TA/Prabhupada 1016 - எல்லாவற்றின் அசல் மூலமும் உணர்வுபூர்வமானது என்று பாகவதம் கூறுகிறது. விழிப்புணர்வு



720200 - Lecture SB 01.01.01 - Los Angeles

கொண்டது. என் விருப்பத்திற்கு ஏற்ப, நான் இந்த உடலை உற்பத்தி செய்துள்ளேன். ஆனால் நான் என் உடலைக் கோருகிறேன் என்றாலும், உடல் எவ்வாறு இயங்குகிறது என்று எனக்குத் தெரியவில்லை. அது எனக்குத் தெரியாதது. நான் என் தலைமுடியை வெட்டி கொள்கிறேன், ஆனால் முடி எப்படி மீண்டும் வளர்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நான் நகங்களை வெட்டி கொள்கிறேன். ஆனால் எப்படி, உள்ளே என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் நகங்களையும், முடிகளையும் வெட்டிய பிறகும் மீண்டும் வளர்கிறது. எனக்கும் தெரியாது ... நான் சாப்பிடுகிறேன், எனக்குத் தெரியும், ஏனென்றால் நான் கணிசமான ஒன்றை சாப்பிடுகிறேன், இது என் வயிற்றுக்குள் பல்வேறு வகையான சுரப்புகளாக மாறுகிறது, மற்றும் சுரப்பு பகிரப்படுகிறது. நான் அதை சில மருத்துவரிடமிருந்து அல்லது மருத்துவ அறிவியலிலிருந்து அறிந்திருக்கிறேன், ஆனால் என்னை பொறுத்தவரை, நான் உண்பது எவ்வாறு இரத்தமாக மாற்றப்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. என் உடலின் வெவ்வேறு பகுதிகளில் இரத்தம் எவ்வாறு பரவுகிறது, பின்னர் எனக்கு மீண்டும் ஆற்றல் கிடைக்கிறது. உண்மையில் எனக்கு தெரியாது.

ஆனால் முழுமுதற் கடவுளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் தெரியும், இரண்டு வழியிலும், இந்த பௌதிக அண்ட வெளிப்பாடு எவ்வாறு செயல்படுகிறது. அவருக்கு எல்லாம் தெரியும். சூரியன் எப்படி உதிக்கிறது. சந்திரன் எப்படி உதிக்கிறது. சமுத்திரங்கள் எப்படி சீராக இருக்கிறது. அது நிலத்தில் அத்துமீறல் அல்ல. அத்தகைய ஒரு சமுத்திம் - இது ஒரு நொடிக்குள் எந்த நகரத்தையும் அல்லது எந்த நிலத்தையும் உடனடியாக வெள்ளத்தில் மூழ்கடிக்கும். ஆனால் அது அவ்வாறு செய்யவில்லை. எனவே இயக்கப்படுகிறது. எனவே எல்லாவற்றின் மூலமும் உணர்வு பூர்வமானது என்று பாகவதம் கூறுகிறது. தன் விழிப்புணர்வு கொண்டது. மற்றும் உணர்வுபூர்வமாக எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது. "அன்வயாத் இதரதஷ் சார்தேஷ்வபிஜ்ஞ:" (ஸ்ரீ.பா 1.1.1) 'அபிஜ்ஞ' என்றால் முற்றிலும் அறிவாற்றல் கொண்டவர்.

அடுத்த கேள்வி எழுப்பப்படலாம், எங்கிருந்து அவருக்கு அறிவு கிடைத்தது? அவர்தான் தோற்றம். ஏனென்றால், எந்தவொரு உயிரினமும், மற்றவர்களிடமிருந்து அறிவைப் பெறுகிறது என்ற எண்ணம் நமக்கு உள்ளது. நம்முடைய ஆன்மீக குருவிடமிருந்து நாம் அறிவைப் பெற்றதைப் போல. என் சீடர்கள் என்னிடமிருந்து அறிவைப் பெறுகிறார்கள், எனவே அவர்களின் அறிவும் வேறு ஒருவரால் வழங்கப்படுகிறது. அதற்கு ஒரு மூலம் உள்ளது. ஆனால், முழுமுதற் கடவுள் மூலம் என்றால், படைப்பு, பராமரிப்பு குறித்த இந்த அறிவை அவர் எவ்வாறு பெற்றார்? பதில் 'ஸ்வ-ராட்' அவர் யாரிடமிருந்தும் அறிவை பெறவில்லை. அவர் தன்னால் தானே தன்னிறைவு பெற்றவர் அறிவில். அதுவே கடவுளின் இயல்பு. அவர் வேறு உயர்ந்தவர்களிடமிருந்து அறிவைப் பெறத் தேவையில்லை, ஏனென்றால் கடவுளைவிட யாரும் உயர்ந்தவர்களாக இருக்க முடியாது. கடவுளுக்கு சமமும் அல்ல. "அஸமோர்த்வ". யாரும் அவருக்கு சமமானவர்கள் அல்ல. அவரைவிட பெரியவர்கள் யாரும் இல்லை. இந்த பிரபஞ்சத்திற்குள் வாழும் முதல் உயிரினம் பிரம்மா என்று இப்போது நமக்கு அனுபவம் கிடைத்துள்ளது. எனவே, அவருக்கும் மற்றவர்களிடமிருந்து எந்த உதவியும் இல்லாமல் அறிவு கிடைத்தது, ஏனென்றால் அங்கே ... அவர் முதல் உயிரினம். எனவே வேறு எந்த உயிரினமும் இல்லை, எனவே அவருக்கு எப்படி அறிவு கிடைத்தது? எனவே இந்த அசல் மூலமானது பிரம்ம பகவான் என்று அர்த்தமா? மக்கள் கேள்வி கேட்கலாம், ஆனால் பாகவதம் இல்லை என்று கூறுகிறது. அவர் இந்த பிரபஞ்சத்தின் முதல் உயிரினம், அது சரி, ஆனால் அவரும் ஒரு படைக்கப்பட்ட உயிரினம். ஏனென்றால், அண்ட வெளிப்பாடு முழுமுதற் கடவுளால் உருவாக்கப்பட்டது. இந்த படைப்புக்குப் பிறகு பிரம்மா படைக்கப்பட்டார். எனவே அவர் ஒரு படைக்கப்பட்ட உயிரினம். அண்ட வெளிப்பாட்டிற்குப் பிறகு. கடவுள், அல்லது முழுமுதற் கடவுள்... அவர் உருவாக்கியவர், எனவே அவர் உருவாக்கப்பட்டவைகளில் ஒன்று அல்ல. அவர் படைக்கிறார், ஆனால் அவர் படைக்கப்படவில்லை. ஆனால் பிரம்மா படைக்கப்படுகிறார். எனவே அவர் சுதந்திரமான உச்ச படைப்பாளரிடமிருந்து அறிவைப் பெறுகிறார்.