TA/Prabhupada 1017 - பிரம்மா முதல் படைப்பாளி அல்ல. முதல் படைப்பாளி கிருஷ்ணர்



720200 - Lecture SB 01.01.01 - Los Angeles

அறிவைப் பெறுவதற்கு ஆன்மீக குருவான ஒரு ஆசிரியரை நாம் அணுகுவதைப் போன்ற செயல்முறை. எனவே பிரம்மாவுக்கு முன்பு காணக்கூடிய உயிரினங்கள் எதுவும் இல்லை. அப்படியென்றால் அவருக்கு எப்படி அறிவு கிடைத்தது? விடை என்னவென்றால் "தேனே ப்ரஹ்ம ஹ்ருதா ய ஆதி-கவயே" 'ஆதி-கவயே'. முதன்முதலில் உருவாக்கப்பட்ட உயிரினமான பிரம்மாவிற்கு, இதயத்திற்குள் இருந்து கல்வி வழங்கப்பட்டது. அதாவது கிருஷ்ணர், வாசுதேவர் அல்லது முழுமுதற் கடவுள், அனைவரின் இதயத்திலும் அமர்ந்துள்ளார். அவர் பிரம்மாவின் இதயத்திலும் அமர்ந்துள்ளார். அவர் உங்கள் இதயத்திலும், என் இதயத்திலும் இருக்கிறார். ஹ்ருதா' இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஹ்ருதா' என்றால் இதயம். எனவே அவர் இதயத்திற்குள் இருந்து எவருக்கும் கல்வி கற்பிக்க முடியும். ஆனால் நாம் ஏன் அவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை? கோட்பாட்டளவில் நமக்குத் தெரியும், ஆனால் நடைமுறையில் நம்முடைய நிபந்தனைக்குட்பட்ட நிலையில் அவர் நம்மை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதைப் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர் இயக்குகிறார். அது ஒரு உண்மை. பிரம்மா சாதாரண ஜீவன் அல்ல, ஆகவே அவர் இதயத்திற்குள் உள்ள முழுமுதற் கடவுளினால் வழிநடத்த முடியும். நாம் பிரம்மாவைப் போலவே தகுதி பெறும்போது, ​​நாமும் பெறலாம்.

இறைவனுக்கு சேவை செய்ய பிரம்மா தோன்றினார். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற. நாம் ஒரு தச்சரை ஈடுபடுத்துவது போல, எனக்காக ஒரு அலமாரி செய்யும்படி அவரிடம் கேட்கிறேன். நான் அவருக்கு பொருட்கள், கருவிகள் அல்லது ஊதியம் தருகிறேன், அவர் ஒரு அலமாரியை உருவாக்குகிறார். இதேபோல், கடவுள் பொருட்களை உருவாக்கினார், மேலும் உற்பத்தியாளரையும் உருவாக்கினார், பிரம்மா இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினார். ஆனால் அவர் முதல் படைப்பாளி அல்ல. முதல் படைப்பாளி கிருஷ்ணர். எனவே, முதல் உரிமையாளரும் கிருஷ்ணர் தான், ஏனெனில் பொருட்களை உருவாக்கியவர் அவர். உண்மையில் நாம் நடைமுறையில் பணிபுரியும் போது, ​​நாம் அந்த பொருட்களை உருவாக்க முடியாது. நாம் மிக உயர்ந்த வானளாவிய கட்டிடத்தை கட்டுகிறோம் என்று வைத்துக்கொள்வோம், ஆனால் பொருட்கள், அதாவது மண், கல், மரம், இரும்பு, வீட்டிற்கு தேவையான பொருட்களான இவைகளை நாம் உருவாக்க முடியாது. அது கடவுளால் படைக்கப்பட்டது. நாம் வெறுமனே உருமாற்றம் செய்கிறோம். நாம் பூமியிலிருந்து எடுத்து, பூமியிலிருந்து அழுக்கை எடுத்து தண்ணீரில் கலக்கிறோம். நீர் கடவுளால் படைக்கப்பட்டது. பூமி கடவுளால் படைக்கப்பட்டது. பின்னர் அதை கலந்து, செங்கல் போன்ற ஒரு கட்டியை உருவாக்கி, அதை நெருப்பில் வைக்கிறோம். நெருப்பும் கடவுளால் படைக்கப்படுகிறது. இந்த வழியில், நாம் ஆராய்ந்தால், நாம் கையாளும் பொருட்கள் நம்முடைய படைப்பு அல்ல. அவை கடவுளின் படைப்பு. நாம் அவற்றை கையாளுகிறோம். நாம் அவற்றைக் கையாளுவதால் அது நம் சொத்தாக மாறாது. இது அறிவு.

நான் தொழிலாளி என்று வைத்துக்கொள்வோம், வேறு சில விஷயங்களை, பொருட்களை கையாளுகிறேன், ஏதாவது தயார் செய்கிறேன், பொருள் முழுமையாக தயாரிக்கப்படும் போது, ​​அது எனது சொத்தாக மாறும் என்று அர்த்தமல்ல. இல்லை. அது எப்படி இருக்க முடியும்? ஆகையால், எல்லாமே கடவுளான கிருஷ்ணருக்கு சொந்தமானது என்பது தத்துவம். நானும் அவருக்கே உரியவன். நான் என்ன செய்தாலும், உற்பத்தி செய்தாலும், அதுவும் அவருக்கே உரியது. எல்லாம் கடவுளுக்கு சொந்தமானது என்பதை புரிந்து கொள்ளவே இந்த அறிவு. நானும் கடவுளுக்கு சொந்தமானவன். என் புத்திசாலித்தனம் கடவுளுக்கு சொந்தமானது. நாம் பணிபுரிய பயன்படுத்தும் பொருட்கள் அல்லது இயற்பியல் கூறுகள் கடவுளுக்கு சொந்தமானது. நான் உரிமையாளர் என்று கூறுவதற்கான வாய்ப்பு எங்கே? இது மாயை என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மனித சமூகத்தின் அசல் உணர்வு புத்துயிர் பெறுவதற்கானது, ஏனெனில் பூனைகள் மற்றும் நாய்கள் அல்லது விலங்குகளில், அத்தகைய உணர்வை செயல்படுத்த முடியாது. அவை மிகவும் மந்தமாமாகவும் மற்றும் உணர்வில் கீழ் நிலையிலும் உள்ளதால், அவற்றால் புரிந்து கொள்ள முடியாது ...