TA/Prabhupada 1034 - மரணம் என்றால் ஏழு மாதங்கள் உறங்குவது போல் தான். இதுதான் மரணம்



720403 - Lecture SB 01.02.05 - Melbourne

மரணம் என்றால் ஏழு மாதங்கள் உறங்குவது போல் தான். இதுதான் மரணம். நான், நீ, நாம் ஒவ்வொருவரும், இறப்பிலும், பிறப்பிலும் கஷ்டங்களை அனுபவிக்கின்றோம். பிறப்பு மற்றும் இறப்பு. நாம் உயிர்வாழீகள், உயிர்வாழும் ஆன்மாக்கள். பிறப்பும் இறப்பும் இந்த உடலை சார்ந்தது. இந்த உடல் பிறக்கிறது மற்றும் இந்த உடல் மரணம் அடைகிறது. மரணம் என்றால் ஏழு மாதங்கள் உறங்குவது போல் தான். இதுதான் மரணம். ஆன்மா... இந்த உடல் வாழ்வதற்கு தகுதியற்றதாகும்பொழுது, ஆன்மா இந்த உடலை விட்டுவிடுகிறது. மற்றும் தைவீக அமைப்பினால் இந்த ஆன்மா மீண்டும் ஒரு குறிப்பிட்ட தாயின் கருவில் வைக்கப்படுகிறது, பிறகு அந்த ஆன்மா அத்தகைய உடலை உருவாக்குகிறது. ஏழு மாதங்கள் வரை ஆன்மா மயக்க நிலையில் இருக்கிறது. மற்றும் உடல் வளர்ந்த பிறகு, மயக்கம் தெளிந்து அந்த குழந்தை கருவிலிருந்து வெளியேறுவதற்கு நகருகிறது. ஒவ்வொரு தாய்க்கும், ஏழு மாதங்களில் கருவில் அசையும் குழந்தையின் அனுபவம் உண்டு. ஆக இது ஒரு மிக பெரிய விஞ்ஞானம், எவ்வாறு ஒரு உயிர்வாழும் ஆன்மா இந்த ஜட உடலின் தொடர்பில் வந்து, மற்றும் எவ்வாறு ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு இடம் மாற்றம் செய்கிறது என்பது. ஒரு உதாரணம் வழங்கப்பட்டிருக்கிறது, வாஸாம்ஸி ஜ்ர்னானி யதா விஹாய (பகவத்-கீதை 2.22) நம் ஆடைகளைப் போல் தான், நம் சட்டை மிகவும் பழையதாகிவிட்டால், நாம் அதை விட்டுவிட்டு மற்றொரு சட்டையை ஏற்றுக்கொள்கிறோம். அதுபோலவே, நான், நீ, நாம் ஒவ்வொருவரும் ஆன்மா. ஜட இயற்கையின் அமைப்பால் நமக்கு குறிப்பிட்ட உடல், சட்டை, வழங்கப்படுகிறது. ப்ரக்ருதே: க்ரியமாணானி குணை: கர்மாணி ஸர்வஷ: (பகவத்-கீதை 3.27). நம் வாழ்க்கையின் தரத்தின்படி நமக்கு குறிப்பிட்ட உடல் வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய மக்களான உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட உடல் கிடைத்திருக்கிறது, மற்றும் குறிப்பிட்ட வாழ்க்கையின் தரத்தை அனுபவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு இந்தியன் உங்கள் ஐரோப்பிய, அமெரிக்க ஆஸ்திரேலிய, மெல்போர்ன் போன்ற நகரங்களுக்கு வந்தால்... நான் என் சிஷ்யர்களிடம் சமீபத்தில் தான் பேசிக்கொண்டிருந்தேன், "இந்தியர் யாரும் இங்கு வந்தால், அவர்கள் இந்த வாழ்க்கை தரத்தைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள்."