TA/Prabhupada 1032 - தன்னை ஜட சக்தியிலிருந்து ஆன்மீக சக்தியில் பரிமாற்றிக் கொள்வது தான் இந்த முறை



740628 - Lecture at St. Pascal's Franciscan Seminary - Melbourne

தன்னை ஜட சக்தியிலிருந்து ஆன்மீக சக்தியில் பரிமாற்றிக் கொள்வது தான் இந்த முறை மதுத்விசன்: அருள்மிகு பிரபுபாதரிடம் கேள்விகளை கேட்க நீங்கள் ஆவலாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். கேள்விகள் ஏதாவது இருந்தால் நீங்கள் கையை உயர்த்தலாம். நீங்கள் விரும்பினால் இப்பொழுது கேள்விகளை கேட்கலாம். (நீண்ட இடைவேளை) கேள்விகள் இல்லையா? அப்படி என்றால் எல்லோருக்கும் சம்மதம் என்று அர்த்தம். (சிரிப்பு) பிரபுபாதர்: முழு சம்மதம். நல்லது. விருந்தினர் (1): பௌதீக வாழ்விற்கு அப்பால் செல்வது உங்கள் குறிக்கோள் என்று உங்கள் பக்தர்கள் கூறினார்கள். இதை அடைவதற்கான முறை எனக்கு விளங்கவில்லை. இந்த நொய்க்கு அப்பால் சென்ற பிறகு, இறுதியில் முடிவு என்னவென்று எனக்கு சொல்லமுடியுமா? பிரபுபாதர்: என்ன? மதுத்விசன்: கிருஷ்ண பக்தியில், ஐட வாழ்விற்கு அப்பால் செல்வது தான் முறையாகும். கேள்வியின் முதல் பாகம், "அதை செய்வது எப்படி?" அவர் கேள்வியின் இரண்டாம் பாகம், "அந்த முறையை பின்பற்றினால் அதன் முடிவு என்ன?" பிரபுபாதர்: தன்னை ஜட சக்தியிலிருந்து ஆன்மீக சக்தியில் பரிமாற்றிக் கொள்வது தான் இந்த முறை. நாம் சக்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். கடவுளிடம் இரண்டு சக்திகள் உள்ளன - ஜட சக்தி மற்றும் ஆன்மீக சக்தி. நாமும் சக்தி தான். நாம் நடுநிலை சக்தி. நடுநிலை சக்தி என்றால், நாம் ஜட சக்தியின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருக்கலாம் அல்லது ஆன்மீக சக்தியில் இருக்கலாம். இவ்வாறு நாமே தேர்வு செய்யலாம். நடுநிலை... உதாரணமாக கடற்கரையில் நீங்கள் காணலாம் சிலசமயங்களில் கடற்கரை தண்ணீரால் மூடப்பட்டிருக்கிறது மற்றும் சிலசமயங்களில் நிலம் வெளிப்படுகிறது. இது தான் நடுநிலை என்றழைக்கப்படுகிறது. அதுபோலவே நாமும், அதாவது உயிர்வாழீகள், கடவுளின் நடுநிலை சக்தி ஆவோம். ஆக நாம் தண்ணீரில் அதாவது ஜட சக்தியில் முழுகி கிடக்கலாம். அல்லது வெளியே அதாவது ஆன்மீக சக்தியில் இருக்கலாம்.