TA/Prabhupada 1024 - இந்த இரண்டு கொள்கைகளையும் நீங்கள் பின்பற்றினால், கிருஷ்ணர் உங்கள் பிடியில் இருப்பார்



730408 - Lecture SB 01.14.44 - New York

பிரபுபாதா : அறிவில் குறைந்த மனிதர்களுக்கு, சில சமயம் ஏமாற்றுத்தனம் தேவைப்படுகிறது. ஆனால் நாம் ஏமாற்றுவதில்லை. நாம் மிகவும் எளிமையானவர்கள். நாம் ஏன் ஏமாற்ற வேண்டும்? கிருஷ்ணர் கூறுகிறார்,

மன்-மனா ப4வ மத்3-ப4க்தோ
மத்3-யாஜீ மாம்' நமஸ்குரு
(ப.கீ 18.65).

எனவே நாம் கூறுகிறோம், "தயவு செய்து இங்கே வாருங்கள் கிருஷ்ணர் இங்கே இருக்கிறார்." நீங்கள் அவரை நினைத்தால் மட்டும் போதும்." இதில் என்ன கஷ்டம்? ராதா - கிருஷ்ணர் இங்கே இருக்கிறார்கள். மேலும் நீங்கள் தினமும் பார்த்தால், இயற்கையாகவே, ராதா கிருஷ்ணரைப் பற்றி உங்கள் மனதில் பதிந்து விடும். எனவே இந்த இடத்திலும், எப்போது வேண்டுமானாலும், நீங்கள் ராதா - கிருஷ்ணரை நினைக்கலாம். இதில் என்ன கஷ்டம்? மன் - மனா. நீங்கள் ஹரே கிருஷ்ணா ஜெபம் சொல்லுங்கள். "கிருஷ்ண" என்று உச்சரித்த உடனேயே, நீங்கள் கோவிலில் இருக்கும் கிருஷ்ணரின் வடிவத்தை நினைப்பீர்கள். நாம ரூபம். பிறகு நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி கேட்கிறீர்கள்; கிருஷ்ணரது குணங்கள், செயல்கள், நாம, குணா, ரூப, லீலா,பரிகார,வஷிஷ்ட பற்றி நினைப்பீர்கள். இந்த வகையில்.... நீங்கள் பயிற்சி செய்யலாம். என்ன கஷ்டம்? இதுதான் பயிற்சியின் தொடக்கம். உண்மையில் கிருஷ்ணர் இருக்கிறார், ஆனால் அவரைப் பார்க்கக் கூடிய கண்கள் எனக்கு இல்லாததினால், நான் நினைக்கிறேன்: "இங்கு இருப்பது..,. கிருஷ்ணர் எங்கே இருக்கிறார்? இது ஒரு கல் ஒரு சிலை." ஆனால் கல்லும் கூட கிருஷ்ணர் தான் என்பதை அவன் அறிய மாட்டான். கல்லும் கூட கிருஷ்ணர் தான், தண்ணீரும் கூட கிருஷ்ணர் தான். நிலமும் கூட கிருஷ்ணர் தான். காற்றும் கூட கிருஷ்ணர் தான். கிருஷ்ணரைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. இதை பக்தனால் பார்க்க முடியும். எனவே அவன் ஒரு கல்லைப் பார்த்தால் கூட கிருஷ்ணரை பார்ப்பான். நாத்திகவாதிகள், "நீங்கள் கல்லை வழிபடுகிறீர்கள்." என்று கூறலாம். ஆனால் அவர்கள் கல்லை வழிபடுவதில்லை; அவர்கள் கிருஷ்ணரை வழிபடுகிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு தெரியும் கிருஷ்ணரைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று. ப்ரேமாஞ்ஜன-ச்சு2ரித-ப4க்தி-விலோசனேன (பி.சம் 5.38). அந்த நிலைக்கு நாம் வர வேண்டும். கல் கிருஷ்ணர் அல்ல என்று நீங்கள் எப்படி கூற முடியும்? கிருஷ்ணரை...., கிருஷ்ணர் கூறிய படி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார்,

பூ4மிர் ஆபோ 'நலோ வாயு:
க2ம்' மனோ பு3த்3தி4ர் ஏவ ச
பி4ன்னா ப்ரக்ரு'திர் அஷ்டதா4
(ப.கீ 7.4)

"அவை என்னுடையவை." இப்போது நான் பேசுவதை போல. நான் பேசிக்கொண்டே இருக்கிறேன், அது பதிவு செய்யப்படுகிறது, மேலும் நாம் அதை ஒலிபரப்புவோம். அப்போது அதே சத்தம் வரும். அப்போது நீங்கள் "இதோ என்னுடைய ஆன்மீக குரு" என்று நினைக்கலாம்..... ஆனால் நான் அங்கே இல்லை. சப்தம் என்னிடமிருந்து வேறுபட்டது. பி4ன்னா. பி4ன்னா என்றால் "பிரிந்தது." ஆனால் ஒலிப்பதிவு, ஒலிபரப்பப்பட்ட உடனேயே அனைவரும் அறிவார்கள், "இதோ பக்தி ஸித்... பக்தி வேதாந்த சுவாமி." இதனை நீங்கள் அறிந்தால். எனவே, கல்வி தேவை. கிருஷ்ணர்....

எனவே, யே யதா2 மாம்' (ப.கீ 4.11)... நீங்கள் எந்த அளவில் கிருஷ்ணரின் சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்கிறீர்களோ, அந்த அளவு நீங்கள் கிருஷ்ணரை உணரலாம்.

ஸேவோன்முகே2 ஹி ஜிஹ்வாதௌ3
ஸ்வயம் ஏவ ஸ்பு2ரத்யத:3
(சை சரி மத்ய 17.136)

எனவே நமது வழிமுறை எளிமையானது. உங்கள் நாக்கை ஈடுபடுத்துங்கள் மற்ற எல்லா புலன்களையும் விட்டு விடுங்கள். நாக்கு மிகவும் வலிமை வாய்ந்தது. மேலும் நாக்கு தான் நம்முடைய கடினமான எதிரி, நாக்கு உங்களுடைய உற்ற தோழனாகவும் முடியும், இந்த நாக்கு. எனவேதான் சாஸ்திரங்கள் கூறுகிறது, ஸேவோன்முகே2 ஹி ஜிஹ்வாதௌ3 உங்கள் நாக்கை மட்டும் பகவானுடைய சேவையில் ஈடுபடுத்துங்கள், அவர் தன்னை வெளிப் படுத்திக் கொள்வார். மிகவும் அருமை . இப்போது என்ன, இந்த நாக்கை வைத்து என்ன செய்வது? நாம் பேசுகிறோம்: கிருஷ்ணரை பற்றி பேசுங்கள். நாம் பாடுவோம்: கிருஷ்ணரைப் பற்றி கீர்த்தனம் செய்யுங்கள். நாம் சாப்பிடுவோம், சுவைப்போம்: கிருஷ்ண பிரசாதத்தை சாப்பிடுங்கள். நீங்கள் கிருஷ்ணரை புரிந்து கொள்வீர்கள். எந்த முட்டாள் மனிதனும், கல்வி கற்றவரும், வாழ்வின் எந்த நிலையில் இருந்தால்கூட நீங்கள் கிருஷ்ணரின் சேவையில் உங்கள் நாக்கை உபயோகப்படுத்தலாம். கிருஷ்ணரால் சாப்பிடப் படாத எதையும் சாப்பிடாதீர்கள் - உங்கள் நாக்கு உங்களுடைய உற்ற தோழனாக ஆகும் கிருஷ்ணரை தவிர வேறு எதையும் பேசாதீர்கள் இந்த இரண்டு கொள்கைகளை கடைப்பிடித்தால் கிருஷ்ணர் உங்கள் பிடியில் இருப்பார் மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜெய, ஹரி போல்.