராக முடியாது. இதேபோல், நீங்கள் மதப்பற்று கொள்ள விரும்பினால், மதம் என்ன என்பதை நீங்கள் கடவுளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் சொந்த மதத்தை உற்பத்தி செய்ய முடியாது. அது மதம் அல்ல. இது முதல் கொள்கை. ஆனால் கடவுள் என்றால் என்ன, கடவுள் கொடுத்த ஒழுங்கு என்ன, என்று எனக்குத் தெரியாவிட்டால், பின்னர் மதம் என்றால் என்ன? அது நடக்கிறது. எல்லோரும் தனது சொந்த மதத்தை உற்பத்தி செய்கிறார்கள். இது நவீன முறை, மதம் தனிப்பட்டது; எந்தவொரு மதத்தையும் யார் வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம். அது தாராளமயம், இல்லையா?

ஜயதீர்த: ஆம்.

பிரபுபாதர்: அவரை சமாதானப்படுத்துங்கள்.

ஜயதீர்த: அப்படியானால் உங்களுக்கு புரிகிறதா? இந்த ஹரே கிருஷ்ணா இயக்கம் வேதங்களின் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது இதன் கருத்து. மேலும் வேத இலக்கியங்கள் கிருஷ்ணரிடமிருந்து நேரடியாக வருகின்றன. எனவே கிருஷ்ணர் சொல்வது மட்டுமே உண்மையாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், மேலும் யாருடைய மனகலவையையும் ஊகங்களையும் நாங்கள் உண்மை என்று ஏற்கவில்லை. இன்று பல மத இயக்கங்களின் பிரச்சினை இதுதான், அவை விளக்கங்களை நம்பி ...

பிரபுபாதர்: கலவை.

ஜயதீர்த: ... ஏதோ சாதாரண மனிதனின் தத்துவம். எனவே இது முதன்மை வேறுபாடு.

பிரபுபாதர்: பகவத்-கீதையில் கடவுளால் பேசப்படாத எதையும் நாங்கள் சொல்லவில்லை. எனவே இது எல்லா இடங்களிலும் ஈர்க்கிறது. இது சமஸ்கிருத மொழியில் இருந்தாலும், இன்னும் ஈர்க்கும். நீங்கள் தெருவில் செல்லும் போது அடையாள பலகை, "தொடர்ந்து செல்லுங்கள் ..."

ஜயதீர்த: "வலதுபுறம் செல்லுங்கள்."

பிரபுபாதர்: "வலதுபுறம் செல்லுங்கள்," இது சட்டம். "நான் இடதுபுறமாக சென்றால் என்ன தவறு?" என்று சொல்ல முடியாது. (சிரிப்பு) பின்னர் நான் குற்றவாளி. நீங்கள் ஆணையிட முடியாது. "வலதுபுறம் செல்லுங்கள்" என்று அரசாங்கம் கூறியுள்ளது. நீங்கள் அதை செய்ய வேண்டும். அது சட்டம். நீங்கள் மீறினால், நீங்கள் குற்றவாளி. அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் சாதாரணமாக, "நான் இடதுபுறமாக சென்றால், வலதுபுறம் செல்வதற்கு பதிலாக, அதில் என்ன தவறு இருக்கிறது?" என்று ஒருவர் நினைக்கலாம். அவர் அப்படி நினைக்கலாம், ஆனால் அது குற்றமானது என்று அவருக்குத் தெரியாது.