TA/Prabhupada 1031 - எல்லா உயிர்வாழிகளும், பௌதிக உறையினால் மூடப்பட்டுள்ளன



740628 - Lecture at St. Pascal's Franciscan Seminary - Melbourne

யாரிடமிருந்து எல்லாம் வந்துள்ளதோ, அவரே கடவுள் அல்லது உன்னத உண்மை அல்லது பூரண உண்மை. இதுதான் ஸ்ரீமத் பாகவதத்தின் தொடக்கம் யாரிடமிருந்து எல்லாப் பொருளும் வந்து இருக்கிறதோ அவரே "பூரண உண்மை." இப்போது பூரண உண்மையின் இயல்பு என்ன? "எல்லாம்" என்றால்..... இரண்டு விஷயங்கள் உள்ளன : பௌதிகம் மற்றும் ஆன்மீகம். இரண்டு விஷயங்கள். உதாரணமாக, இந்த மேஜை என்பது ஜடப்பொருள், மேலும் உயிர்வாழிகளாகிய நாம், ஆன்மீகம், ஆன்மீக ஆத்மா. ஜட உடல், ஒரு ஆடையைப் போல என்னை மறைத்துள்ள உறை. நாம் அனைவருமே, ஏதோ ஒருவகையான ஆடையினால் மூடப் பட்டிருக்கிறோம். அதைப் போலவே எல்லா உயிர்வாழியும் பௌதீக உறையினால் மூடப் பட்டிருக்கிறார்கள். ஸ்தூல ஆடை அல்லது கோட், மேலும் சூட்சம ஆடை. இந்த ஸ்தூல ஆடை, ஐந்து ஜட பொருட்களாகிய நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் இவற்றால் ஆனது. மேலும் சூட்சம ஆடை என்பது மனம், புத்தி மற்றும் அகங்காரம்.

எனவே, நாம் ஆன்மீக ஆத்மா, கடவுளின் அங்கத் துணுக்கு. தற்போதைய நேரத்தில், நாம் இரு வகையான உடைகளால் மூடப்பட்டிருக்கிறோம். சூட்சம ஆடையான மனம், புத்தி, அகங்காரம் மற்றும் ஸ்தூல உடை. சூட்சமம் என்றால் - ஒரு விஷயம் இருப்பது நமக்குத் தெரியும், ஆனால் நம்மால் அதனை பார்க்க முடியாது. அதாவது எனக்கு ஒரு மனம் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும், உங்களுக்கு மனம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும் ஆனால் என்னால் உங்கள் மனதை காண முடியவில்லை, நீங்களும் என்னுடைய மனதை காண முடியவில்லை. எனக்குத் தெரியும் உங்களுக்கு புத்தி இருக்கிறது என்று, எனக்கு புத்தி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் நம்மால் அந்த புத்தியை பார்க்க முடிவதில்லை. அதைப்போலவே அடையாளம். நான் என்ற உணர்வு... உங்களுக்கும் உணர்வு இருக்கிறது, எனக்கும் உணர்வு இருக்கிறது, ஆனால் நாம் அதை பார்க்க முடிவதில்லை. எனவே இந்த ஜட கண்களுக்கு புலப்படாத விஷயங்கள், சூட்சமம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஆன்மீக ஆத்மா இன்னும் நுட்பமானது. எனவே மனித வாழ்வு, ஆன்மிக ஆத்மாவையும் பரமாத்மாவையும் புரிந்துகொள்வதற்கானது.